Pages

Tuesday, 8 May 2012

இது ஒரு பொன்மாலை பொழுது



அன்று மாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாபில் 65B பஸ் வந்து நின்றது .. நாலாபுரதிலிருந்தும் மக்கள் சீட்டை பிடிபதுற்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் .. பஸ்ஸில் இருந்தவர்களை இறங்க விடாமல் அவசரம் அவசரமாக மக்கள் எறி சீட்டை பிடித்து கொண்டிருந்தனர் .. சிலர் பைகலயும் கர்சீபுகலயும் ஜன்னல் வழியாக போட்டு சீட்டை பிடிதுகொண்டிருந்தனர் .. இதை பக்கத்து பஸில் ஜன்னல் சீட்டில் உட்காந்து பார்த்து கொண்டிருந்த எனக்கு என் அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது எடுதவுடன் என்ன ஆச்சு நு கேட்டாங்க ? ஆப்டிடியூட் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டேன் நாளைக்கு காலைலதான் HR இன்டர்வியூ நு சொன்னேன் .. சரி இப்ப எங்க இருகனு கேட்டாங்க .? . இப்பதான் பூந்தமல்லிக்கே வந்தேன் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னேன் . சரி வா நு சொல்லிட்டு போன வச்சாங்க.... ஒரு வயதானவர் கை கால்கள் நடுங்க பஸ்ஸில் ஏறி அனைவரிடமும் பிச்சை கேட்டு கொண்டிருந்தார் .. சிலர் ஒரு ரூபாய்யோ ரெண்டு ரூபாய்யோ சில்லரயா தந்தனர் ,சிலர் இல்லை என்று தலை ஆடினார் , சிலர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டே இவரை பார்க்காததுபோல் நடிதனர் .. என்னிடம் வந்து கேட்டார் இல்லை என்று தலை ஆடினேன் .. எனக்கு பின்னாடி சீட்ல இருந்த இருவரிடம் போயி கேட்டார் ஒருவர் 2 ரூபாய் தந்தார் .,ஜன்னல் பக்கத்தில் உட்காந்திருந்தவர் 20ரூபாய் எடுத்து குடுத்தார் .. அதை வாங்கிய அந்த வயதானவர் தன்னுடய இரு கைகளாலும் கடவுளை பார்த்து கும்பிடுபவற்போல் அவரை நடுங்கிய கைகளுடன் வணங்கிவிட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி கீழே கொஞ்ச நேரம் உட்காந்து இருந்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஏறினார் ...


பின் சீட்டில் இருந்தவர் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து இருந்தவரிடம் என்ன ஸார் 20 ரூபாய் குடுத்துடிங்க ? பூந்தமல்லிள இருக்க எல்லா பிச்ச காரங்களுக்கு இப்படி பாவ பட்டு 20 ரூபாய் குடுத்தா அப்பறம் பஸ்கு டிக்கெட் எடுக்க காசு இல்லாம நாமளும் அவங்க கூட சேர்ந்து பிச்சத்தான் எடுக்கணும் என்றார் .. அதற்கு அந்த ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் அப்படி இல்ல ஸார் நா எல்லாருக்கும் 20ரூபாய்ய எடுத்து குடுக்க மாட்டேன் .. அந்த வயசானவர் குடும்பத்தோட என்னோட நண்பர் வீட்லத்தான் வாடகைக்கு இருந்தார் அவரோட பையன் ஒரு கம்பெனில வேல செஞ்சுட்டு இருந்தான் இவர் ரிடயர் ஆகி வீட்ல இருந்தார் .. ரெண்டு வருஷதுக்கு முன்னாடி நடந்த ரயில் குண்டு வெடிப்புல அவரோட மனைவி ஒரே பையன் ரெண்டு பேருமே இறந்துடாங்க .. அதுக்கபுரம் அவர் பைத்யமாய்ட்டாருனு எல்லாரும் சொன்னாங்க .. பாவம் கடைசில இப்ப பிச்ச எடுத்துட்டு இருக்காரு .. அவருக்கும் என்னோட அப்பா வயசுதான் இருக்கும் .. Naalaiku இதே நிலமை என்னோட அப்பாவுக்கும் வரலாம் ஆப என்ன மாதிரி யாராவது ஒருத்தர் அட்லீஸ்ட் அவருக்கு டீ குடிக்கவாச்சு காசு குடுபாங்கள அதான் .. எல்லாம் ஒரு சின்ன சுயநலம்தான் ஸார் endraar .... Oh அப்படியா சார் என்று பக்கத்தில் இருந்தவர் அந்த வயதானவரை ஒரு முறை பரிதாபமாக எட்டி பார்த்தார் ... நானும் அந்த வயதானவரை ஒரு முறை திரும்பி பார்த்தேன் , ச்ச நாம கூட ஒரு 10ரூபாய் குடுதிருக்கலாம்னு நெனச்சேன் .............. ஹெட் செட்ட மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சேன் .. வீட்டுக்கு போனதிலிறிந்து எல்லாரும் நாளைக்கு HR இண்டெர்வீவ்லா எண்ணலாம் question கேட்பாங்க அதுக்கு எப்படிலாம் பதில் சொல்லணும்னு ஆளுக்கு ஒரு advice சொன்னாங்க ,எல்லார்க்கும் மனசுக்குள்ள பெரிய சந்தோஷம் ,சொந்தக்காரங்க எல்லாருக்கும் ஃபோன் செய்து வேலை கிடைச்சிடுசுனே சொல்லிட்டாங்க .
அந்த வேலை கெடச்சா மாசம் 20000 ரூபாய் சம்பளம் என் life மட்டும் இல்ல என்னோட குடும்பத்தோட life செட்டில் ஆகிடும் கடன் எல்லாத்தையும் ஒரு 4 வருஷத்துல அடச்சிடலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் கணக்கு போட்டுகிட்டு இருந்தாங்க .. எங்க அப்பா 20000 ரூபாய் சம்பளம் வாங்க 20 வருடமாச்சு உலகம் எவ்ளோவ் மாறிபோச்சு பாருன்னு ஆச்சர்யபட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாரு .. அந்த வேலைய பத்தியே எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க .. ஒரு வழியா நாளைக்கு சீக்கிரம் எழுந்திருகனும்னு கஷ்டப்பட்டு கண்ணா மூடி தூங்குனேன் .. காலைல என்னோட அம்மா என்ன எழுப்பி விட்டாங்க .. "இது ஒரு பொன்மாலை பொழுது " பாட்டு சன் Tv la ஓடிக்கிட்டு இருந்துச்சு .. இன்னிக்கு evening எனக்கு நிஜமாவே பொன் மாலை பொழுதாதான் இருக்கும்னு மனசுக்குள்ள சிரித்தபடியே அவசரம் அவசரமா கிளம்புனேன் .. Interview காலைல 8 மணிக்குதான் ஆரம்பிக்கும் அதுவும் ஸ்ரீ பெரம்பதூர் தாண்டி இருக்கு அதனால என்னோட அண்ணனோட பைக் எடுத்துகிட்டு வீட்ல இருந்து கிளம்புனேன் .. காலைல 6 மணிநால ரோடு வெறுச்சோடி இருந்துச்சு .. பைக்ல இப்படி வேகமா போகணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை எல்லாமே இன்னகிதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போலன்னு தோனுச்சு .. என்னோட வாழ்கைலையே ரொம்ப சந்தோஷமான நாள் மாதிரி மனசுக்குள்ள தோனுச்சு .. கோவர்தணகிரி தாண்டி வந்துகிட்டு இருக்கும்போது .. எனக்கு முன்னாடி போன லாரில இருந்து ஏதோ சத்தம் கேட்டுச்சு . லாரிய slow பண்ணுனான் .. அப்பறம் சைடு வாங்கி வேகமா போய்டான்.. ஏதோ வண்டி கீழ விழுந்து கடக்கர மாதிரி தெரிஞ்சிச்சு .. கிட்ட போன பிறகுதான் தெரிஞ்சுச்சு முன்னாடி போயிடு இருந்த tvs 50ya லாரிகாரன் இடுச்சிட்டு நிக்காம போயடானு .. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே விழுந்து கிடந்தார் . ..
