Pages

Tuesday, 8 May 2012

உயிர்



அன்று வெள்ளி கிழமை இரவு egmore ரயில்வே ஸ்டேஷன் வழக்கத்தை விட மிக பரபரப்பாக இருந்தது .. சுதந்திர தின விடுமுரயை சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் , வலகமான கூட்டதுடன் சேர்ந்து வெளி ஊரிலிருந்து வந்து சென்னயில் வேலை செய்பவர்களும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல வந்திருந்தனர் ..... சென்னை to மதுரை express புரபட்டது .. Unreservedil செல்பவர்கள் டிரைன் பெட்டிகளின் கதவுகளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர் ...
அங்கு இருந்த s6 பெட்டியிள் இரண்டு வயதான தம்பதிகள் தங்கள் வீட்டிலிருந்து கட்டி வந்த இட்லியை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .. பக்கதில் உட்காந்திருந்த இளைங்கனிடம் எனக்கு upper berth குடுதிருக்காங்கபா என்னால ஏற முடியாது நீ மேல படுதுகிரியாபா என்று கேட்டார் சரி என்பதுபோல் அவன் தலை அசைதான்.. அந்த இளைங்கனின் ஃபோன் ஒலித்தது எடுத்து பேசியவன் டிக்கெட் கெடச்சிருச்சு காலைல வந்திருவேன் என்று கூறினான் அவனுடய முகம் வாடி இருந்தது வெகுநேரம் அழுது கொண்டிருந்தது போன்று தோன்றியது எழுந்து bath roomuku சென்றான் ..
ஒரு 7 வயது பய்யன் அவனுடய அப்பாவிடம் நான்தான் மேல படுப்பேன் என்று அடம் பிடித்து கொண்டிருந்தான் . அவனுடய அம்மா நீ தூங்கிக்கிட்டே கீழ விழுந்துருவ நீ middle berthla படுத்துக்கோ அம்மா lower berthla படுத்துகிறேன் சரியா என்றால் .. ஆனால் அந்த சிறுவன் நான்தான் upper berthil படுப்பேன் என்று கத்தி அளதொடன்கினான்.. அவனுடைய தந்தை அவனிடம் நீ அடம்பிடிக்காம இருந்தா உனக்கு நீ கேட்ட மாதிரி சைக்கிள் வாங்கிதரேன் என்றான் இதை கேட்ட அந்த சிறுவன் முகம் மலர்ந்தது கண்டிப்பா வாங்கிதரின்களா என்றான் .. நிச்சயமா நீ இப்ப middle berthla ஏறி படுத்து தூங்கு என்றான் ..


அந்த சிறுவனும் சந்தோஷமாக middle berthil ஏறி படுத்து கொண்டான் . இதை பார்த்து சிரித்து கொண்டிருந்த பெரியவர் இப்பலாம் குழந்தைங்களுக்கு கூட லஞ்சம் குடுத்தாதான் வேலை நடக்குது என்றார் .. அந்த சிறுவனின் தந்தையும் சிரித்து கொண்டே என்ன பண்றது சார் இந்த காலத்து பசங்க நம்மள விட விவரமா இருக்காங்க .. அந்த பெரியவரின் மனைவி அந்த சிறுவனின் அம்மாவிடம் மதுரைக்கா போறீங்க? என்றால் .. இல்ல திருச்சில எங்க அப்பா வீட்டுக்கு போறோம் நீங்க மதுரைக்கு போறிங்களா என்று கேட்டால் .. ஆமா ஊர்ல ஒரு வீடு வாங்கி இருக்கோம் அதான் க்ரஹா பிரவேஷம் பண்றதுக்கு போறோம் .. சென்னைல வாங்காம ஏன் அங்க வாங்கிருகிங்க என்றால் .. கடைசி பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடுஞ்சபுரம் சொந்த ஊரு மதுரைக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டோம் , பிளைபுகாக சென்னைக்கு வந்தோம் எல்லாம் நல்லபடியா முடுஞ்சுச்சு அதான் நிம்மதியா சொந்த ஊர்லையே வீடு வாங்கி அமைதியா கடைசி காலத்துல இருக்கலாம்னு வாங்கினோம் என்றால் அந்த வயதானவள் ..
பாத்ரூமிலிருந்து வெளிய வந்த அந்த இளைஞன் upper berthil ஏறி படுத்து கொண்டான் .. எதிரில் ஒரு இளம் வயது கணவனும் மனைவியும் அமைதியாக இவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்தனர் இருவர் முகத்திலும் ஒரு விதமான மௌனம் , அவன் தன்னுடைய மனைவியிடம் சூட் கேஸ் சாவி எந்த bagla இருக்கு என்றான் .. தெரியாது நீங்கதான பூட்டுநிங்க என்ன கேட்டால் எனக்கு எப்படி தெரியும் என்று ஜன்னலில் வெளியே பார்த்து கொண்டே சொன்னால் .. எவ்ளோவ் திமிருடி உனக்கு என்று அவன் மனதில் தோன்றியது பொது இடம் என்பதால் எதுவும் பேசாமல் மற்ற bagilum தேடி கொண்டே இருந்தான் .. சிறிது நேரம் கழித்து அவள் சாவி உங்களோட laptop bagla இருக்குனு நினைக்கிறன் என்றால் ..
Laptop bagil சாவி இருந்தது .. அவளை முறைதான் தெரிஞ்சு வச்சுகிட்டே இவ்ளோவ் நேரம் சொல்லாம இருந்திருக்கிறாள் என்று நினைத்தான் ஊரிலிருந்து திரும்பியதும் இவளுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைத்தான் .. அத்தைக்கு போன் போட்டு மாத்திரைய beduku கீழ வசிருகேனு சொல்லுங்க என்றால் .. ரொம்ப நடிகாதடி அதெல்லாம் அவங்களுக்கு தெரியும் என்றான் .. அவள் கோபத்துடன் எதுவும் பேசாமல் வெளியே பார்த்தல் .. ஏதாவது சாப்பிட வேணுமான்னு அவளிடம் கேட்டான் .. அவள் எதுவும் சொல்லாமல் வெளியே பார்த்து கொண்டே இருந்தால் .. அவன் கோபத்துடன் எழுந்து மேல் berthil ஏறி படுத்து கொண்டான் .. மற்றவர்களும் அவரவர் இடத்தில ஏறி படுத்து கொண்டனர் ...................................... ………………………………….
Middle berthil படுத்திருந்த அந்த சிறுவன் தன்னுடைய தந்தையிடம் கண்டிப்பா வாங்கி தரின்களா என்று மறுபடியும் கேட்டான் .. அவர் சரி என்று மறுபடியும் சொல்வதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் . அவன் தன்னுடைய தந்தையிடம் 6 மாசமாக சைக்கிள் வாங்கிதர சொல்லி கேட்டு கொண்டிருக்கிறான் .. பக்கத்துக்கு வீட்டில் இருந்த சுரேஷ் இவனை விட 2 வயது பெரியவன் 6 மாசத்துக்கு முன்னாடி சைக்கிள் வாங்கினான் தினமும் மாலை அந்த தெருவை cycleile சுற்றி வருவான் .. அதை பார்த்ததிலிருந்து இவனுக்கும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்தது .. இவனுடைய கனவு எப்படியாவது சைக்கிள் வாங்கி மழை காலத்தில் ரோட்டில் தேங்கி இருக்கும் மழைநீர் மேல் சைக்கிளில் வேகமாக சென்று தண்ணீரை பீச்சி அடிக்க வேண்டும் என்பதுதான் அந்த கனவு .. தன்னுடைய கனவு நிறைவேற போவதை நினைத்து அந்த சிறுவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி .. அந்த கனவை அவன் மனதில் மறுபடியும் ஓடவிட்டான் .. அந்த கனவை கண்டுகொண்டே தூங்கிவிட்டான்...............................................