வண்டிய நிறுத்தி கீழ இறங்காம வண்டில உக்காந்தே பாத்தேன் .. அவருடைய தலையிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது . அவருடைய வெள்ளை சட்டை முழுவதும் ரத்தம் தெரிதிருன்தது .. என்னுடைய இதய துடிப்பு அதிகமாச்சு .. இதுக்கு முன்னாடி என் வாழ்க்கைல நா இந்த மாதிரி கொடூரமான ரோடு accidentலாம் நேர்ல பாத்ததில்ல .. படத்துல பாக்குற accident மாதிரி இல்ல உண்மையான accidenta பாக்கும்போது நமக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் .. அவர் உடம்பில் எந்த அசைவும் இல்லை . ஒரு வேல செத்து போயடாரோனு தோனுச்சு .. சுற்றி எல்லா பக்கமும் பார்த்தேன் கண்ணுகெட்டியவரை யாரையும் காணவில்லை .. தூரத்தில் ஒருவர் cyclela வந்து கொண்டிருந்தார் .. நமக்கு எதுக்கு வம்பு ,யாரும் பாக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்த விட்டு கேளம்பிடுவோம்னு நெனச்சு வண்டிய ஸ்டார்ட் பண்ணி அங்க இருந்து திரும்பி பாக்காம போனேன் .. வண்டியோட side mirror la பாக்கும்போது அவரோட கால் அசைர மாதிரி தெருஞ்சுசு .. சைடு mirrorla பாத்துகிட்டே போனேன் .. என்னோட மனசுல நேத்து என் பின்னாடி உட்காந்து இருந்தவர் சொன்னதுதான் உருத்திகிடே இருந்துச்சு .. நாம இன்னிக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணா நாளைக்கு இதே நிலைமை எனக்கோ என்னோட அப்பாவுக்கோ வந்தா வேற யாராவது ஹெல்ப் பண்ணு வாங்கனு தோனுச்சு .. மணி 6.30 தான் ஆனது அவர ஹோச்பிடெல்லா செத்துட்டு கூட interview போய்டலாம்னு முடிவு பண்ணி வண்டிய திருப்பி அந்த இடத்துக்கு போனேன்.. அவர் ஏதோ அனத்துவது தெளிவாக கேட்டது .. நல்லவேளை உயிர் இருக்கு என்று நினைத்தேன் அனால் அவரை hospiteluku எப்படி தூக்கி கொண்டு போவது என்று புரியவில்லை .. Cycleil வந்தவர் கிட்ட வந்தார் .. எப்டி சார் ஆச்சுனு கேட்டார் .. லாரி காரன் இடுசிடான் , பக்கதுல எதாச்சு hospitel இருக்கானு கேட்டேன் ..
பக்கதுல ஆவடி மார்க்கெட்ல s.k. hospitel இருக்குபா .. நரையா ரத்தம் போய்டே இருக்கு ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள நாம hospitalke போகிடலாம் தூக்குப்பா என்றார் .. அவர் தன்னுடைய சைக்கிளை ஓரமாக நிறுத்தினார் . அடிப்படவரின் பாக்கெட்டில் இருந்து சின்ன டைரி கீழே விழுந்து கிடந்தது அதை எடுத்து என்னிடம் குடுத்தார் .. அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தூக்கி என் பைக்கில் ஏற்றி கொண்டு சென்றோம் .. அவருடைய தலை என் தோள்மேல் பட்டு கொண்டு இருந்தது .. அவர் தலையிலிருந்து என் தோளிலும் முதுகிலும் ரத்தம் ஒட்டிகொள்ளுமே என்று நினைத்தேன் .. அடுத்த சில நிமிடங்களில் hospitelai அடைந்தோம் .. என் பின்னால் உட்காந்திருன்தவர் stretcher எடுத்துட்டு வாங்க என்று கத்திகொண்டே இருந்தார் .. வண்டியை நிறுத்தி சில நொடிகளில் அங்கிருந்த சிலர் ஓடி வந்து அவரை இறக்குவதற்கு உதவினர் .. Strecheril வைத்து உள்ளே எடுத்து சென்றோம் .. டாக்டர் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார் .. எப்படியாச்சு? என்று சுற்றி நின்றவர்கள் கேட்டு கொண்டே இருந்தனர் .. அவர்களிடமும் நடந்ததை கூறி முடிக்கும் முன்பே , டாக்டர் வெளியே வந்து accident caseலப்பா, நா treatement பண்றேன் நீங்க போய் policeku inform பண்ணிட்டு வந்துருங்க என்றார் .. அவர் சொன்னதை கேட்டவுடன் என் தலையே சுத்துவதுபோல் இருந்தது எனக்கு போலீஸ் ஸ்டேஷன்கெல்லாம் போகணுமென்று தெரியாது தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் .. போலீஸ் ஸ்டேஷன் போகணும் என்று நினைத்த உடனே என் மனதில் பயம் தொற்றி கொண்டது .. என் கூட வந்தவர் என்னபா முழிக்கிற இந்த ரோடு கடைசிலதான் போலீஸ் ஸ்டேஷன் போய் complaint பண்ணிட்டு வாப்பா என்றார் .. சார் எனக்கு அதெல்லாம் தெரியாது சார் என்று கூறிவிட்டு அமைதியாக நின்றேன் .. நான் பயப்படுகுறேன் என்று அவருக்கு புரிந்தது ..