அந்த சிறுவனின் குறும்புகளை பார்த்து கொண்டிருந்த அந்த வயதானவரின் மனைவிக்கு தன்னுடைய மூத்த மகளின் குழந்தையின் நினைவு வந்தது ,
எல்லாருக்கும் முதல் குழந்தையோ பேரனோ பிறக்கும்போது அந்த சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது ,தன்னை பாட்டி என்று அழைக்க ஒருவன் வந்து விட்டான் என்று மனதிற்குள் நெகிழ்ந்தால் ஆனால் அந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை .. அவளுடைய பேரனுக்கு பேச்சு வரவில்லை .. அதற்கு முன்பு வரை அவள் மகளின் மாமனார் மாமியாரும் அவளை தங்களுடைய மகளை போன்று நினைத்தனர் , வருடங்கள் நகர நகர அவர்கள் இவளுடைய மகளை வெறுக்க ஆரம்பித்தனர் , என்ன செய்தாலும் குத்தம் சொன்னார்கள் .. இப்பொழுது தன்னுடைய கடைசி பெண்ணுக்கு மூத்த பெண்ணை விட அதிக நகை செய்வது தெரிந்து அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சினால் .. தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்யும்போது அவ்வளவு வசதி இல்லை ஆனால் இப்போலோது கொஞ்சம் பரவாஇல்லை மாபிள்ளையும் பெரிய இடம் அதனால் கொஞ்சம் அதிகமாக செய்ய ஒப்புகொண்டோம் .. தன்னுடைய மகளை அவர்கள் என்ன கொடுமை செய்கிறார்களோ எப்படியாவது தன்னுடைய மூத்த மகளுக்கும் இவளுக்கு செய்வதை போன்று செய்து விட வேண்டும் என்று நினைத்தால் .. நாளை காலை தன்னுடைய கணவரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தால் . நாம இருக்கும்போதே செய்தால்தான் உண்டு என்று நினைதுகுண்டே உறங்கிவிட்டாள் ..... ………………………………………………………….


அந்த சிறுவனின் அம்மாவுக்கு இந்த வயதான தம்பதிகளை பார்த்ததும் தன்னுடைய அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது .. 3 வருடங்கள் கழித்து இப்போலோதுதான் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறாள் .. என்னதான் புருஷன் வீட்ல சந்தோஷமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அவங்களோட பிறந்த வீட்டுக்கு போறதுனா அது தனி சந்தோஷம் .. கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆனாலும் சரி 20 வருஷம் ஆனாலும் சரி பொண்ணுங்களுக்கு அவங்க பொறந்த வீட்டுக்கு போறப்ப அவங்களோட சின்ன வயசுக்கே போய்டுவாங்க .. தன்னோட கணவருடைய தந்தைக்கு உடம்பு சரி இல்லாததால் 3 வருஷமா பிறந்த வீடுகே போகல , இப்ப அண்ணன் குழந்தைங்க காது குத்துக்கு கண்டிப்பா வர சொன்ன்னால போயிடு இருக்கோம் .. அக்காலாம் நேத்தே வந்திருப்பா நான்தான் கடைசியா போறேன் என்ன பண்றது திருச்சி என்ன அவ்ளோவ் பக்கமா இருக்கு .. அப்பா அம்மா அண்ணன் அண்ணி அக்கா மாமா தம்பி அவங்களோட பசங்க இவங்கலாம் பாத்து எவ்ளோவ் நாளாச்சு .. சின்ன வயசுல ஒரே வீட்ல இருந்தோம் அப்ப அடிகடி சண்டை போட்டு கிட்டு பேசாம பல நாள் இருந்திருப்போம் ஆனால் இப்ப அவங்கள பாக்கணும் நிம்மதியா ஒரு நாள் பூரா பேசணும்னு எவ்ளோவ் ஆசையா இருக்கு ... அபலாம் வீட்ல current போயடுசுனா எல்லாரும் வீடு வாசல்ல உக்காந்து நிலா வெளிச்சத்துல உக்காந்து சாப்டது .. வண்டி கட்டிக்கிட்டு பக்கத்துக்கு ஊர்ல இருக்க குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க போனது .. தோட்டத்துல எல்லாரும் சேந்து மல்லி பூ பரிசது .. ஆத்துல குளுசது .. எவ்ளோவ் சந்தோஷமா இருந்தோம் .. நாளைக்கு காலைல அவங்களாம் பாக்க போறோம்னு நெனச்சு தன்னோட வயதே மறந்து குழந்தை மாதிரி சிரித்தால் .. அந்த பழைய நாட்களை நினைத்து கொண்டே தூங்கினால் ..... ………………………………………………………….
அந்த வயாதானவர்தான் முதல் முதலில் ஊரிலிருந்து trainil வந்ததை நினைத்து பார்த்தார் .. கிராமத்தில் பிழைக்க வழி இல்லாமல் , ட்ரெயினில் சென்னயில் துணி கடையில் வேளைக்கு வந்து சேர்ந்தேன் .. 8 வருஷம் அந்த கடைல இருந்து எல்லா வேலையும் கத்துகிட்டேன் .. அப்பறம் வீடு வீடா துணிய கொண்டு போய் வித்தேன் .. நடந்தே எவ்ளோவ் தூரம் போயிருக்கேன் இப்ப பக்கத்துக்கு தெருக்கு கூட கார்ல போறோம் .. அம்பத்தூர் பஸ் ஸ்டாப்ல ஒரு சின்ன கடைய வாடகைக்கு எடுக்கலாம்னு முடிவு பண்ணுனேன் .. அது வரைக்கும் சம்பாதிச்ச எல்லா பணத்தையும் குடுத்து அந்த கடைய வாடகைக்கு எடுத்தேன் , அம்பத்தூர் மக்கள் என்ன கை விடல கொஞ்சம் கொஞ்சமா முன்னேருனேன் .. இப்ப அம்பதுர்லையே என்னோட கடைதான் பெருசு .. ராஜா textiles அம்பதுற்கே ஒரு அடையாலமாச்சு .. அதை நினைக்கும்போதே அவர் முகத்தில் ஒரு பெருமிதம் .. மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடுசுடேன் .. ரெண்டு பசங்களும் இப்ப கடைய பாதுகுறாங்க . கடைசி பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் முடுச்சிட்டா போதும் மறுபடியும் சொந்த ஊருக்கே போய் கடைசி காலத்த முடுசிடுவேன் .. கடைசி பொண்ணு கல்யாணத மட்டும் நல்லபடியா நடதிகோடு முருகா இதுக்குமேல நா என்னோட வாழ்க்கைல உங்கிட்ட வேற எதுவும் கேட்க மாட்டேன் என்று வேண்டிவிட்டு தூங்கினான்.............................................................
அந்த சிறுவனின் தந்தை மிகவும் குழப்பத்துடன் இருந்தார் . கடந்த இரண்டு வாரங்களாக யோசித்து கொண்டே இருக்கிறார் .. கடந்த 3 வருடமாக அவருடைய தந்தைக்கு உடல் நிலை மோசமாக உள்ளது இப்படியே போனால் இன்னும் ஒரு 3 மாசதுகுதான் முடியும் ஆபரேஷன் பண்ணி கட்டிய எடுத்தா இன்னும் சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் அதுக்கு அவர் உடம்பு தாங்குமான்னு தெரியல operationku 2 லட்சமாச்சு வேணும் .. யோசிச்சு சொல்லுங்க என்று டாக்டர் சொன்னார் . அதை கேட்டதிலிருந்து அவர் குழப்பத்திலே இருக்கிறார் .. வயசாகிடுச்சு இதுக்குமேல ஆபரேஷன் செஞ்சு நா என்ன பண்ண போறேன் இருக்குற வரைக்கும் இருந்துட்டு போறேன் நீ தேவ இல்லாம பணத்த வீணடிக்காத என்று அவருடைய தந்தை சொன்னது அவர் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது .. சொந்த காரங்க நண்பர்கள் எல்லாரும் எங்க அப்பா சொன்ன மாதிரிதான் சொல்றாங்க .. ஆனால் ஆபரேஷன் செஞ்சா சில வருஷங்கள் நல்லா வால்றதுக்கு சான்ஸ் இருக்கு .. இரண்டு வாரங்களாக இரவு தூங்காமல் ஒரு முடிவு எடுக்க முடியாமல் யோசித்து கொண்டே இருந்தான் .. ஒரு வேலை அவர் இறந்த பின்பு ஆபரேஷன் செய்திருந்தால் அவர் நம்முடன் இருந்திருப்பார் நாம் தான் பணத்துக்காக கொன்று விட்டோமோ என்ற நினைப்பு நம் மனதுக்குள் வந்து விட்டால் அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீளவே முடியாது .. ஆபரேஷன் செய்து விடுவோம் நல்லபடியாக நடந்தால் அவர் என்னுடன் சில வருடங்கள் வாழ்வாரே .. தப்பாக ஏதாவது நடந்தாலும் நம்மால முடுஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சோம்னு ஒரு திருப்தி இருக்கும் . 2 லட்சம் ஆபீஸ் லோன் போட்டு வாங்கிக்கலாம் .. காசு எப்ப வேணும்னாலும் சம்பதுசுகலாம் இப்ப விட்டா எங்க அப்பாவோட நா மறுபடியும் வாழ முடியாது . ஒரே முடிவாக ஆபரேஷன் செய்து விடலாம் என்று முடிவு செய்தான் .. இரண்டு வாரம் கழித்து இன்றுதான் அவருக்கு தூக்கம் வந்தது நிம்மதியாக தூங்கினார் .........,.,..........................................................................