இதுகெல்லாம் ஏன்பா பயபடுற சரி நீ இங்க இருந்து அவர பாத்துக்கோ நா போய் complaint பண்ணிட்டுவரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார் .. கொஞ்ச நேரம் ICU முன்னாடியே நின்னுகிட்டு இருந்தேன் .. மணி 7.30 ஆனது .. ச்ச போனவர் வந்தா அவர்ட சொல்லிடு interviewku எப்படியாச்சு போய்டலாம் ஆனா அவரை இன்னும் காணமே என்று பார்த்து கொண்டே இருந்தேன் .. அப்பொழுதுதான் கவனித்தேன் என் சட்டை முழுவதும் ரத்தகரை இருந்ததை .. Bathroomku ஓடினேன் அங்கு தண்ணீரை தெளித்து துடைத்து பார்த்தேன் ஆனால் ரத்த கரை போகவே இல்லை .. சரி friend சட்டைய வாங்கி போட்டு கிட்டு interview attend பண்ணிக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன் ..என் நண்பனிடம் இருந்து போன் வந்தது .. எடுத்த உடன் எங்கடா இருக்க என்றான் .. வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு மச்சி . கொஞ்சம் லேட் ஆனா பரவைல்லைல ? என்றேன் .. 12 மணிக்கு interview முடியறதுக்கு முன்னாடி எப்படியாச்சு வந்துருடா என்றான் .. ம்ம் சரிடா என்று கட் செய்தேன் அவன் சொன்னதை கேட்ட உடன்தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது .. போனை பாக்கெட்டில் வைக்கும்போதுதான் அந்த அடிபடவரின் டைரியை கவனித்தேன் .. டைரியில் முதல் பக்கத்தில் வீட்டு நம்பர் எழுதி இருந்தது .. அந்த போன் no.ku போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு interviewku கிளம்பலாம் என்று நினைத்து .. அந்த no.ruku போன் செய்தேன் .. ரிங் போனது உடனே கட் செய்துவிட்டேன் , இந்த விஷயத்தை எப்படி சொல்வது?, சொன்ன உடன் கேட்பவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது அதோடு இந்த மாதிரி விஷயதெல்லாம் நாசூகாதான் சொல்லனும் .. அங்கு நின்று கொண்டிருந்த ward boyai கூப்பிட்டு விஷயத்தை சொல்ல சொன்னேன் .. ரிங் போனதும் ward boyidam குடுத்து விட்டு .. நகர்ந்து நின்றேன் ..