சைடில் இருந்த மேல் பெர்த்திலும் கீழ் பெர்த்திலும் அந்த இளம் தம்பதியினர் படுத்திருந்தனர் ... அவனுக்கு இன்னும் அவள் மேல் இருந்த கோபம் அடங்கவில்லை .. அவளை ஓங்கி அறைய வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது ..
அவனுடைய செல் போனிலிருந்து r u there? Nu மெசேஜ் செஞ்சான் .
Msg சவுண்ட் கேட்டு போனை எடுத்து பார்த்தல் ..Messaga தப்பா எனக்கு மாத்தி அமுச்சிடியா ? இந்த நேரத்துல எவளுக்கு r u there ? நு மெசேஜ் பண்ற என்று அவனுக்கு மெசேஜ் செய்தால் ..
அதை படித்த அவனுக்கு மேலும் கோபம் அதிகமானது இது மட்டும் public place இல்லாம வீடா இருந்துச்சுனா உன்ன அறைஞ்சிருப்பேன் என்று msg செய்தான் ...
உனக்கு வேற என்ன தெரியும் எப்பவும் நீ அடுச்சா வாங்கிகிடே இருப்பேனு நினைக்காத , பொண்டாட்டிய கை நீட்டி அடுச்சா வீரனு நெனப்பா ?. என்ன பிடிகலேனா எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற என்று மெசேஜ் அனுப்பினால் ..
Oh அப்ப நீ என்ன திருப்பி அடிபியாடி அங்கேயே உன்ன கொன்றுவேன் , காலைலேயே என்கிட்டே வாங்கிருப்ப எங்க அப்பா அம்மா இருந்தனால தப்புசிட்ட , உனக்கு என்னடி அவ்ளோவ் திமிரு ? என்று மெசேஜ் செய்தான் ...
எனக்கு திமிரா இல்ல உனக்கா ?, உனக்குதான் பொம்பளைனா ஆம்பளைக்கு அடங்கி போனும்னு நெனப்பு .. Male shovanist.. எங்க அப்பா வீட்டுக்கு போனும்னு சொன்னது தப்பா ? என்று மெசேஜ் செய்தால் ..
ஆமாம் நா male shovenistdhaan.. போன மாசம்தான உங்க அப்பா வீட்டுக்கு போனோம் அதுக்குள்ள என்ன ?.. எனக்கு ஆபீஸ்ல வேலை இல்லன்னு நெனச்சியா ? என்று மெசேஜ் செய்தான் .. நானும்தான் ஆபீஸ்கு போறேன் ஆகஸ்ட் 15thla எந்த ஆபீஸ் இருக்கு , நா மட்டும் உங்க அப்பா அம்மாவை என்னோட அப்பா அம்மாவை நினைக்கிறன் ஆனா நீ அப்படி நினைக்க மாடிகிர .. லவ் பண்றப சொன்னதெல்லாம் மறந்துட்டியா ?.. என்று மெசேஜ் செய்தால் .
நா எதையும் மரகல , உனக்குதான் வேலைக்கு போறோம்னு திமிரு , அடுத்த மாசம் உங்க அப்பாவ பொய் பாத்தா என்ன ? என்று மெசேஜ் செய்தான் ..
உனக்கு இதெல்லாம் புரியாது பொண்ணா இருந்ததான் தெரியும் என்று மெசேஜ் செய்தால் ..
அவனுடைய போன் ரிங்க்டோன் ஒலித்தது அவனுடைய அப்பா போன் செய்திருந்தார் .. Train எறிடியா என்று கேட்டார் ? ஏறியாச்சு என்றான் .. சரி அவ கூட சண்ட போடாதடா கல்யாணம் ஆன புதுசுல பொண்ணுங்க அடிகடி அவங்க அப்பா வீட்டுக்கு poganumnu சொல்லத்தான் செய்வாங்க இவ்ளோவ் வருஷம் வேற ஒரு வீட்டுல வாழ்ந்துட்டு இப்ப இங்க வாழ்றது கஷ்டம்தான், நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் , பொண்ணுங்க ரொம்ப sensitive, சண்ட போடாம ஒழுங்கா போயிடு வா, போய் சேந்தபுரம் போன் பண்ணு என்று சொல்லி விட்டு போனை கட் செய்தார் ..
யாரு போன்ல என்று ? அவள் மெசேஜ் செய்தால் ..
யாரா இருந்தா உனக்கென்ன? என்றான் .. சிறிது நேரம் கழித்து அப்பா போன் பண்ணார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..
என்ன பதிலே கானம் என்று மெசேஜ் செய்தான் .. Reply வராததால் .. போனில் இருந்த torch lightai அவள் முகத்தில் அடித்து பார்த்தான் முழித்து கொண்டுதான் இருந்தால் .. அவள் பார்த்ததும் போன் பிளாஷ் lightai off செய்தான் ..
சிறிது நேரம் கழித்து போன்ல என்ன சொன்னார் ? என்று மெசேஜ் செய்தால் .
உன்ன உங்க அப்பா வீட்டுலே விட்டுட்டு வர சொல்லிட்டார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..
மறுபடியும் phone lightai அடித்து பார்த்தான் அவள் அழுது கொண்டிருந்தால் ..
சும்மா சொன்னேன் உன்னோட சண்ட போடா வேணாம்னு சொன்னாரு என்று மெசேஜ் செய்தான் ... என்ன இப்ப உனக்கு பிடிக்க மாடிகிதுல லவ் பண்றப என்னலாம் சொன்ன இப்பதான் தெரியுது நீ என்னை லவ் பண்ணவே இல்லன்னு .. இப்பவும் சொல்றேன் நா உன்ன லவ் பண்றேன் ஆனா உனக்கு பிடிகலனா பரவா இல்ல , diverse பண்ணிட்டு வேற யாரையாச்சு கல்யாணம் பண்ணிக்கோ . என்று மெசேஜ் செய்தால் ..
சும்மதாண்டி சொன்னேன் இப்ப எதுக்கு இவ்ளோவ் scene போடுற , அழுது என்னோட மானத்த வாங்காத .. நான்தான் இப்ப உன்னோட அப்பா வீட்டுக்கு வரேன்ல .வேற என்ன உனக்கு பிரச்சன . என்று மெசேஜ் செய்தான் ..
அவளிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை ஆனால் அவள் அழுது கொண்டுதான் இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது ..
Sorry dont crynu type பண்ணி ஒரு பத்துவாட்டி மெசேஜ் செஞ்சான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..
Sorry இனிமேல் இந்த மாதிரி நடக்காது . உங்க அப்பவ பாக்க எப்ப வேணும்னாலும் போலாம் .. 7 ஜென்மதுளையும் உன்னையே நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா இப்படி அழுது மட்டும் என்ன சாவடிகாதடி வேணும்னா ஒருவாட்டி கன்னத்துல கூட அரஞ்சுகோ ..... i love u ... என்று மெசேஜ் செய்தான் ..
சிறிது நேரம் கழித்து OK என்று ஒரு மெசேஜ் அவளிடம் இருந்து வந்தது .. Ok na என்ன ? லவ் பண்றியா இல்லையான்னு சொல்றி என்று மெசேஜ் செய்தான் ...
அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .. மறுபடியும் போன் lightai அவள் முகத்தில் அடிதான் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சிரித்தால் சத்தமில்லாமல் i love u என்று வாயசைத்தால் , இவனும் சிரித்துவிட்டான் ... பக்கத்தில் upper berthil இருந்த அந்த இளைஞன் இறங்கி bath roomku சென்றான் .. அவன் இறங்குவதை பார்த்ததும் phone lightai off செய்து விட்டு தூங்குவது போல் நடித்தான் .. Ok மீதி காலைல நேர்ல பேசிக்கலாம் good night என்று மெசேஜ் செய்தான் .. good night என்று இவளும் மெசேஜ் செய்தால் .. இருவரும் மகிழ்ச்சியாக தூங்க தொடங்கினார்கள் ........... ……………………..