அந்த wardboy விஷயத்தை சொல்லி விட்டு போனை என்னிடம் குடுத்தான் .. அவங்க பாண்டிச்சேரில இருப்பாங்க போல சார் வரதுக்கு எப்படியும் 4 மணி நேரமாச்சு ஆகும் என்றான் .. டாக்டர் வெளியே வந்து ஆபரேஷன் பன்னனும்பா போலீஸ்க்கு inform பண்ணியாச்சா என்றார் . Inform பண்ண போகி இருக்கார் சார் அவர் எப்படி சார் இருக்கார் என்று கேட்டேன் . Crictical situationdhaampa போலீஸ் வந்தப்புறம் எனக்கு inform பண்ணுங்க என்றார் .. மணி 9 ஆனது போலீஸ் constable உடன் அவரும் வந்தார் .. இவர்தான் சார் முதல பாத்தார் என்று என்னை காட்டினார் . போலீசை பார்த்த உடன் மறுபடியும் எனக்குள் பயம் பற்றி கொண்டது .. நடந்ததை முதலிலிருந்து அவரிடம் மறுபடியும் சொன்னேன் .. lorry, Tvs 50yoda நம்பர நோட் பண்ணிங்களா என்று கேட்டார் ? இல்ல சார் TVS 50 இன்னும் அங்கேதான் சார் இருக்கு என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னார் .. சரி நா spotku போய் பாத்துட்டு வரேன் நீங்க இங்கயே இருங்க என்றார் .. சரி சார் என்று தலையாட்டினேன் .. என்னோட சைக்கிள் அங்கதான் சார் இருக்கு நானும் வரேன் சார் என்று பக்கத்தில் இருந்தவரும் அவருடன் சென்றுவிட்டார் .. அங்கிருந்த chairil உட்காந்து கொண்டு வாட்சையே பார்த்து கொண்டிருந்தேன் .. நேரம் ஆகா ஆகா interview attend பண்ண முடியாதோ என்று பயம் வந்தது .. என்னுடைய போனில் இருந்து அவருடைய குடும்பத்துக்கு போன் செய்ததால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் அந்த குடும்பம் போன் செய்து அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருந்தனர் , பாவம் அவர்கள் வேதனை அவர்களுக்கு .. 10 மணி அளவில் அந்த போலீஸ் மட்டும் வந்தார் வந்து என்னுடன் ஒரு பேப்பரில் sign வாங்கிகொண்டு , என்னுடைய போன் நம்பரை எழுதி கொண்டு என்னை அனுப்பினார் .. இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதனால் வண்டியில் வேகமாக போய் கொண்டே இருந்தேன் ...
பூந்தமல்லி தாண்டி சென்று கொண்டிருந்தபோது போன் ஒலித்தது . என்னோட frienduதான் போன் பண்ணி இருந்தான் .. மச்சி எங்கடா இருக்க என்று கேட்டான் ? இன்னும் 45 minutesla வந்துருவேன் மச்சி .. Ok சீக்கிரம் வாடா HR interviewla வெறும் tell about urself மட்டும்தான் கேக்குறாங்க .. Aptitude பாஸ் பண்ண எல்லாரையுமே செலக்ட் பண்ணிடுவாங்கன்னு பேசிகிறாங்க மச்சி . சீக்கிரம் வா என்றான் . Ok da என்று போனை கட் செய்து விட்டு வண்டியை சந்தோஷத்துடன் வேகமாக ஓட்டினேன் .. மறுபடியும் போன் வந்தது வண்டிய நிறுத்தாம அப்படியே attend பண்ணுனேன் .. நா ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்னு சொன்னாங்க .. வண்டிய ஓரமாய் நிறுத்தி விட்டு சொல்லுங்க சார்னு சொன்னேன் .. அவரோட டைரி உங்ககிட்ட இருக்கறதா சொல்லி இருந்திங்கள, இப்ப எங்களுக்கு அது தேவபடுதுப்பா அத hand over பண்ணாமையே போயடின்களே என்றார் .. ஆமா சார் என்கிட்டதான் இருக்கு என்றேன் .. சீக்கிரம் hospiteluku வந்துருங்க நா அங்கதான் இருக்கேன் என்றார் .. நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.. உடனே வாப்பா நா இத முடுசிட்டு courtuku வேற போகணும் சீக்கிரம் கிளம்பி வாப்பா என்றார் .. எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது .. போலீஸ் கூப்பிடும் போது எனக்கு முக்கியமான வேலை இருக்கு இப்ப வர முடியாதுனு சொல்ற அளவுக்கு எனக்கு தெய்ரியம் இல்லை .. சரி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு சீக்கிரம் போய் குடுத்துட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி வேகமா hospitalku போனேன் .. கரயாஞ்சாவடில ஏதோ tanker lorry ரிப்பேர் ஆகி நிக்கிதாம் அதனாலே சுதிக்கிட்டுதான் போகணும்நு சொன்னாங்க .. வாட்சை பார்க்காமல் வேகமாக சென்றேன் .. Hospitalai அடைந்தபோது மணி 11.15 ஆகிவிட்டது .. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு போலீஸ் இல்லை .. எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது .. அவருக்கு போன் செய்தேன் எடுத்தவர் இதோ பகதுலதான் இருக்கேன் 5 minutesla வந்துர்வேன்பா என்றார் .. 10 நிமிடம் ஆகியும் அவர் வரவில்லை .
மறுபடியும் அவருக்கு போன் செய்தேன் ஆனால் அவர் எடுக்கவே இல்லை .. எனக்கு தெரிந்து அன்று நான் திட்டிய அளவுக்கு தமிழ் நாட்டு போலீசை இது வரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள் .. அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது என்னால வர முடியலப்பா நீ திரிய receptionla குடுத்துடுப்பா நா collect பண்ணிக்கிறேன் என்றார் . டைரியை கொண்டு போய் குடுத்து விட்டு வாட்சை பார்த்தேன் மணி 12 அடித்தது . என் நண்பனிடம் இருந்து interview over என்று ஒரு மெசேஜ் வந்துச்சு . தலையில் கையை வைத்து கொண்டு கண்ணை மூடி கொண்டு அங்கிருந்த chairil உட்காந்தேன் .அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பதில் சொல்ல போறேன் .மாசம் 20000 சம்பலமாச்சே எங்க குடும்பத்தோட கஷ்டமெல்லாம் தீர்ந்திருகுமே .. நா செஞ்சதுக்கு இப்ப இந்த உலகம் எனக்கு என்ன சிலையா வைக்க போகுது .. கேக்குறவன் என்ன இழுச்ச வாயனுதான சொல்லுவான் , இல்ல உனக்கு எதுக்கு இந்த ஹீரோ வேலைலாம்னு சொல்லி சிரிப்பாங்க ........ அமைதியாக உட்கார்ந்திருந்தேன் ..அந்த wardboy அவர general wardku மாத்தியாச்சு என்றார் . சரி என்றேன் .எழுந்து அவரை பார்க்க போனேன் தலை முழுவதும் கட்டு போடபட்டு இருந்தது ...எனக்கு அவரை பார்த்து திட்டுவதா பரிதாப படுவதா என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன் .. அந்த அடிபடவரின் மனைவியிடமிருந்து போன் வந்தது இப்ப எப்படிப்பா இருக்கார் என்று கேட்டாங்க ... இனி ஒன்னும் பிரச்சனை இல்ல general wardku மாத்திடாங்கனு சொன்னேன் .. பக்கதுல வந்துடோம்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் அது வரைக்கும் கொஞ்சம் பார்த்துகோப்பா என்றார் ... நானும் வீட்டுக்கு போய் என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன் , wait பண்றேன் வாங்க என்றேன் ... அவர் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்காந்திருந்தேன் பிறகு அந்த hospitela இருந்த கான்டீன்ல டீ குடிக்க போனேன் .. எங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது . என்ன சொல்வதுனு தெரியல call attend செய்யாமல் . அங்கு இருந்த chairil உட்காந்து டீ குடிக்க தொடங்கினேன் . மறுபடியும் என் அம்மாவிடமிருந்து போன் வந்தது என்னால் அடக்க முடியாமல் வெறுப்பில் , முன்னே இருந்த டேபிளில் கை வைத்து முகத்தை மறைத்து படுத்தேன் ..என்னை விட இந்த உலகத்துல பெரிய ஏமாளி இருக்க மாட்டான்னு நெனச்சேன் ... ஏன் அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் மாறி மாறி போன் வந்து கொண்டே இருந்தது பாவம் அவங்க நேத்து night fulla எவ்ளோவ் கனவு கண்டிருபாங்க அவர்களை நினைக்கும்போது என் கண்ணிலிருந்து லேசாக கண்ணீர் வந்தது ... அப்படியே தூங்கிவிட்டேன் ... எவ்ளோவ் நேரம் தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை ...........
சார் சார் என்று யாரோ கூபிடுவதுபோல் உணர்ந்தேன் எழுந்து பார்த்த போது அங்கு ward boyum ஒரு 40 வயது மதிக்க தக்க ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் வந்திருந்தனர் . அந்த wardboy இவர்தான் இங்கு வந்து அவரை சேர்த்தார் என்று என்னை பார்த்து சொன்னார் , இவங்கதான் அவரோட மனைவி இரண்டு மகள்கள் என்று சொன்னார் .. அந்த அடிபடவரின் மனைவி என் இரு கையையும் பிடித்து நே வயசுல சின்னவனா இருக்க தம்பி இல்லாட்டி உன்னோடு கால விழுந்திருவேன் எங்க வாள்கையவே நீ காப்பாத்தி இருக்க , அந்த மனுஷன நம்பிதான் நாங்க 3 பெரும் இருக்கோம் .. ரொம்ப நன்றிப்பா நீ ரொம்ப வருஷம் நல்லா இருபப்பா என்று கூறிக்கொண்டே அளதொடன்கினால் .. அந்த இரு பெண்களும் ரொம்ப thanks anna என்று கூறிக்கொண்டே இருந்தனர் .. அங்கு canteenil இருந்த அனைவரும் என்னையே பார்த்தனர், அவர்கள் என்னை அப்படி பார்த் போது பெருமையாக இருந்தது .. இதுல என்னமா இருக்கு நீங்க போய் firstu அவர பாருங்க . அவர பாத்துட்டேன்பா உனக்கு நா எப்படி நன்றி சொல்றதுனே தெரியில அந்த ஆண்டவன்தான் உன்னோட ரூபத்துல இங்க வந்திருகாருப்பா ஏதாவது சாப்பிடுப்பா ? என்றால் .. சாப்ட்டேன்மா நீங்க அவர போய் பாருங்க என்றேன் . மணி பாத்தேன் 3.30 மணி ஆனது timaachu நா கிளம்புறேன் என்றேன் , அப்படியாப்பா அவருக்கு குணமான பிறகு உனக்கு போன் பண்றேன்பா நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும்பா என்றார் ..அந்த குடும்பம் நான் பைக்கை எடுத்து கொண்டு வெளியே போகும் வரைக்கும் என்னுடனே வந்தனர் ..வண்டியில் உட்காந்து ஸ்டார்ட் செய்து விட்டு கடைசியாக ஒருமுறை திரும்பி வரேன் என்று தலை அசைத்தேன் ..அந்த குடும்பத்தில் இருந்த அனைவரின் கண்களிலும் ஒரு கண்ணீர் கலந்த சந்தோஷம் .. அவருடைய உயிர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அப்பதான் புரிந்தது, வீட்டுக்கு புறப்பட்டேன் .. மலை வருவதை போன்று இருந்தது மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் அந்த குடும்பத்தினரின் முகங்கள் மனதிற்குள் வந்து வந்து சென்றது , என் கண்களில் சிறிய கண்ணீர் துளி அது வேலை கிடைக்காத சோகத்தினால் அல்ல , அந்த குடும்பத்தினரின் கண்ணில் இருந்த சந்தோஷம் என்னால் என்பதால் ...


இப்போது என் மனதில் வேலை கிடைக்காத சோகம் துளியும் இல்லை .. ஒரு மனுஷன் சக மனுஷனுக்கு இந்த உதவி கூட பண்ணலேனா அவன் நல்லா வாழ்ந்து என்ன பண்ண போறான்னு தோனுச்சு ...... மேகம் இருண்டுகொண்டு வந்தது .. குளிர்ந்த காற்று முகத்தை உரசி சென்றது .. பக்கத்தில் ஒரு டீ கடை ரேடியோவில் "இது ஒரு பொன்மாலை பொழுது ................... " பாடல் ஓடிகொண்டிருந்தது .. நான் காலையில் நினைத்த மாதிரி இன்னிக்கு எனக்கு இந்த மாலை பொழுது ஒரு பொன்மாலை பொழுதுதான் ... நானும் அந்த பாடலை சந்தோஷமாக முனு முணுத்துக்கொண்டே போனேன் ........" இது ஒரு பொன்மாலை பொழு

No comments:

Post a Comment