அந்த இளைஞன் முகத்தை கழுவி விட்டு கதவை திறந்து வெளியே பார்த்து கொண்டே வந்தான் .. தன்னுடைய போனை எடுத்து பார்த்தான் contacts il முதல் no. Amma என்று இருந்தது அதை பார்த்த உடன் அடக்க முடியாமல் கதறி அழுதான் இனி தினமும் போன் செய்து சாப்டியா எப்டி இருக்க என்று கேட்க அம்மா இல்லையே என்று துடித்தான் .. இன்று மதியம் அவனுடைய போனுக்கு அவனுடைய மாமா போன் செய்து அவனுடைய அம்மா மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக கூறினார் .. கேட்ட அடுத்த நொடி அவன் அதை தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்தான் ... அவனுடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர் .. நடந்தது கனவாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும்போதே அவனுடைய மாமாவிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது அவனுடைய நண்பர் வாங்கி பேசினான் .. அவனுடைய மாமா சொன்னதை கேட்டு அவனுடைய நண்பனும் அதிர்ச்சி அடைந்தான் .. நட்பது கனவு இல்லை என்று உணர்ந்த அவன் இந்த உலகையே வெறுத்து அழுது துடித்தான் .. தன்னுடைய வயது 22 ஒரு companyil வேலை பார்க்கிறோம் என்று அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை அழுது துடித்து மயக்கம் அடைந்தான் .. அந்த companyin மேனேஜர் முயற்சியில் இந்த train ticketai வாங்கினார் .. இனி இந்த உலகில் எனக்காக கவலை பட யாருமில்லை என்று நினைத்தான் .. அழுது அழுது அவனது கண்ணீர் தீர்ந்தது .. உயிரோடு இருக்கும்போதே இதயத்தை வெளியே எடுக்கும் மரண வேதனயான தருணங்கள் .. இந்த உலகத்தில் காதல் கடவுள் என அனைத்தையும் விட தலை சிறந்தது அம்மா .. அவனுடைய அம்மாவுக்கு அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் ஆசை .. இப்பொழுதுதான் வேலைக்கு சேந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அம்மாவையும் இங்கு கூட்டி வர வேண்டும் என நினைத்தான் .. Beachai காட்ட வேண்டும் சென்னையை சுற்றி காட்ட வேண்டும் என பல கனவுகள் கண்டான் .. இனி இந்த உலகத்தில் எனக்கென்று யார் இருக்கிறார் என்று நினைக்கும்போது அம்மாவை தன்னிடமிருந்து பிரித்த அந்த கடவுளை கொள்ள வேண்டும் இந்த trainil இருந்து கீழே குதித்து செத்து விட வேண்டும் என்று அவன் அழுது துடித்தான் . பக்கத்தில் இருந்த வரைக்கும் பெரிதாக தெரிய வில்ல ஆனால் இப்போலோது அம்மா இனி இல்லை அழுதால் ஆறுதல் சொல்லவும் ஆளில்லை வென்றால் பெருமிதம் கொள்ளவும் யாருமில்லை .. இனி யாருக்காக வாழ போகிறேன் ...
அம்மா உங்கள நா மறுபடியும் பாக்க முடியுமா எவ்ளோவ் தப்பு செஞ்சாலும் மன்னிசிருவியே , நீ சொல்லி கேட்காம செஞ்ச எந்த விஷயமும் நல்லபடியா முடுஞ்சதிள்ள ... எனக்கு உங்கள இவ்ளோவ் பிடிகும்னாச்சு உங்களுக்கு தெரியுமா .. உங்க கூட இருந்த வரைக்கும் நா ஒரு நாள் கூட பாசமா பேசுனதில்ல அப்படி நீ பேசுனா மொக்கைனு கூட சொல்லி இருக்கேன் .. இனி உன்னோட பேசவே முடியாதுள உன்ன கடைசியா ஒரு வாட்டி பாக்கணும் நா என்னோட கடமைய உனக்கு செஞ்சே ஆகணும் என்று கண்ணீர் விட்டு தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான் ....................................................................................................


அடுத்தநாள் காலையில் அனைத்து நாளிதழ்களின் தலைப்பு செய்திகளும் இதுதான் ..
"சென்னை TO மதுரை EXPRESSIL குண்டு வெடிப்பு 50 கும் மேற்பட்டவர்கள் பலி "
S6 பெட்டியில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாக எழுதி இறந்தது ... இந்த குண்டு வெடிப்பை செய்தது நாங்கள்தான் என்று ஒரு தீவிரவாத இயக்கம் மாருதட்டி கொண்டது .. அதில் அவர்களுக்கு என்ன பெருமை .. அதில் இறந்தவர்களில் முக்கால் வாசி மக்களுக்கு இப்படி ஒரு தீவிரவாத இயக்கம் இருபதே தெரியாது .. இவர்களை கொன்று அவர்கள் என்ன சாதித்துள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கேவலமான செயலை செய்து விட்டு அதை செய்தது தாம்தான் என்பது மன்னிக்க முடியாத குற்றம் .. அனைத்து கட்சியினரும் கண்டனம் மட்டும் தெரிவித்தனர் .. நாளிதழில் தலைப்பு செய்தியை படித்து பரிதாபப்பட்ட சிலரும் நாளிதழின் 4 வது பக்கத்தில் "பிரபல நடிகை திருப்பதியில் திடீர் கல்யாணம் " என்று போடிருபதை பார்த்து விட்டு இந்த செய்தியை மறந்துவிட்டு அந்த நடிகையின் செய்தியை பற்றி பேச தொடங்கிவிட்டனர் ... நடிகர் கமல் சொல்வதுபோல் இந்தியாவின் தேசிய நோய் உண்மையிலே மறதிதான்.
காவல்துறை சிலரை கைது செய்தது .. ஆனால் யார் மீதும் குற்றம் நிரூபிக்க படவில்லை .. இறந்தவர்கள் அனைவரும் எந்த தவறும் செய்யாத சாதாரண மக்கள் ... இதுவே ஒரு மினிஸ்டரோ கிரிக்கேடேரோ சினிமா ஸ்டாரோ அந்த குண்டு வெடிப்பில் இறந்திருந்தால் இந்தியாவே அதிர்ந்திருக்கும் மக்களும் கொதிபடைந்திருபார்கள் , எதிர் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக பல போராட்டங்களை நடத்தி இருக்கும் .. ஆனால் இறந்தது சாதாரன வெகு ஜன மக்கள்தானே .. அதில் இறந்த 50 உயிருக்கும் மதிப்பில்லை .. உயிர் என்பது சாதாரண மக்களுக்கும் சினிமா ஸ்டார்கும் கிரிக்கேடேற்கும் ministerku எல்லாத்துக்கும் பொதுதானே பிறகு ஏன் இந்த பாரபட்சம் .. தான் ஏன் இறந்தோம் என்று தெரியாமலே அந்த 50 உயிர்களும் இறந்துள்ளது .. அங்கு இறந்தது அந்த 40per மட்டுமல்ல அவர்குலடைய ஆசை , கனவு , லட்சியம் அவர்களையே நம்பி இருந்த குடும்பங்களும்தான் .. உயிர் என்பது அனைவருக்கு ஒன்றுதான் ... நாளை இதே நிலைமை இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் , ஏற்கனவே நம்மை கொள்ள பல bacteriavum virusum சுதிகொண்டுள்ளது இது மட்டுமில்லாம இயற்கை அசம்பாவிதங்கள் வேறு இவர்கள் அனைவரிடமிருந்து தப்பித்தால் கொள்வதற்கு பெயர் தெரியாத பல தீவிரவாத கூடங்கள் இருக்கின்றன புதிதாக முளைக்கவும் செய்யும் ..
இப்படி நம்மை சுற்றி எங்கும் கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது நாம் ஏன் மற்றவர்கள் மீது பொறாமையோ கால்புனற்சியோ வளதுகொள்ள வேண்டும் …வாழ போகும் சிறு காலத்தை நிம்மதியாக வாழ்ந்து விட்டு செல்வோமே 


1 comment: