Pages

Saturday, 24 August 2013

ஐ ஹேட் யூ, பட்.. 3


அத்தியாயம் 5 அப்புறம் வந்த சில நாட்கள்.. தினமும் மாலை அசோக்கும் ப்ரியாவும் கவிதாவை கழட்டிவிட்டு ஸ்குவாஷ் ஆடினார்கள். 'ஒரே ஒரு கேம் கவிதா..' என்று அவளிடம் சொல்வார்கள். ஒரு மணி நேரம் தாண்டியும் கெக்கபிக்க என கனைத்தபடியே விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இரண்டு நாட்கள் இவர்கள் கண்ணாடி அறைக்குள் விளையாடுவதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த கவிதா, மூன்றாம் நாள் 'இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க போயிட்டு வாங்க..' என்று டீசண்டாக ஒதுங்கிக் கொண்டாள். மேலும் இரண்டு வாரங்கள் ஓடின.. ஃப்ரேம்வோர்க் டெலிவர் செய்யும் நாள் நெருங்கி கொண்டே இருந்தது. அசோக் தனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த காம்பனன்ட் டிசைனை இரண்டு நாட்கள் முன்னதாகவே முடித்துவிட்டான். உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்ட ஹரியின் வேலையை எடுத்து செய்து கொண்டிருந்தான். ப்ரியா தனது வேலையை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு வந்து வாய்த்த காம்பனன்ட் காப்ளிகேட்டடாக அமைந்து போக, கஷ்டப்பட்டாள். அப்போது ஒரு நாள் மாலை.. அவர்கள் ஆபீஸ்.. நேத்ரா அவசரமும், பதட்டமுமாய் அசோக்கின் இடத்திற்கு வந்தாள். அவளுடைய குரலிலும் ஒருவித அவசரம்..!!

"ஹே அசோக்.. ஐ நீட் எ ஹெல்ப் ஃபரம் யூ..!!" என்றாள். "சொ..சொல்லு நேத்ரா..!!" "உன் பைக்ல கொண்டு போய்.. என்னை ஹோசூர்ல ட்ராப் பண்ண முடியுமா..??" "ஹோசுரா..?? ஹோசூர் எதுக்கு போற நீ..??" "அது.. நாலு நாள் ஹாலிடே வருதுல..?? எங்க காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கொடைக்கானல் ட்ரிப் போகலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம்.. இன்னைக்கு ஈவினிங் செவன் ஓ க்ளாக் ட்ரைன்..!! ஆக்சுவலா இன்னைக்கு சீக்கிரமே கெளம்பி மெஜஸ்டிக் போக நெனச்சிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல 'அதை முடிச்சுட்டு போ'ன்னு இந்த ரவி பயங்கர டார்ச்சர் பண்ணிட்டான்.. அல்ரெடி இங்கயே செவன் ஆயிடுச்சு.. அதான் ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சிடலாம்னு..!! ப்ளீஸ் அசோக்.. ஹெல்ப் பண்ணுடா..!!" "சரி பண்றேன்.. பட் ஒன் கண்டிஷன்..!!" "என்ன..??" "உன் ஃப்ரண்ட்ஸ்லாம் எனக்கு இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கணும்..!!" சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட, "அடச்சை.. ஜொள்ளு..!!" நேத்ரா முகத்தை சுளித்தாள். "அப்போ போ.. என்னால முடியாது..!!" "சரி.. சரி..!! இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.. வந்து தொலை..!!" அடுத்த பத்து நிமிடங்களில் அசோக்கும், நேத்ராவும் ஆபீசில் இருந்து பைக்கில் கிளம்பினார்கள். ஹோசூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தபோது மணி 7.45. அவர்கள் சென்று அரை மணி நேரம் கழித்துத்தான் ட்ரெயின் வந்தது. நேத்ராவின் ஃப்ரண்ட்ஸ் என்றதும் பத்து பதினைந்து கன்னடக்கிளிகள் வரப் போகின்றன என்று கனவில் இருந்தான் அசோக். ஆனால் வந்தது என்னவோ தடி தடியாய் நான்கைந்து பையன்களும், இரண்டே இரண்டு அல்ட்டாப்பு ராணிகளும்..!! அந்த அல்ட்டாப்பு ராணிகள் இவனை கண்டுகொள்ளாமல் நேத்ராவுடன் கன்னடத்தில் பேசின. தடியர்கள் விரோதியை பார்ப்பது போல இவனை முறைத்தனர்..!! நொந்து போனான்..!! ஒரு வழியாய் நேத்ராவை வழி அனுப்பி வைத்தான். பசியெடுக்க ஆரம்பிக்கவே, ஹோசூர் அவுட்டோரிலேயே ஒரு ரெஸ்டாரன்டில் வண்டியை நிறுத்தி, வாணியம்பாடி பிரியாணி வாங்கி வயிற்றுக்குள் தள்ளினான். 'ஆபீஸ் சென்று பேக் எடுத்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டியதுதான்..' என்ற எண்ணத்துடன் பெங்களூர் நோக்கி பைக்கை சீற விட்டான்.ஆபீசை அடைந்தபோது மணி பத்தை தாண்டியிருந்தது. அவர்கள் வேலை பார்க்கும் ஃப்ளோருக்குள் நுழைந்தான். அமைதியே எங்கும் நிறைந்து போய் இருந்தது அந்த தளம். ஏ.ஸி நிறுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே ஒரு சில விளக்குகள் மட்டும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக் கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தின் அடியில், தலையைப் பிடித்தவாறு மானிட்டரை வெறித்தனர் சிலர்.. அமெரிக்காவில் இருக்கும் க்ளயன்ட்டின் ஆங்கிலம் புரியாமல் தடுமாறினார் சிலர்.. பிஸ்ஸா கடித்தவாறு யூட்யூப் பார்த்தனர் சிலர்..!! அசோக் தனது இடத்தை அடைந்து தன் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டான். ஓடிக்கொண்டிருந்த ப்ரோக்ராம்களை எல்லாம் கில் செய்து, சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தான். கிளம்ப போகையில்தான் எதேச்சையாய் கண்களை சுழற்றியவனின் பார்வையில் ப்ரியா பட்டாள். கம்ப்யூட்டர் திரையை வெறித்தவாறு ஏதோ டைப் செய்து கொண்டிருந்தாள். ப்ரியாவை கண்டதும் அசோக்கிற்கு லேசாக ஆச்சரியம். 'என்றும் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி ஓடிவிடுவாளே.. இன்று இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..?' என்று குழப்பமுற்றான். மெல்ல நடந்து ப்ரியாவின் இடத்தை நெருங்கினான். "ஹேய் லூசு.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்குற இங்க..?? வீட்டுக்கு கெளம்பலையா..??" என்று எப்போவும் போல ஒரு இயல்பான கேலிக்குரலிலேயே கேட்டான். "இல்ல அசோக்... கொஞ்சம் வேலை இருந்தது.. அதான்..!! அதுசரி.. நீ எங்க போய் சுத்திட்டு வர்ற..??" ப்ரியாவின் குரலில் ஒருவித களைப்பு தெரிந்தது "சுத்தலாம் இல்ல.. நேத்ராவை ஹோசூர் வரை பைக்ல கொண்டுபோய் விட்டு வந்தேன்..!!" "ஹோசூரா..?? அவ ஹோசூர் எதுக்கு போறா..??" "ஃப்ரண்ட்சொட கொடைக்கானல் டூர் போறாளாம்.. ட்ரெயின் மிஸ் பண்ணிட்டா.. ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சோம்....!!" "ஹ்ம்ம்.. எல்லாம் நல்லா என்ஜாய் பண்றீங்க போல..?? நான் மட்டும் இங்க கெடந்து முட்டிட்டு இருக்குறேன்.. எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ..??" ப்ரியா ஒருமாதிரி விரக்தியாக சொல்ல, "ஹேய்.. என்னாச்சு இப்போ..?? ஏன் இப்படிலாம் பேசுற..??" அசோக்கும் இப்போது சற்றே சீரியஸானான். "ஆமாம்.. உங்க எல்லாருக்கும் நல்லா ஈசியான காம்பனன்ட்டா அமைஞ்சு போச்சு.. எல்லாம் சீக்கிரம் முடிச்சுட்டு ஊர் சுத்த கெளம்பிட்டீங்க..!! எனக்கு மட்டும் இப்படி காம்ப்ளிக்கேட்டடான காம்பனன்ட் வந்து மாட்டிக்கிச்சு.. எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்..!! ச்சே.. வாழ்க்கையே வெறுத்துடும் போல இருக்கு..!!" "ப்ச்.. சும்மா லூசு மாதிரி உளறாத..!! உனக்கு என்ன காம்பனன்ட்.. 'சிங்கிள் ஸைன் ஆன்'தான..?? அது ஒன்னும் காம்ப்ளிக்கேடட்லாம் இல்ல.. சிம்பிள்தான்..!!" "ஆமாமாம்.. உனக்கு எல்லாம் சிம்பிள்தான்..!! எங்களுக்குத்தான் அதுல இருக்குற கஷ்டம் புரியும்..??" "ஹ்ம்ம்.. சரி விடு.. காம்ப்ளிக்கேட்டட்தான்.. ஒத்துக்குறேன்.. சந்தோஷமா..?? இப்போ கெளம்பு.. வீட்டுக்கு போகலாம்..!!" "இல்ல அசோக்.. நான் வரல.. நீ கெளம்பு..!!" "வரலையா..?? அல்ரெடி டென் ஆகிடுச்சுடி.. வீட்ல தேட போறாங்க..!!" "அப்பாட்ட சொல்லிட்டேன் அசோக்.. வர லேட் ஆகும்னு..!! இன்னைக்கு நான் கெளம்ப எப்படியும் ரெண்டு ஆயிடும்..!!" "ப்ச்.. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு..?? ரெண்டு மணி வரை இங்க தனியா உக்காந்திருக்க போறியா..?? சொல்றதை கேளு.. வேலை பாத்தது போதும்.. கெளம்பு..!!" "இதை முடிக்கனுன்டா.. மண்டே டெலிவர் பண்ணனும்..!!" "பாத்துக்கலாம் வா..!!" "என்னத்த பாத்துக்க சொல்ற..?? இன்னைக்கு மட்டும் இல்ல.. நாலு நாள் ஹாலிடேஸும் எனக்கு ஆபீஸ்தான் போகப்போகுது போல.. அப்படியும் முடிக்க முடியுமான்னு தெரியல..!!” படபடவென சொன்ன ப்ரியா சட்டென நிறுத்தினாள். அசோக் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது ப்ரியா சற்றே வெறுப்பான பாவத்துடன், தன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டாள். குரலில் ஒருவித சோகம் தொணிக்க தொடர்ந்தாள். "தம்பி நாளைக்கு சென்னைல இருந்து வர்றான் அசோக்.. அவன் ஃப்ரண்ட் யாரோ கூட கூட்டிட்டு வர்றான்.. எல்லாம் சேர்ந்து நாளைக்கு மைசூர் போறதா ப்ளான்..!! இப்போ என்னால எல்லாம் போச்சு.. வந்து என்னை கேவலமா திட்டப் போறான்..!! ச்ச.. எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா..??" அசோக்கிற்கு ப்ரியாவின் மனநிலை புரிந்தது. குடும்பத்துடன் ஜாலியாக ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டிருப்பாள். இப்போது அது இல்லை என்றதும் குழந்தை மாதிரி பரிதவிக்கிறாள். ப்ரியாவின் சோகம் அவனை வாட்டியது. அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. ஒரு சில வினாடிகள், அவளையே சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த அசோக், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான்."ஓகே.. நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..??" "என்ன..??" ப்ரியா தலையை நிமிர்த்தி கேட்டாள். "உன் சிஸ்டம் ஐ.பி அட்ரசும், பாஸ்வேர்டும் எனக்கு மெயில் அனுப்பு..!!" "எ..எதுக்கு..??" "அனுப்பு.. சொல்றேன்..!!" ப்ரியாவிற்கு அரைகுறையாய் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. கொஞ்ச நேரம் அசோக்கின் முகத்தை மலங்க மலங்க பார்த்தவள், அப்புறம் படபடவென மெயில் டைப் செய்து, அவன் கேட்ட விவரங்களை அவனுடைய ஐடிக்கு அனுப்பினாள். "ம்ம்.. அனுப்பியாச்சு..!!" என்றாள் மெலிதாக. "குட்..!! இப்போ என்ன பண்ற.. சிஸ்டத்தை அப்படியே லாக் பண்ணிட்டு.. உன் பேக் எடுத்துட்டு கெளம்பு.. வீட்டுக்கு போலாம்..!!" "ஐயோ.. இதை முடிக்கணும் அசோக்..!!" "எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!! எதைப்பத்தியும் வொர்ரி பண்ணிக்காத.. நாளைக்கு மைசூர் போ.. அப்பா, தம்பியோட நல்லா ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணு.. நாலு நாள் நல்லா என்ஜாய் பண்ணு.. மண்டே வர்றப்போ உன் காம்பனன்ட் ரெடியா இருக்கும்..!!" "அசோக்.. இது நீ நெனைக்கிற மாதிரி ஈசி இல்ல.. நான் ஒரு மாசமா உக்காந்து முட்டிட்டு இருக்கேன்.. ஒரு எழவும் புரியலை..!!" "ப்ச்.. அதுதான் நான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல..?? மண்டே நீ வர்றதுக்குள்ள.. உன் காம்பனன்ட்டை முடிச்சு வைக்க வேண்டியது என் பொறுப்பு.. போதுமா..??" "நெஜமா..??" "ப்ராமிஸ்..!!!" அசோக் அவனது வலது கையை விரித்து ப்ரியாவின் தலையில் வைத்தவாறு சொன்னான். உடனே ப்ரியாவின் முகத்தில் ஒரு புதுவித மலர்ச்சி. அவ்வளவு நேரம் அவளுடைய கண்களில் தெரிந்த கவலை நீங்கி ஒரு புதுவித பிரகாசம். தனது செவ்விதழ்களை விரித்து, அசோக்கை பார்த்து அழகாக புன்னகைத்தாள். "ஹ்ம்ம்.. இப்படி சிரிக்கிறப்போ முகம் எப்படி அழகா இருக்கு..? அதைவிட்டு சும்மா சாக்லேட்டை பறிகொடுத்த சின்னப்புள்ள மாதிரி உர்ருன்னு மூஞ்சியை வச்சுக்கிட்டு..!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!!" "சரி கெளம்பு.. டைமாச்சு..!! லேட்டாச்சுனா.. அப்புறம் அதுக்கு வேற என் அண்ணன்.. ஐ.டி இண்டஸ்ட்ரி பத்தி தமிழ் எம்.ஏ மாதிரி தாறுமாறா திட்ட ஆரம்பிச்சுடுவான்..!!" "ஹாஹா..!! ஓகே ஓகே.. ஒன் செக்..!!" ஒரு வினாடி நேரம் கேட்டவள், முழுதாக பத்து வினாடிகள் எடுத்துக் கொண்டாள். சிஸ்டம் லாக் செய்து, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, 'போலாமா..??' என்று புன்னகைத்தாள். இருவரும் கிளம்பினார்கள். போகிற வழியில் அசோக் தனது இடத்தில் நின்று, தனது சிஸ்டத்தையும் ஆன் செய்து வைத்தான். "உன் சிஸ்டம் எதுக்கு ஆன் பண்ணின..??" "வீட்ல இருந்து கனெக்ட் பண்ணி வொர்க் பண்ண போறேன்.. ஏதாவது ரெஃபர் பண்ண என் சிஸ்டமும் தேவைப்படலாம்..!! "ஓ.. அப்போ நீ ஆபீஸ் வரப் போறது இல்லையா..??" "நான் ஏன் ஆபீஸ் வர்றேன்..?? நாலு நாளைக்கு இந்த ஏரியா பக்கமே ஒரு ஈ எறும்பு கூட இருக்காது..!! வீட்ல ஒன்னுக்கு ரெண்டு லேப்டாப் இருக்குது.. ஏர்ட்டெல் ப்ராட்பேண்ட் இருக்குது.. வீட்ல இருந்தே பாத்துப்பேன்..??" "ஹ்ம்ம்.. என்னால உன் வீகென்ட் இப்படி ஸ்பாயில் ஆயிடுச்சு..!!" "இட்ஸ் ஓகே ப்ரியா..!!" இருவரும் ஐடி கார்டை ஸ்வைப் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே இருந்த ரெஜிஸ்டரில் வேறு ஆளுக்கொரு என்ட்ரி போட்டார்கள். 'ஹேப்பி வீகென்ட் ஸார்.. ஹேப்பி வீகென்ட் மேடம்..' என்று சிரித்த செக்யூரிட்டியை பார்த்து புன்னகைத்தார்கள். லிப்ஃட் ஏறினார்கள். ஏழாவது தளத்தில் இருந்து லிஃப்ட் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது.சில வினாடிகள் ஃப்ளோர் இன்டிகேட்டரையே கவனித்துக் கொண்டிருந்த அசோக், பிறகு இயல்பாக பார்வையை திருப்பினான். தனக்கு பக்கவாட்டில் நின்ற ப்ரியா, தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்ததும், புருவத்தை சுருக்கினான். அவன் அவ்வாறு தன்னை பார்த்த பின்னரும், ப்ரியா தன் விழிகளை அவன் மீதிருந்து விலக்கிக்கொள்ளவில்லை. "ஹேய்.. ப்ரியா.. என்னாச்சு..??" அசோக் புன்னகையுடன் கேட்டான். "தேங்க்ஸ்டா..!!" ப்ரியா நன்றிப் பெருக்குடன் சொன்னாள். "ச்சீ.. லூசு.." அசோக் அவளுடைய தலைமுடியை கலைத்து விட்டான். அசோக்கின் பைக்கிலேயே அவனும் ப்ரியாவும் ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். ட்ராஃபிக் குறைந்து போன சாலையில் மிதமான வேகத்தில், பைக் சில்க்போர்ட் நோக்கி சீறிக் கொண்டிருந்தது. அசோக் ப்ரியாவின் மைசூர் திட்டம் பற்றி கேட்டுக்கொண்டு வந்தான். அவளும் 'அதை பாக்கப் போறோம்.. இதை பாக்கப்போறோம்..' என்று சிறு குழந்தை மாதிரியான ஒரு குதுகுலத்துடன் சொல்லிக்கொண்டு வந்தாள். உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவள் திடீரென "ரொம்ப நாளுக்கப்புறம் மைசூர் போறோம் அசோக்..!! நான் சின்னப்பொண்ணா இருக்குறப்போ.. அம்மா எங்க கூட இருக்குறப்போ.. போனது..!!" என்று சொல்லிவிட்டு பட்டென அமைதியாகிப் போனாள். அப்புறம் எதுவும் பேசவே இல்லை அவள். அம்மாவின் நினைவில் மூழ்கிப் போயிருந்தாள். அவளுடைய மனநிலையை உடனே புரிந்து கொண்ட அசோக்கும், அதற்கு மேல் கேள்வி கேட்டு அவளை தொந்தரவு செய்யவில்லை. அமைதியாக வண்டியை செலுத்தினான். சில்க் போர்டை அடைந்தார்கள். 'வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன்..' என்று சொன்ன அசோக்கை, 'இல்ல அசோக்.. உனக்கு எதுக்கு சிரமம்.. அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. நீ வீட்டுக்கு கெளம்பு.. நான் ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்..' என்று ப்ரியா தடுத்தாள். அசோக்கும் மேலும் வற்புறுத்தாமல், ஒரு ஆட்டோ பிடித்து அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கிக்கரை உதைத்தான். ஆட்டோ சென்ற திசைக்கு எதிர்த்திசையில் பறந்தான். அடுத்த நாள் காலையே அசோக் ப்ரியாவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அந்த வேலையை ஆரம்பித்துவிட்டான். வி.பி.என் மூலமாக தனது லேப்டாப்பில் இருந்து ஆபீஸ் நெட்வொர்க் கனெக்ட் செய்தான். ப்ரியா தந்த பாஸ்வேர்டை உபயோகித்து அவளது சிஸ்டத்தில் லாகின் செய்தான். முதலில், ஒரு மாதமாக அவள் செய்திருந்த வேலைகளை கவனமாக மேற்பார்வையிட்டான். இடியாப்பத்தை பிழிந்து வைத்த மாதிரி அவள் எழுதியிருந்த கோட்-ஐ பார்த்து தலையலடித்துக் கொண்டான். மொத்த காம்பனன்ட்டையும் ரீ-டிசைன் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். நான்கு நாட்கள் அந்த வேலையில்தான் முழுநேரமும் மூழ்கியிருந்தான். கூகிளின் உதவியை நாடினான்.. நிறைய டெக்னிகல் கட்டுரைகளை வாசித்தான்.. தன்னுடைய சிஸ்டம் கனெக்ட் செய்து சில விஷயங்கள் ரெஃபர் செய்தான்.. செல்பில் அடுக்கப்பட்டிருந்த தனது பழைய டிசைன் கைடை தூசி தட்டினான்.. விழிகளை மூடி நெற்றியை கீறியவாறு நெடுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..!! ப்ரியா தன் குடும்பத்துடன், மைசூரில் பிருந்தாவன் கார்டன், மகாராஜா அரண்மனை என்று.. முகத்தில் எப்போதும் சிரிப்புடன் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. இவன் இங்கே அவளுக்காக.. தனது மூளையை துன்புறுத்தி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். வியாழக்கிழமை ஆரம்பித்த வேலையை ஞாயிறு மாலைதான் முடித்தான். டிசைன், கோட் என்று பக்காவாக ரெடி செய்தான். டிசைனை எளிமையாக விளக்கக்கூடிய டாகுமன்ட்டும் ப்ரிப்பேர் செய்து முடித்தான். மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, 'அப்பாடா..!!!' என்று நிம்மதியாக இருந்தது. அண்ணி போட்டுத்தந்த காபியை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சி தன்னை ஆசுவாப்படுத்திக் கொண்டான். அப்போதுதான் அவனுக்கு திடீரென அந்த எண்ணம் தோன்றியது. ப்ரியாவுடைய சிஸ்டத்தின் கண்ட்ரோல் இப்போது தன்னிடம்..!! அவள் தனது கம்ப்யூட்டரில் ஏதாவது பர்சனல் ஃபைல்கள் வைத்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனை தொற்றிக் கொண்டது. உடனே அதை செயல்படுத்த முடிவு செய்தான். ஒவ்வொரு ஃபோல்டராக பொறுமையாக தேடிப்பார்த்தான். ஒரு ஃபோல்டர் சிக்கியது..!! அதற்குள் எக்கச்சக்கமாக சப்-ஃபோல்டர்கள்.. கொள்ளை கொள்ளையாய் ஃபோட்டோக்கள்..!! சிறு வயதில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைத்திருந்தாள் ப்ரியா. ஓரிரு புகைப்படங்களை பார்த்ததுமே அசோக்கிற்கு புரிந்து போனது. தங்கவேட்டையில் ஜெயித்தது போல குஷியாகிப் போனான். முதல் வேலையாக மொத்தத்தையும் தனது சிஸ்டத்திற்கு ஒரு காப்பி அனுப்பினான். அப்புறம் பொறுமையாக ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிற ப்ரியாவை ரசித்தான். இரட்டை ஜடையுடன் ஸ்கூல் சிறுமியாய்.. இரண்டு கைகளிலும் ஸ்போர்ட்ஸில் ஜெயித்த கப்புகளுடன்.. கல்லூரி நண்பர்களுடன் வாயில் எதையோ போட்டு அரைத்துக்கொண்டு.. தனக்கு இருபக்கமும் நிற்கிற அப்பா, தம்பியின் தோள்களில் கைபோட்டவாறு, இதயத்தை கொள்ளை கொள்கிற சிரிப்புடன்..!! பொக்கிஷம்தான் அந்த ஃபோல்டர் அவனைப் பொறுத்தவரை..!! ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்தவன், ஒரு படம் வந்ததும் அப்படியே அசையாமல் உறைந்து போனான். ப்ரியா கொள்ளை அழகாய் இருந்தாள் அந்தப்புகைப்படத்தில். எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு..!! ‘ஸ்டன்னிங்..!!’ என்று தோன்றியது அசோக்கிற்கு..!! அடுத்த படத்துக்கு கடந்து போக மனமில்லாதவனாய், விரித்த இமைகளை மூடவும் மறந்து போனவனாய் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இது யாரு..??" திடீரென தனக்கு அருகே அந்த சத்தம் கேட்கவும் பக்கென பதறிப் போனான் அசோக். அப்புறம் அது தம்புதான் என்று உணர்ந்ததும், சற்றே நிம்மதியாக பெருமூச்சு விட்டான். தம்பு அசோக்குக்கு பின்பக்கமாக வந்து, தனது கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, லேப்டாப் திரையையே பார்த்தவாறு அவ்வாறு கேட்டிருந்தான். "தம்பூ.. இங்க என்னடா பண்ணிட்டு இருக்குற..??" அசோக் கேட்க, தம்பு அதை மதியாமல் "இது யாரு சித்தப்பா..??" என்று லேப்டாப்பை நோக்கி விரல் நீட்டினான். "இ..இதுவா..?? இ..இது.. இது.." என்று ஒருகணம் தடுமாறிய அசோக், பிறகு தைரியம் வந்தவனாய், "இதுதான் உன் சித்தி..!!" என்றான். "இவங்க பேரு..??" "ப்ரியா..!! ப்ரியா சித்தி..!!" "ஓ..!! ப்ரியா சித்தி சூப்பரா இருக்காங்க..!!" தம்பு அப்படி சொன்னதும் அசோக் அப்படியே பூரித்துப் போனான். அவனுடய கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தமிட்டான். "சித்தியை உனக்கு பிடிச்சிருக்கா தம்பூ..??" "ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. அழகா இருக்காங்க..!!" "சித்தப்பா இவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரவா..??" "ம்ம்.. கூட்டிட்டு வாங்க.. எனக்கு ஓகே..!!" தம்பூ தலையாட்டினான். அசோக் புன்னகைத்தான். "ஓகே .. சித்தப்பா கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வர்றேன்.. சரியா..?? ம்ம்ம்ம்.... சாப்டியா தம்பூ..??" "ம்ம்.. சாப்டேன் சித்தப்பா.. பூரி..!!" என்றவன் அசோக் கேட்காமலேயே தனது சட்டையை தூக்கி, வீங்கிப் போயிருந்த வயிறை காட்டினான். "ஹாஹா.. சட்டையை கீழ போடுடா.. தொப்பைச்சாமி..!! போ.. ஹால்ல போய் விளையாடு போ..!!" "ராஜேஷ் டாடி உங்களை அங்க வர சொன்னா..!!" "ஓ..!! டாடிட்ட போய்.. சித்தப்பா ரொம்ப முக்கியமான வேலையா இருக்காங்களாம்.. இப்போ வர முடியாதாம்னு சொல்லு..!!" "ஹ்ம்.. ஹ்ம்.. வாங்க சித்தப்பா.. டாடி வர சொன்னா..!!" தம்பு அடம்பிடித்தான். "ப்ச்.. தம்பூ..!! சித்தப்பா சொல்றேன்ல..??" "ம்ஹூம்.. வாங்க.. வாங்க சித்தப்பா..!!" தம்பு கையை பிடித்து இழுக்க, அசோக்கால் அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை. லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, அவனுடன் நடந்தான். போகிற வழியில் கிச்சனுக்குள் பிஸியாக இருந்த செல்வி கண்ணில் பட்டாள். கிச்சனை கடந்து ஹாலுக்குள் நுழைய, சோபாவில் அமர்ந்ததுகொண்டு பனியனுக்குள் கைவிட்டு அக்குளை சொறிந்து கொண்டிருந்த ராஜேஷ் பார்வைக்கு கிடைத்தான். "என்னடா.. கூப்டியா..??" அசோக் கேட்டதும் ராஜேஷ் நிமிர்ந்து அவனை பார்த்தான். கண்ணுக்கு அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி டீப்பாயில் வைத்தவன், அந்த டீப்பாயின் மீதே இருந்த பிரவுன் கவரை எடுத்து அசோக்கிடம் நீட்டினான். "என்ன இது..??" குழப்பத்துடனே அசோக் அந்த கவரை கையில் வாங்கினான். "பொண்ணு ஃபோட்டோ..!!" "எந்த பொண்ணு..??""ஹ்ம்ம்.. வெளக்கமா சொல்லனுமா உனக்கு..?? மடிவாலால 'சங்காத்தி மேட்ரிமோனியல் சென்டர்னு' ஒரு ஏஜன்சி இருக்கு.. மேரேஜ் ப்ரோக்கர்ஸ்..!! போன வாரம் உன் ஃப்ரோபைல் அங்க ரெஜிஸ்டர் பண்ணினேன்.. இந்த வாரம் இந்த பொண்ணோட ஃபோட்டோ அனுப்பிருக்காங்க.. முதமுதலா உன் மூஞ்சிக்கு வந்திருக்குற வரன்..!! எனக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. நீ பாத்து எப்படி இருக்கான்னு சொல்லு..!!" ராஜேஷ் சொல்ல சொல்லவே அசோக்கின் முகத்தில் டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது. கண்களை உருட்டி அண்ணனை முறைத்தவன், கோபமான குரலில் அவனிடம் சீறினான். "உன்னை யாரு இந்த வேலைலாம் பாக்க சொன்னது..??" "ம்ம்ம்..?? மிஸ்டர் முத்துச்சாமி..!!" ராஜேஷின் குரலில் ஒரு கிண்டல். "அது யாரு..??" அசோக் ஒருவேகத்தில் படக்கென கேட்டுவிட, "டேய்.. நம்ம அப்பாடா..!!" என்று ராஜேஷ் பதறினான். "ஷ்ஷ்.. ஸாரி..!! " என்று நாக்கை கடித்துக்கொண்ட அசோக், உடனே "ம்ம்ம்ம்... யாரு சொன்னா என்ன..?? நான் சொல்றதை இப்போ நல்லா கேட்டுக்கோ..!! இன்னைக்கோட இந்த பொண்ணு பாக்குற வேலையைலாம் நிறுத்திடு..!!" என்றான். "ஆங்.. நிறுத்திட்டு..??? ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணை பாத்து முடிக்கணும்னு.. அப்பா எங்கிட்ட வேலையை விட்டிருக்காரு..!! அவருக்கு யாரு பதில் சொல்றது..??" ராஜேஷ் எரிச்சலாக கேட்க, அசோக் இப்போது அடிக்குரலில் சொன்னான். "உனக்கு என்ன.. ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணு வேணும்.. அவ்வளவுதான..?? நானே கொண்டுவந்து நிறுத்துறேன்.. போதுமா..??" "டேய்.. நீயா பொண்ணு பாக்குறேன்னு தெரிஞ்சா.. அ..அப்புறம்.. பிரச்னை ஆயிடும்டா.. அப்பா ஒத்துக்க மாட்டாரு..!!" "அவருக்கு தெரிஞ்சாத்தான..?? பொண்ணு நான் பாக்குறேன்.. உன்கிட்ட கூட்டிட்டு வர்றேன்.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு அப்பாகிட்ட சொல்லி.. நீ பேர் வாங்கிக்கோ..!! டீல் ஓகேவா..??" "ஏய்.. இதுலாம் ரொம்ப ஓவருடா..!! நாங்கல்லாம் இப்படியா தனியா பொண்ணு பாத்துட்டு திரிஞ்சோம்.. வீட்ல பாத்த பொண்ணை கட்டிக்கல..??" "நீ ஒரு ஈனா கூனா.. எல்லாரும் அப்படியா இருப்பாங்க..??" அசோக் சொன்னதைக்கேட்டு ராஜேஷ் டென்ஷனானான். ஹாலில் அந்தமாதிரி சத்தம் அதிகரித்துக்கொண்டே செல்லவும், இப்போது கிச்சனில் நின்றிருந்த செல்வி, அங்கிருந்து வெளிப்பட்டு ஹாலுக்குள் நுழைந்தாள். அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று புரியாதவளாய்.. "என்னங்க.. என்னாச்சு..??" என்றாள். "ஒண்ணுல்ல அண்ணி..!!" என அசோக் உடனடியாய் சமாளித்தான். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அங்கு ஒரு அமைதி. யாரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்கள். தம்புச்சாமியோ எதுவும் புரியாமல், தலையை அண்ணாந்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான். ராஜேஷ்தான் அந்த அமைதியை குலைத்தவாறு, ஆத்திரமும் சற்றே குறைந்து போனவனாய் மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "இங்க பாரு அசோக்.. என்னதான் நீயா பொண்ணு பாத்தாலும்.. பெரியவங்களா பாக்குற மாதிரி வராது.. அவங்களுக்கு இருக்குற அனுபவம் உனக்கு இருக்காது..!!" "நீங்க உங்களுக்குன்னு நெறைய கண்டிஷன்ஸ் வச்சுக்கிட்டு.. உங்க இஷ்டத்துக்கு ஏதோ ஒன்னை இழுத்துட்டு வந்து நிறுத்துவீங்க.. அதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது..!! எனக்கு வரப்போறவ.. என் டேஸ்ட்படி இருக்கனும்..!!" "நீ மொதல்ல அந்த கவரை பிரிச்சு பாரு.. என் டேஸ்ட் பத்தி உனக்கு நம்பிக்கை வரும்..!!" "ம்க்கும்.. உன் டேஸ்ட் பத்தித்தான் ஆறு வருஷம் முன்னாடியே எனக்கு தெரிஞ்சு போச்சே..??" என்று அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னவன், அந்த கவரை தூக்கி டீப்பாயில் விட்டெறிந்தான். அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செல்வி விழித்தாள். ஆனால் ராஜேஷ் புரிந்துகொண்டு அசோக்கை கடுப்புடன் முறைத்தான். வேறொன்றும் புரிந்துபோன மாதிரி இருக்க, அவசரமாய் கேட்டான். "யாருடா அந்தப்பொண்ணு..??" "எந்தப்பொண்ணு..??" "அதான்.. நீ லவ் பண்ற பொண்ணு..!!" "நா..நான் யாரை லவ் பண்றேன்.. அ..அப்டிலாம் யாரும் இல்ல..!!" அசோக் தடுமாற்றமாய் சொன்னான்."ஹே.. எல்லாம் எனக்கு தெரியும்.. ஐ.டில வேலை பாக்குறவனுகலாம் இப்படித்தானடா இருக்குறிங்க..??" "இப்போ எதுக்கு தேவை இல்லாம ஐ.டியை இழுக்குற நீ..?? அப்படி என்ன பண்றோம் நாங்க..??" "ஆங்.. எல்லாம் செட்டு செட்டாத்தானடா அலையுறீங்க..!! எவ, எப்படின்னு எதுவும் தெரியாம.. எவளையாவது புடிச்சுக்க வேண்டியது.. வீட்டுக்கு தெரியாம பார்க், ரெஸ்டாரன்ட், சினிமான்னு ஊர் சுத்த வேண்டியது..!! நீ யார் கூட அந்த மாதிரி ஊர் சுத்துறேன்னு சொல்லு..!!" ராஜேஷ் அவ்வாறு கேட்கவும், அசோக் நிஜமாகவே பயங்கர கடுப்புக்கு உள்ளானான். அண்ணனின் முகத்தையே எரிச்சலும், கோபமுமாய் முறைத்தவன், அப்புறம் கண்களை இடுக்கி அவனை கூர்மையாக பார்த்தவாறு, குரலை சற்றே தாழ்த்திக்கொண்டு கேட்டான். "கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லு.. ஐ.டில வேலை பாக்குறவனுக மட்டுந்தான்.. வீட்டுக்கு தெரியாம பொண்ணோட ஊர் சுத்துறானுகளா..??" அவ்வளவுதான்..!! அசோக்கின் பார்வையிலும், கேள்வியிலும் இருந்த கூர்மை.. ராஜேஷை சுருக்கென்று தாக்கி.. அவனை ஸ்தம்பித்துப் போக செய்தது..!! 'தேரே மேரே பீச் மே.. கேஸா ஹே யே பந்தன்.. அஞ்சானா..!!' என பின்னணியில் பாடல் ஒலிக்க, டெல்லியில் தன்னுடன் கைகோர்த்து சுற்றித் திரிந்த, ஒரு மைதா மாவின் முகம் படக்கென அவன் மூளையில் பளிச்சிட்டது..!! தடுமாறிப் போனான்..!! மனைவி வேறு அருகில் இருப்பதை உணர்ந்ததும்.. டரியல் ஆகிப் போனான்..!! அவசர அவசரமாய்.. "சரி சரி விடு.. உன் இஷ்டப்படி என்னவேணா பண்ணித்தொலை.. இனி உன்னை நான் எதுவும் சொல்ல மாட்டேன்..!!" என்று சமாளித்தான். "ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!" என்று தனது வழக்கமான பஞ்ச்சை உதிர்த்த அசோக், எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த செல்வியிடம் திரும்பி, "நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன் அண்ணி.. நாலு நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடந்தது ஒரு மாதிரி இருக்கு..!! எனக்கு சாப்பாடு வேணாம்.. இன்னைக்கு நான் வெளிலயே சாப்பிட்டுக்குறேன்..!!" என்று சொல்லிவிட்டு, சுவற்றில் தொங்கிய பைக் சாவியை எடுத்துக்கொண்டு, அதை சுழற்றியவாறே வீட்டை விட்டு வெளியேறினான். செல்வி அதற்குமேலும் தனது ஆர்வத்தை அடக்க முடியாதவளாய், அவசரமாய் வந்து தன் கணவனுக்கருகே சோபாவில் அமர்ந்தவாறே கேட்டாள். "ஏங்க.. அவன் என்னங்க சொல்லிட்டு போறான்.. எனக்கு ஒண்ணுமே புரியலை..!!" "என்ன புரியலை உனக்கு..?? 'உன் சமையலை தின்னு தின்னு வெறுத்து போச்சு.. இன்னைக்கு ஒருநாளாவது வெளில சாப்பிட்டு பொழைச்சுக்குறேன்'னு.. நல்லா தெளிவாத்தான சொல்லிட்டு போறான்..??" "ஐயோ அது இல்லைங்க..!!" "அப்புறம்..??" "அதுக்கு முன்னாடி சொன்னது.. ஏதோ ஐ.டில வேலை பாக்குறவங்க மட்டுந்தான்.. பொண்ணுகளோட.." செல்வி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "ஆமாம்.. இப்போ ரொம்ப முக்கியம்..?? போடீ.. போய் பூரியை பொறிச்சு எடு.. போ..!!" என இவன் சட்டியில் போட்ட பூரி மாதிரி பொறிந்தான். "ஏங்க இப்படி கோவப்படுறீங்க..??" செல்வி பாவமாக கேட்டாள். "பின்ன என்ன..?? அவன் ஏதோ என் டேஸ்ட் சரியில்லன்னு நக்கல் அடிச்சுட்டு போறான்.. நீயும் அதை நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்குற..?? என் டேஸ்ட்க்கு என்னடி குறைச்சல்..??" "ஆமாம்.. அதான..?? உங்க டேஸ்ட்க்கு என்ன குறைச்சல்..?? இந்தா.. நம்ம தம்பூ போட்டுருக்குற பூப்போட்ட ஜட்டி கூட உங்க செலக்ஷன்தான்.. எவ்ளோ அழகா இருக்கு..??" செல்வி சீரியசாக சொல்ல, ராஜேஷ் அவளை உக்கிரமாக முறைத்தான். "அதை சொல்லலடி.. இதை சொன்னேன்.. இந்த பொண்ணுக்கு என்னடி குறைச்சல்..??" என்றவாறு ராஜேஷ் அந்த கவரை பிரித்து உள்ளே இருந்த போட்டோவை எடுத்து மனைவியிடம் காட்டினான். "ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்குறா..!! ஆனா.. நம்ம லக்ஷ்மியை விட கொஞ்சம் கலர் கம்மிதான்.. இல்லைங்க..??" செல்வியின் ஆசை அவளையும் அறியாமல் அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட, ராஜேஷ் இப்போது தனது தலையை நாப்பத்தஞ்சு டிக்ரியில் டேப்பராக திருப்பி, முன்பை விட கடுமையாக மனைவியை முறைத்தான். அவனது பார்வையின் அர்த்தம் செல்விக்கு புரிந்து போக, உடனே சமாளிக்க முயன்றாள். "இ..இல்லைங்க.. நான் ஏதோ என் மனசுக்கு பட்டதை சொன்னேன்..!! நீங்களாச்சு.. உங்க தம்பியாச்சு.. அவருக்கு புடிச்சிருந்தா கட்டி வைங்க.. எனக்குலாம் ஒன்னும் இல்ல..!!" என்றவாறு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். "தம்பூ.. நீ வா.. ஹோம் வொர்க் பண்ணனும்.. டைம் ஆச்சு..!! நாளைக்கு ஸ்கூல்.. ஞாபகம் இருக்குல..??" என்று தம்புச்சாமியை இழுத்துக்கொண்டு, உள்ளறைக்குள் நடந்தாள். மனைவியின் முதுகையே எரிச்சலும், சலிப்புமாய் முறைத்த ராஜேஷ், பிறகு கையிலிருந்த புகைப்படத்தை தூக்கி டீப்பாயில் போட்டான். அந்த புகைப்படத்தில்.. எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு.. மந்தகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.. ப்ரியா..!!!அத்தியாயம் 6 திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்து சிஸ்டம் திறந்து பார்த்த ப்ரியா, நிஜமாகவே அதிசயித்துப் போனாள். அவளுடைய வேலையை அழகாகவும், நேர்த்தியாகவும் அசோக் முடித்து வைத்திருப்பதை பார்த்து மனம் பூரித்தாள். என்ன செய்திருக்கிறான் என்பதை, எளிதாக புரியும்படியாக அவன் ப்ரிப்பேர் செய்து வைத்திருந்த டாகுமன்ட்டும், அவளுக்கு மிக வசதியாக இருந்தது. அவளே அனைத்தும் செய்து முடித்த மாதிரியாக, எல்லா கோட்-யும் செக்கின் செய்தாள். தன்னுடைய வேலையை முடித்துவிட்டதாக ரவிப்ரசாத்துக்கு, கெத்தாக ஒரு மெயில் அனுப்பினாள். 'இதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி..!!' என்கிற ரீதியில். டீமில் உள்ள மற்றவர்களை CC-யில் போட்டுக் கொண்டாள். 'கலக்குறடி ப்ரியா..!!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். எழுந்து அசோக்கின் இடத்துக்கு நடந்து சென்றாள். பின்பக்கமாக இருந்து அவனுடைய தோளை ஸ்நேகமாக பற்றினாள். பதட்டத்துடன் திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் பதட்டம் நீங்கி புன்னகைத்தான். "ஹேய்.. மைசூர் ட்ரிப்லாம் எப்படி இருந்தது..??" அவனுடைய கேள்வி ப்ரியாவின் காதில் விழவே இல்லை. "தேங்க்ஸ்டா.. தேங்க்ஸ் எ லாட்.. இந்த ஹெல்ப்பை நான் மறக்கவே மாட்டேன்..!!!" என்று கண்களில் நீர் துளிர்க்க சொன்னாள். மேலும் ஒரு இரண்டு வாரங்கள் ஓடின. க்ளையன்ட்டுக்கு ஃப்ரேம்வொர்க் டெலிவர் செய்து அப்ரூவல் வாங்கி, அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்திருந்தனர். யூஸர் இன்டர்ஃபேஸ்-க்கான ப்ரோட்டோடைப் தயார் செய்யும் பணி. ப்ரோட்டோடைப் என்றால், அவர்கள் இறுதியாக உருவாக்கப்போகிற அப்ளிகேஷனின் ஆரம்ப டம்மி வடிவம். ஸ்க்ரீன்களும், அதற்கான லிங்க்குகளும் தயார் செய்யவேண்டும். ஃப்ரேம்வொர்க் வேலையை போல சிக்கலான வேலை கிடையாது. எளிமையான வேலைதான். அதனால் அதிக மென்டல் ப்ரெஷர் இல்லாமலே அனைவரும் ஆபீசுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாள் மதியம்..!! அவர்கள் ஆபீஸ் கேஃப்டீரியா..!! அசோக், ப்ரியா, ஹரி, கவிதா, நேத்ரா ஐந்து பேரும் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். பேச்சு பொதுவாக சென்று கொண்டிருக்கையில், ஹரிதான் முதலில் அந்த விஷயத்தை ஆரம்பித்தான். அசோக்கிடம் கேட்டான். "மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??" "என்னடா..??" "ரெகயர்மன்ட் கேதரிங்கு ரவியை அனுப்பலயாம்..!!" "ஹாஹா.. அவனை அனுப்ப மாட்டாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியுன்டா..!! அவன் பேப்பர் போட்டுட்டு.. எட்டு மணி நேரம் ஆபீசுக்குள்ள உக்காந்திருக்குறதே பெரிய விஷயம்.. அவனை நம்பி ஆன்சைட்லாம் எவன் அனுப்புவான்..??" "ம்ம்..!! அப்போ நம்ம டெவலப்மன்ட் டீம்ல இருந்துதான் யாரையோ அனுப்ப போறாங்க..??" "ஹ்ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கும்..!!" "யாரை அனுப்புவாங்கன்னு நீ நெனைக்கிற..??" "என்னை கேட்டா..?? எனக்கு எப்படி தெரியும்..??" "ஆக்சுவலா பாத்தா.. உன்னைத்தான் அனுப்பனும் அசோக்.. நம்ம டீம்ல நீதான் அதுக்கு டிஸர்வ்டான ஆளு.. ஆனா.." என்று இழுத்த ஹரி, திடீரென வேறெங்கேயோ கவனத்தை திருப்பியவன்.. "வந்துட்டான்யா வந்துட்டான்.. கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி வந்துட்டான்..!! தர்பூஸ் தலையன்..!!" என்று கத்தினான். தூரமாக.. அப்போதுதான் மதிய உணவுக்காக கேஃப்டீரியாவுக்குள் நுழைந்துகொண்டிருந்த கோவிந்தை பார்த்துத்தான்.. அவன் அவ்வாறு கத்தியது..!! "யாரைடா சொல்ற..??" அசோக் பின்பக்கமாக திரும்பி பார்க்க, அவனோடு சேர்ந்து எல்லோரும் வாசலுக்கு பார்வையை வீசினார்கள். கோவிந்த் வருவதை கண்டுகொண்டார்கள். "அவன்தான்..!! கோ.. கோ.. கோவிந்த்து..!!" ஹரி கோவிந்த் மாதிரி கேலியாக திக்கி திக்கி பேசிக்காட்ட, கவிதா அவனுடைய புஜத்தில் பட்டென தட்டினாள். முறைத்த முகத்துடன் கணவனை கடிந்து கொண்டாள். "ச்ச.. இதுதான் உங்ககிட்ட எனக்கு சுத்தமா புடிக்கிறது இல்ல..!! அடுத்தவங்களோட டிஸேபிலிட்டியை மென்ஷன் பண்ணி கிண்டல் பண்றது..!! எல்லாருக்கும் பேரு வச்சிருக்குறதை பாரு.. தர்பூஸ் தலையன், ஸ்ப்ரிங்கு மண்டையன், குமுட்டி வாயன்னு..!!" "ஏன்.. இதுல என்ன இருக்கு..??" "என்ன இருக்கா..?? இதெல்லாம் தப்பு..!!" "என்ன தப்பு.. நாம பேசுறது அவன் காதுல விழுந்தாத்தான் தப்பு.. விழலைன்னா எதுவும் தப்பு இல்ல..!!" ஹரி சப்பைக்கட்டு கட்டினான். "நாம பேசுறதை அவன் கேக்காட்டாலும்.. நமக்கா ஒரு பேஸிக் கர்ட்டஸி வேணாமா..??" "ஓஹோ..?? அவனுக்கு மட்டும் அந்த கர்ட்டஸிலாம் இருக்கா.. அவன் என்ன பண்ணுனான்னு உனக்கு தெரியுமா..??" "என்னடா பண்ணுனான்..??" அசோக் இப்போது ஆர்வமானான். அதற்குள் சாப்பாட்டு ப்ளேட்டை கையில் ஏந்தியவாறு கோவிந்த் இவர்கள் அமர்ந்திருக்கிற டேபிள் நோக்கி, ஒரு அப்பாவிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான். அதை கவனியாத அசோக், "கேக்குறேன்ல.. சொல்லுடா.. என்ன பண்ணுனான் அவன்..??" என்று ஹரியை அவசரப் படுத்தினான். "ஹேய்.. இருடா.. அவன் இங்கதான் வந்துட்டு இருக்குறான்..!!" ஹரி கிசுகிசுப்பாக சொன்னான். "ஷ்ஷ்ஷேல் ஐ ஜாயின் வித் யூ..??"

புன்னகையுடன் அவர்களை பார்த்து பொதுவாக கேட்டான் கோவிந்த. அவனது பார்வை காலியாக கிடந்த அந்த ஒரு சேரின் மீது பதிந்திருந்தது. இப்போது அசோக் அமர்ந்திருந்த எல்லோர் முகத்தின் மீதும் ஒருமுறை பார்வையை வீசினான். அப்புறம் கோவிந்திடம் திரும்பி, "ஸாரி கோவிந்த்.. இங்க ஆள் வர்றாங்க..!!" என்று இறுக்கமான குரலில் தயவு தாட்சணியம் இல்லாமல் சொன்னான். "ஓ..!! இ..இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே..!! நான் இன்னொரு எடம் பாக்குறேன்..!!" கோவிந்த் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னான். வேறொரு மூலையில் ஒரு காலியிடம் இருக்க, அதை நோக்கி நகர்ந்தான். "ஹேய்.. ஸாரிப்பா.. சீரியஸா எடுத்துக்காத..!!" அசோக் கத்தவும், "நோ.. நாட் அட் ஆல்..!!" அவன் திரும்பி ஒருமுறை அசோக்கைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மெல்ல நடந்தான். சற்றே தூரமாக காலியாக கிடந்த ஒரு டேபிளில் சென்று அமர்ந்து கொண்டான். தனியாக அமர்ந்து கொண்டு, பரிதாபமாக சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு, தட்டில் இருந்த வெள்ளரி ஸ்லைசை எடுத்து கடித்துக்கொண்டான். "ஹேய் அசோக்.. இப்போ எதுக்கு அவனை நீ இப்படி அவாய்ட் பண்ணின..??" நேத்ரா இப்போது அசோக்கிடம் சீறினாள். "ப்ச்.. நீ கொஞ்சம் சும்மா இருக்குறியா.. அவனைப் பத்தி பேசிட்டு இருக்குறோம்.. அவனை வச்சுக்கிட்டு எப்படி பேசுறது..?? ஹேய்.. நீ சொல்லுடா..!!" அசோக்கின் பதிலில் நேத்ராவுக்கு திருப்தியில்லை. பாவமான பிள்ளையாக வெள்ளரி கடித்துக் கொண்டிருந்த கோவிந்தையே ஓரிரு வினாடிகள் இங்கிருந்தே வெறித்தாள். அப்புறம்.. "அச்சோ..!! பாபா அவனு.. நானு ஹோகி அவ்னிகே கம்பெனி கொட்த்தினி...!!" என்றவாறு நேத்ரா சேரில் இருந்து எழுந்து, தனது ப்ளேட்டை கையில் எடுத்துக்கொண்டு, கோவிந்துக்கு கம்பெனி கொடுக்க சென்றாள். "ஆமாம்.. அவன் பாபா.. இவ சந்திரமுகி.. கம்பெனி குடுக்க கெளம்பிட்டாங்க..!! போடீ போ.. அவனை பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியலை..!!" ஹரி அவளை கிண்டல் செய்தான். "ஹேய்.. அவ கெடக்குறா விடு.. நீ சொல்லு.. என்ன மேட்டர்.. அவன் என்ன பண்ணினான்..??" அசோக் மீண்டும் ஆரம்பித்தான். "ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது..?? எனக்கு என்னவோ இவனைத்தான் ஆன்சைட் அனுப்ப போறாங்கன்னு தோணுது மச்சி..!!" "எ..எப்படி சொல்ற..??" "இந்த பஃபல்லோ வாயன்.. பக்-க்கு நல்லா சோப்பு போட்டு வச்சிருக்கான் மச்சி.. ஏற்கனவே நாலஞ்சு தடவை இவன் ஆன்சைட் போறது மிஸ் ஆயிடுச்சு.. இந்தத்தடவை எப்படியும் போயிடணும்னு வெறியோட இருப்பான்..!! அதில்லாம நான் இப்போ சொல்றதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு..!!" "என்ன..??" "இன்னைக்கு காலைல.. இவன் பக் ரூம்க்கு போயிருந்தான்..!! ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு மேல.. குசுகுசுன்னு உள்ள பேசிட்டு இருந்தானுக.. கண்டிப்பா ஆன்சைட் பத்தித்தான் பேசிருப்பானுக..!! கூடவே இருந்துட்டு.. அவன் மட்டும் தனியா போய் பேசி.. நமக்குலாம் குழி பறிக்கிறான் பச்சி..!!" "ஓ..!!" அசோக் இப்போது முகத்தில் ஒரு சீரியஸ்னசுடன் நெற்றியை கீறிக்கொண்டான். தூரத்தில் நேத்ராவுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிற கோவிந்த்தை இங்கிருந்தே ஒரு முறை முறைத்தான். இப்போது கவிதா இவர்களுடைய பேச்சுக்கு இடையில் புகுந்து சொன்னாள். "ஹேய்.. அவனை அனுப்பினா அனுப்பிட்டு போறாங்க.. இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க..??" என்றாள். உடனே ஹரி தன் மனைவியிடம் திரும்பி சொன்னான். "அதெப்படி அப்படி விட முடியும்..?? அவன் நேத்து வந்தவன்.. நாங்கல்லாம் அஞ்சாறு வருஷமா இந்த டீம்ல கெடந்திருக்கோம்..!!" "ப்ச்.. அதனால இப்போ என்ன..??" "என்னது.. அதனால இப்போ என்னவா..?? என்ன பேசுற நீ..?? இப்போ.. நீ வீட்ல இருக்குறப்போ.. உன்னை விட்டுட்டு.. உன் தங்கச்சியை எனக்கு கட்டி வச்சிருந்தாங்கன்னு வை.. நீ உன் அப்பா, அம்மாவை சும்மா.." அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கவிதா அவன் தொடையில் நறுக்கென கிள்ளி வைக்க, ஹரி "ஆஆஆஆஆ...!!!" என்று அலறினான். "அப்டிலாம் வேற உங்களுக்கு கேடு கெட்ட நெனைப்பு இருக்கா..??" கண்களை உருட்டி கணவனை முறைத்தாள். "ஐயோ.. ஒரு உதாரணத்துக்கு சொன்னன்டி..!! அது மாதிரிதான் இதுவும்.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போறதா..??" வலியோடு முகத்தை சுருக்கிக்கொண்டே சொன்ன ஹரி, அசோக்கிடம் திரும்பி "மச்சான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ.. இல்லனா ஆன்சைட் ஆப்பர்ச்சூனிட்டியை.. இந்த தர்பூஸ் தலையன் தட்டிட்டு போயிடுவான்.. பாத்துக்கோ..!!" என்று பற்றவைத்துவிட்டு, பிசிபேலாபாத்தை கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அசோக் சாப்பிட மனமில்லாதவனாய் சாதத்தை ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தான். அவன் மூளையில் சில குழப்பமான எண்ணங்கள். அப்புறம் எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பி பார்த்தவன், சற்றே எரிச்சலுற்றான். அவர்கள் பேசியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல, ப்ரியா தன் ப்ளேட்டில் கிடந்த நூடுல்சை அள்ளி வாய்க்குள் திணிப்பதிலேயே கவனமாக இருந்தாள். வாயில் இருந்து தப்பித்து செல்ல நினைத்த ஒற்றை நூடுலை, உதடுகளை குவித்து, சர்ரென கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிழுத்துக் கொண்டாள். கடுப்பான அசோக் நறுக்கென அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான். "ஆஆஆ.. ஏண்டா..??" ப்ரியா தலையை தேய்த்துக் கொண்டாள். "இங்க எவ்வளவு முக்கியமான மேட்டரு பேசிட்டு இருக்குறோம்..?? நீ பாட்டுக்கு எனக்கென்னடான்னு.. நூடுல்சை 'ஊஊஊ'ன்னு உறிஞ்சிக்கிட்டு இருக்குற..??" "ப்ச்.. போடா.. இதெல்லாம் தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ணப் போறேன்..?? நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டீங்கடா நீங்க..!!" என்று சலித்துக்கொண்டாள். அன்று மாலை நாலரை மணி இருக்கும். அன்றைய வேலையை முடித்துவிட்ட அசோக், சும்மா இராமல் தனது பர்சனல் ஃபைல்களை மேய்ந்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு திடீரென அது ஞாபகம் வந்தது. அன்று ப்ரியாவின் ஃபோட்டோக்களை எல்லாம் தன்னுடைய சிஸ்டத்தில் காப்பி செய்து வைத்தது. இப்போது அதை எடுத்து பார்க்கலாம் என்று தோன்றியது. திரும்பி ஒருமுறை தூரத்தில் அமர்ந்திருந்த ப்ரியாவை பார்த்தான். அவள் ஆர்வமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, சற்றே தைரியமுற்றான். ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து உள்ளே சேமிக்கப்பட்டிருந்த ஃபோட்டோக்களை பார்த்தான். ப்ரியாவின் அழகை பயந்து பயந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் கண்ணில் அந்த ஃபோல்டர் பட்டது. MM என்று மொட்டையாக பெயர் சூட்டப்பட்டிருந்த ஃபோல்டர்..!! உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தவன், ஆச்சரியமுற்றுப் போனான். உள்ளே ஒரே ஒரு ஃபோட்டோ.. இவனுடைய ஃபோட்டோ..!! அந்த ஃபோட்டோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது கூட இப்போது அவனுக்கு நினைவில்லை. கம்பெனியில் ஏதோ பார்ட்டி கொடுக்கப்பட்டபோது எடுத்த படமாக தோன்றியது. அழகாக வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான் அந்த ஃபோட்டோவில்..!! அசோக்கிற்கு இப்போது சந்தோஷமும், குழப்பமும் ஒன்று கலந்த மாதிரியான ஒரு உணர்வு. 'என் ஃபோட்டோவை இவள் எதற்கு எடுத்து வைத்திருக்கிறாள்..?? ஒருவேளை இவளும் என்னை மாதிரி..??' அசோக்கிற்கு அந்த கேள்வியே அவன் மனதிற்கு ஒரு தித்திப்பை ஊட்டுவதாக இருந்தது. நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி ஒரு பரவசம்..!! ஒருமுறை திரும்பி ப்ரியாவை பார்த்தான். அவள் தன் வேலையிலேயே இன்னும் கவனமாக இருந்தாள். 'அவளிடமே கேட்டுவிடலாமா..??' மனதில் ஒரு ஆர்வம் இப்போது அவனை அரிக்க ஆரம்பித்திருந்தது. 'ஒருவேளை அவள் சாதாரணமாக எடுத்து வைத்திருந்து.. அதை நான் போய் கேட்டு.. அவள் தவறாக நினைத்துவிட்டால்..?? இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது..?? எதேச்சையாக பார்த்தேன்.. எதற்காக வைத்திருக்கிறாய் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை..!! கேட்டுப் பார்க்கலாம்.. அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாம்..!!!' குழம்பி குழம்பி இறுதியாக அசோக் ஒரு முடிவுக்கு வந்தான்.அன்று ஐந்து மணியளவில் காபி ப்ரேக் சென்றபோது அசோக்கிற்கு ப்ரியாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஹேய் ப்ரியா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..' என்று கிசுகிசுத்தவன், அவளை தனியாக அழைத்து சென்றான். "என்ன அசோக்..??" ப்ரியா புரியாமல் கேட்டாள். "அ..அது.. அது வந்து..!!" அசோக் ஆரம்பிக்கவே தயங்கினான். "ம்ம்.. சொல்லு..!!" "ஆ..ஆக்சுவலா நான் வேணுன்னு பண்ணல ப்ரியா.. ஆக்சிடண்டாத்தான்.." "ஹாஹா.. நீ என்ன சொல்ல வர்றேன்னே எனக்கு ஒன்னும் புரியலை..!!" "இரு.. புரியிற மாதிரி சொல்றேன்.. அன்னைக்கு நீ எனக்கு பாஸ்வேர்ட் கொடுத்தல..??" "ம்ம்ம்.." ப்ரியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போனுக்கு அந்த கால் வந்தது.. ரவிப்ரசாத்திடம் இருந்து..!! அசோக் காலை பிக்கப் செய்து காதில் வைக்க, அடுத்த முனையில் அவன் கரகர குரலில் கத்தினான். "ஹேய்.. வேர் ஆர் யூ கைய்ஸ்..??" "வாட் ஹேப்பன்ட் ரவி.. வீ ஆர் இன் பேன்ட்ரி..!!" "கம் குயிக்லி டூ மீட்டிங் ஹால்..!! வீ ஹேவ் குவாட்டர்லி அப்டேட் மீட்டிங் நவ்.. கம் ஃபாஸ்ட்..!!" "ஓ..!! ஓகே ரவி..!!" அசோக் சொல்லிவிட்டு காலை கட் செய்தான். "என்னாச்சு அசோக்..??" ப்ரியா குழப்பமாக அசோக்கை ஏறிட்டாள். "மூணு மாசத்துக்கு ஒரு தடவை.. நம்ம டெலிவரி யூனிட் பெருந்தலைகள்லாம் ஒண்ணா கூடி.. மீட்டிங்ன்ற பேர்ல உயிரை எடுப்பானுகல்ல..?? இன்னைக்குத்தானாம் அது.. இப்போ ஆரம்பிக்க போகுதாம்.. ரவி உடனே வர சொல்றான்..!!" "ப்ச்.. ச்ச.. நான் மீட்டிங் ரெக்வஸ்ட் பாத்தேன்.. மறந்தே போயிட்டேன்..!! சரி வா.. போலாம்..!!" ப்ரியா அவசரமாக நகர, அசோக் அவள் கையை எட்டிப் பிடித்தான். ஒருமாதிரி ஏக்கமாக பார்த்தான். "என்ன அசோக்..??" ப்ரியா இமைகள் படபடக்க கேட்டாள். "ஒ..ஒண்ணுல்ல ப்ரியா.. வா.. போலாம்..!!" அசோக் தடுமாற்றமான குரலில் சொன்னான். இருவரும் அவசரமாய் நடை நடந்து, மீட்டிங் ஹாலை அடைந்தனர். உள்ளே நுழைந்தனர். ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியுள்ள பிரம்மாண்டமான ஹால் அது. அதற்குள்ளாகவே நிரம்பி வழிந்தது. மேடையில் இடப்பட்டிருந்த இருக்கைகளில், அவர்களுடைய டீம் அங்கம் வகிக்கிற நார்த் அமெரிக்கன் டெலிவரி யூனிட்டில், முக்கியமான பதவிகளை வகிக்க கூடியவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். பால கணேஷும் அதில் ஒருவர். ஏற்கனவே ஒருவர் வரவேற்புரையை ஆற்ற ஆரம்பித்திருந்தார். அசோக்கும், ப்ரியாவும் நகர்ந்து நகர்ந்து.. ஒரு மூலையில் அருகருகே காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டார்கள்..!! இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த ரவிப்ரசாத், இவர்களை திரும்பி பார்த்து, கட்டிவிரலை உயர்த்திக்காட்டி புன்னகைத்தான்..!! இவர்கள் பதிலுக்கு ஒரு புன்னகையை வீசிவிட்டு, மேடை மீது பார்வையை வீசினார்கள்..!! நார்த் அமெரிக்கன் டெலிவரி யூனிட்டில் இவர்களை தவிர இன்னும் எக்கச்சக்கமான டீம்கள் இருக்கின்றன. எல்லா டீமிலும் உள்ளவர்கள்தான் ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கை இப்போது நிறைத்திருந்தனர். அசோக் சொன்னமாதிரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த மீட்டிங் நடக்கும். டெலிவரி யூனிட்டில் இந்த மூன்று மாதங்கள் நடந்த முக்கியமான விஷயங்களை, மேனேஜ்மன்ட் எம்ப்ளாயிக்களோடு பகிர்ந்து கொள்ளும். மேஜர் ஆபரேஷன்கள்.. கிடைத்த லாபங்கள்.. அடுத்த மூன்று மாதங்களுக்கான திட்டங்கள்.. இவையெல்லாம்தான் இந்த மீட்டிங்கின் சாராம்சங்கள்..!! ஒரு மணி நேரத்தும் மேலாக எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அசோக்கின் மனம் அவர்கள் பேச்சிலே லயிக்கவே இல்லை. அவனுடைய எண்ணம் முழுவதும், ப்ரியாவுடனான தனிமையையே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி பக்கவாட்டில் அமர்ந்திருந்த ப்ரியாவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டான்..!! ஒன்றரை மணி நேரம் ஆகி.. எல்லோரும் கட்டுப்படுத்த முடியாமல் கொட்டாவி விட ஆரம்பித்த நேரத்தில்தான்.. கம்பனியின் சீனியர் வைஸ் பிரசிடன்ட்.. மைக் பிடித்து அந்த அறிவிப்பை மேற்கொண்டார்..!! அதன் தமிழாக்கம்..!!"இப்போ அவார்ட் டைம்..!! பெர்ஃபார்மர் ஆப் திஸ் குவார்ட்டர்..!! ரீசண்டா நம்ம பெங்களூர் டீம் ஒன்னு.. யூ.எஸ்ல இருக்குற நம்ம க்ளயன்ட்டுக்கு.. ஒரு ஃப்ரேம்வோர்க் டெலிவர் பண்ணினாங்க..!! அதுல நம்ம டெவலப்பர் ஒருத்தர் டிசைன் பண்ணின காம்பனன்ட்டை.. 'தி பெஸ்ட்..!!' அப்டின்னு க்ளையன்ட் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க..!! அவங்க நம்மோட புது க்ளையன்ட்.. அவங்ககிட்ட இருந்து நாம இன்னும் எக்கச்சக்கமான ப்ராஜக்ட்ஸ் எதிர்பார்த்துட்டு இருக்கோம்.. இந்த மாதிரி ஒரு க்ரிட்டிகல் நேரத்துல.. நம்ம கம்பனி மேலேயே அவங்களுக்கு நல்ல கான்ஃபிடன்ட் வர்ற அளவுக்கு.. அந்த காம்பனன்ட் டிசைன் இருந்திருக்கு..!! அது மட்டும் இல்ல.. அவங்க கொடுத்த ஃபீட்பேக் வச்சு.. இங்க இருக்குற நம்ம ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்கும் அதை அனுப்பி வச்சோம்..!! அவங்களும் அதை பெஸ்ட் டிசைன்னு சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க..!! இனிமே அந்த காம்பனன்ட்டை நம்மோட நெறைய ப்ராஜக்ட்ஸ்ல யூஸ் பண்ணப்போறோம்.. நமக்கு கிடைச்சிருக்குற பெரிய சொத்தா அந்த காம்பனன்ட்டை கம்பெனி ட்ரீட் பண்ணுது..!! இன்னைக்கு இந்த அவார்டும்.. அந்த காம்பன்ட் டிசைன் பண்ணின டெவலப்பருக்குத்தான் போகப் போகுது..!! அவங்க பேரை நான் வாசிக்கலாமா..??" என்று நீண்ட பேச்சுக்கு ஒரு சிறு ப்ரேக் கொடுத்தவர், அப்புறம் பெரிய குரலில் கத்தினார்.

"மிஸ் ப்ரியா ஃப்ரம் யூ.பி.ஸி டீம்..!!!!! கேன் யூ ப்ளீஸ் கம் ஆன் டு த ஸ்டேஜ் ப்ளீஸ்..?? எவ்ரிபடி.. ப்ளீஸ் கிவ் ஹர் எ பிக் ஹேன்ட்..!!!!!" அவ்வளவுதான்..!! அந்த ஹாலில் கைதட்டல் ஓசை காதைப்பிளந்தது..!! ப்ரியா இன்ப அதிர்ச்சியில் வாயை ஆ'வென பிளந்தாள்..!! ரவிப்ரசாத் மீண்டும் பின்னால் திரும்பி புன்னகைத்தான்..!! அருகில் அவளை அடையாளம் கண்டுகொண்டவர்கள், அவளுக்கு கைகொடுத்து வாழ்த்து சொன்னார்கள்..!! 'போ.. போ.. ஸ்டேஜுக்கு போ..' என்று அவளை கிளப்பி விட்டார்கள்..!! அவள் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்..!! ப்ரியாவுக்கு பட்டென ஒரு புது உலகத்துக்குள் புகுந்து விட்ட மாதிரியான உணர்வு..!! நடப்பெதல்லாம் கனவு போல ஒரு தோற்றம்..!! சுற்றி என்ன இருக்கிறது என்று கூட அவள் பார்வையில் படவில்லை.. அருகில் இருந்த அசோக்கும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை..!! எந்திரம் மாதிரி மேடையை நோக்கி விறுவிறுவென நடந்து சென்றாள்.. இல்லை இல்லை.. மிதந்து சென்றாள்..!! அசோக் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான்..!! அவனை சுற்றி நடப்பதை அவனால் நம்பவே முடியவில்லை..!! தன்னுடைய மூளையை மிகவும் கஷ்டப்படுத்தி உழைத்து.. தான் உருவாக்கிய ஒரு விஷயத்தை.. இன்னொரு பெண்ணின் உழைப்பாக கருதி.. எல்லோரும் கை தட்டுகிறார்கள்.. பாராட்டுகிறார்கள்..!! அவன் பேயறைந்த மாதிரியான முகத்துடன்.. இன்னும் தொடர்ந்து கை தட்டிக் கொண்டிருப்பவர்களை.. தலையை திருப்பி திருப்பி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவார்ட் கொடுத்து முடித்த சிறிது நேரத்திலேயே மீட்டிங்கும் முடிந்தது. அதன்பிறகும் விடாமல், ஆளாளுக்கு ப்ரியாவிடம் சென்று அவளுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து பேசியவாறே இருந்தார்கள். ப்ரியாவும் எல்லாரிடமும் முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், எளிருகள் தெரிய சிரித்தவாறு பேசிக்கொண்டிருந்தாள்.அசோக் ப்ரியாவை நெருங்கி அவளுடன் பேசலாமா என நினைத்தான்..!! ஆனால் என்னவென்று சொல்ல இயலாத ஒரு புதுவித உணர்வு, இப்போது அவன் மனதைப்போட்டு பிசைந்து, அவனை நெருங்கவிடாமல் செய்தது..!! தூய்மையாக இருந்த அவனது மனக்கம்ப்யூட்டரில்.. ஈகோ எனும் வைரஸ் இப்போது விழுந்து.. துடித்துக் கொண்டு கிடந்தது..!! நெருங்க நினைத்தவன், விலகி நடந்தான்..!! ஐந்தரை வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த அசோக்-ப்ரியா நட்பில்.. அவர்களே எதிர்பாராமல்.. அவர்களையும் அறியாமல்.. விழுந்த முதல் விரிசல் அது..!!

ஐ ஹேட் யூ, பட்.. 2

அத்தியாயம் 3 அடுத்த பத்தாவது நிமிடம், அசோக் அவர்களுடைய வீடு இருக்கும் தெருமுனையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நின்றிருந்தான். தேநீரையும் சிகரெட்டையும் அப்போதுதான் சுவைத்து முடித்திருந்தவன், புகையிலை தீர்ந்து போன சிகரெட் துண்டை கீழே போட்டு ஷூ காலால் மிதித்து நசுக்கினான். ஹெல்மட் எடுத்து தலைக்கு கொடுத்துவிட்டு, தனது பஜாஜ் அவெஞ்சரில் ஏறி அமர்ந்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து நிதானமாக செலுத்தியவன், அவுட்டர் ரிங் ரோடை அடைந்து வலது பக்கம் திரும்பியதும், ஆக்சிலரேட்டரை திருகி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சில்க் போர்ட் நோக்கி பறக்க ஆரம்பித்தான். செல்வி சொன்னது போல, அசோக் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன்தான். விவசாயம்தான் அவர்களது குடும்பத்தொழில். கிராமத்து பள்ளியில் படித்திருந்தாலும், படிப்பில் ரொம்ப கெட்டி. மதுரையின் புறப்பகுதியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில்தான் இளநிலை பட்டப்படிப்பை முடித்தான். டிக்ரி முடித்ததுமே பெங்களூர் வந்து நண்பர்களுடன் அறை எடுத்து தங்கிக்கொண்டான். அவனுடய அறிவுக்கும் திறமைக்கும் உடனே வேலை கிடைத்தது. ப்ரியாவிடம் ஏமாந்த அதே கம்பெனிதான்..!! ஃப்ரெஷராக ஜாயின் செய்தவன், இன்னும் அதே கம்பெனியில்தான் வேலை பார்க்கிறான்.

காலேஜ் முடிக்கும் வரை ஷை டைப்பாக இருந்தவன், பெங்களூர் வந்த பிறகு ஹை டைப்பாக மாறிவிட்டான். பெண்களிடம் பேசுவது என்றாலே வெட்கத்தில் நெளிபவன், இப்போதெல்லாம் 'யூ நோ வாட்.. யூ லுக் ஆவ்ஸம் டுடே..' என்று பெண்களிடம் வசீகரமாக வழிகிறான். கிராமத்தில் கையால் அள்ளி கூழ் குடித்து வாய் வழியாக ஒழுகவிட்டவன், இப்போது நைஃபால் கட் செய்ததை, ஃபோர்க்கால் குத்தி ஸ்டைலாக வாய்க்குள் திணித்துக் கொள்கிறான். கிழிந்த டவுசரின் வழியே இளிக்கும் அவனது பின்புறம், இப்போது லீவைஸ் ஜீன்ஸ்தான் அணிகிறது. பெங்களூரும், IT கம்பெனி வேலையும் அவனை நிறையவே மாற்றிவிட்டது எனலாம். இப்போது அவன் கொடுக்கிற பில்டப்புகளை எல்லாம் பார்ப்பவர்கள், அவன் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் என்று சொன்னால் நம்பமாட்டாகள். சற்றுமுன் அண்ணியிடமும், அண்ணனிடமும் அவன் பேசியதை வைத்து அவனுடைய குணத்தை ஓரளவு உங்களால் கணிக்க முடியும் என்று நினைக்கிறேன். பொதுவாக கூலான மென்டாலிட்டி உடையவன்தான். அவனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அவனுக்கு பிடிக்காத பாதையில் பயணிக்கும்போதுதான், குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொள்வான். உடன் இருப்பவர்களை தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவன். 'ஈகோ புடிச்ச பய..!!' என்று செல்வி அவனை திட்டியதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ம்ம்ம்.. செல்வி என்றதும்தான் நினைவு வருகிறது..!! சற்றுமுன் அவளிடம் பேசுகையில், 'அதெல்லாம் அவளைப்பத்தி எனக்கு நல்லா..' என்று இழுத்துவிட்டு பாதியில் நிறுத்தினானே.. அந்த 'அவள்'.. அதோ பஸ் ஸ்டாப்பில் மணிக்கட்டை திருப்பி திருப்பி பார்த்தவாறு, முகத்தில் கொஞ்சம் டென்ஷனோடு நிற்கிறாளே.. அதே ப்ரியாதான்..!! தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட அசோக், வண்டியின் வேகத்தை உடனே குறைத்து, அவளுக்கு முன்பாக ப்ரேக் அடித்து நிறுத்தினான். "ஹேய்.. லூசு.. இன்னும் ஆபீஸ் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்குற நீ..??" அசோக் ஹெல்மெட் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டவாறு, ப்ரியாவை பார்த்து புன்னகையுடன் கேட்டான். அவனை பார்த்ததும் பட்டென பரவசமான ப்ரியாவின் முகம், 'லூசு...' என்று காதில் வந்து விழுந்ததும் பொசுக்கென சுருங்கிப்போனது. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு, முகத்தில் கொஞ்சம் முறைப்புடன், அவசரமாய் அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். சற்றே கிசுகிசுப்பான குரலில் சொன்னாள். "ப்ச்.. எத்தனை தடவை உனக்கு சொல்றது அசோக்..!!" "என்னது..??" "இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு லூசுன்னு கூப்பிடாதன்னு..!!" அடுத்தவர்கள் காதில் விழாதவாறு சன்னமான குரலிலேயே சொன்னாள். "ஹேய்.. ஸாரி ப்ரியா.. உன்னை அப்டியே கூப்பிட்டு கூப்பிட்டு.. என் கண்ட்ரோல் இல்லாம் தானா வந்துடுது..!!" "ப்ச்.. உனக்கு வேணும்னா.. நாம தனியா இருக்குறப்போ கூப்பிட்டுக்கோ.. இப்படி அடுத்தவங்க முன்னாடி கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத..!!" "சரி சரி.. இனி கூப்பிடலை.. போதுமா..??" அசோக் சற்றே கெஞ்சலாக சொல்லவும், "ம்ம்ம்..!!" ப்ரியாவும் சற்று கோவம் தணிந்தாள். "சரி கேட்டதுக்கு பதிலே சொல்லல..?? ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்டு..??" "லேட்டுலாம் ஒன்னும் இல்ல.. நான் எப்போவும் போல வந்துட்டேன்.. பஸ்தான் இன்னும் காணோம்..!!" "ஓ.. கோரமங்கலால ஏதாவது ட்ராஃபிக்கா இருக்கும்னு நெனைக்கிறேன்..!!" "என்ன எழவோ.. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் லேட் ஆனது இல்ல..!!" "சரி வா.. பைக்ல ஏறு.. போலாம்..!!" அசோக் கேஷுவலாக சொல்ல, ப்ரியா பட்டென அமைதியானாள். அவளுடைய உடலில் உடனடியாய் ஒரு பதற்றம். அவனுடைய முகத்தில் இருந்து பார்வையை நகர்த்தி, தலையை லேசாக குனிந்து கொண்டாள். இடது கை விரல் நகத்தை, வலது கை விரல் நகத்தால் கீறினாள். கீறிக்கொண்டே ஓரக்கண்ணால் அசோக்கை பார்த்தாள். அவளுடைய இதயத்துடிப்பு இப்போது சற்றே எகிறிப் போயிருப்பதை அவளால் உணர முடிந்தது. "ஹேய்.. என்னாச்சு..??" அசோக் புரியாமல் கேட்டான். "இல்ல வேணாம்.. நீ போ.. நான் பஸ்லயே போயிக்கிறேன்..!!" ப்ரியா மெல்லிய குரலில் சொன்னாள். "ஏன்..??" "ப்ச்.. வேணான்னு சொல்றேன்ல..??" "அதான் ஏன்னு கேக்குறேன்..?? என்னவோ புதுசா என் கூட பைக்ல வரப்போறவ மாதிரி வேணாம்னு சொல்ற..?? வழக்கமா நாம போறதுதான..??" "அதனாலதான் வேணாம்னு சொல்றேன்..!!" "இல்ல.. புரியலை..!!" "இப்போலாம் ஆளாளுக்கு என்னன்னவோ கேக்க ஆரம்பிச்சுட்டாங்க அசோக்..!!" "என்ன கேக்குறாங்க..??" அசோக் குழப்பமாய் கேட்க, ப்ரியா சில வினாடிகள் தயங்கிவிட்டு அப்புறம் மெல்ல சொன்னாள். "உ..உனக்கும் அசோக்கும் அப்படி என்னடி மேட்டருன்னு..!!" ப்ரியா அப்படி சொன்னதும், இப்போது அசோக் அப்படியே அமைதியாகிப் போனான். குழப்பமாய் இருந்த அவனது முகத்தில் இப்போது ஒரு குறுகுறுப்பு. அவனாலும் இப்போது ப்ரியாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவனும் தலையை கொஞ்சமாய் கவிழ்த்துக் கொண்டான். ப்ரியா நகத்தை கீறினாள் என்றாள், இவன் இஞ்சின் அணைக்கப்பட்ட பைக்கின் ஆக்சிலரெட்டரை பிடித்து முறுக்கினான். பிறகு தடுமாற்றமான குரலில் கேட்டான். "அ..அதுக்கு நீ என்ன சொன்ன..??" அவனுடைய பார்வை வேறெங்கோ திரும்பியிருந்தாலும், அவனது காதுகள் ப்ரியாவின் பதிலை தெரிந்து கொள்ள கூர்மையாக காத்திருந்தன. ப்ரியாவோ அவனை விட கில்லாடி என்பதை காட்டினாள். "நான் சொன்னது இருக்கட்டும்.. உன்கிட்ட கேட்டிருந்தா நீ என்ன சொல்லிருப்ப..??" "ப்ச்.. நீ என்ன சொன்னேன்னு சொல்லு மொதல்ல..!!" "இல்ல இல்ல.. நீ என்ன சொல்லிருப்பேன்னு சொல்லு..!!" "நா..நான்.." அசோக் திணற, "ம்ம்.. சொல்லு.." சற்றுமுன் அவனிடம் இருந்த ஆர்வம் இப்போது ப்ரியாவிடம். அசோக் இப்போது தடுமாறினான். ஒரு சில வினாடிகள் அந்த தடுமாற்றம்..!! பிறகு ஒருவழியாய் சமாளித்துக்கொண்டு, ப்ரியாவின் முகத்தை பாராமல் எங்கோ பார்த்தபடி சொன்னான். "நா..நாங்க நல்ல ஃப்ரண்ட்சுன்னு சொல்லிருப்பேன்..!!" அசோக் தட்டு தடுமாறி சொல்ல, ப்ரியாவின் முகத்தில் ஒரு ஏமாற்றம். "ம்ம்ம்..!!" என்றாள் அமைதியாக. "சரி நீ என்ன சொன்ன..??" "நான் என்ன சொல்லிருப்பேன்..?? நானும் அதேயேதான் சொன்னேன்..!!" ப்ரியா சொல்ல, இப்போது அசோக் உள்ளுக்குள் நொறுங்கினான் . "அப்புறம் என்ன.. அதான் ஒன்னும் இல்லைல.. வா.. வந்து வண்டில ஏறு..!!" என்றான் சற்றே எரிச்சலாக. "ஆனா.. மத்தவங்களாம் வேற மாதிரி நெனைக்கிறாங்களே..??" "மத்தவங்க நெனச்சு என்ன பிரயோஜனம்..??" அசோக் அவசரமாய் சொல்லிவிட, "என்னது..??" ப்ரியா விழித்தாள். "மத்தவங்கள பத்தி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்னு சொன்னேன்..!! நாம எப்போவும் போல இருப்போம்.. நீ தேவையில்லாம போட்டு கொழப்பிக்காத..!! வா.. ஏறு..!!" "இல்ல.. நான் வரலை..!!" "சரி.. அப்போ நான் கெளம்புறேன்..!!"அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். கியர் மாற்றி வண்டியை கிளப்பினான். ஆக்சிலரேட்டர் திருகி ஒரு ஐந்தாறு அடிகள் கூட நகர்ந்திருக்க மாட்டான். "அசோக்..!!!!" என்று பின்னால் இருந்து ப்ரியா அழைத்தது கேட்டதும், உடனடியாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். ப்ரியா அவசரமாய் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இவனை நெருங்கியதும், 'என்ன..??' என்பது போல ஏறிட்டு பார்த்தான். ப்ரியா இப்போது மெல்லிய குரலில் சொன்னாள். "நீ சொன்னதுதான் சரின்னு தோணுது..!!"

"நான் என்ன சொன்னேன்..??" "அடுத்தவங்க நெனைக்கிறதை பத்தி நமக்கு என்ன கவலை..??" கேட்டுவிட்டு ப்ரியா அழகாக தனது அதரங்களை விரித்து புன்னகைக்க, அசோக்கிடம் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் இப்போது சுத்தமாய் தளர்ந்து போனது. அவனும் இப்போது ப்ரியாவை பார்த்து புன்னகைத்தான். இருவரும் கொஞ்ச நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய இதழ்களில் சிந்திய புன்னகையும், இப்போது எளிருகள் தெரிகிற அளவுக்கு பெரும் சிரிப்பாய் மாறியது. 'ஹாஹாஹாஹாஹாஹா..!!' என வாய்விட்டு சிரித்தார்கள். அசோக்தான் முதலில் சிரிப்பை நிறுத்திவிட்டு சொன்னான். "ஹாஹா.. ஏறுடி ஸ்டுபிட்... டைமாச்சு..!!" "ம்ம்.. ஏறிட்டேன்டா இடியட்.. கெளம்பு..!!" பின் சீட்டில் அமர்ந்த ப்ரியா அவனுடைய முதுகை குத்தியவாறே சொன்னாள். அசோக் பைக்கை கிளப்பினான். ஓரிரு நிமிடங்களிலேயே ஹோசூர் ரோட்டில் வண்டி மிதமான வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. பெங்களூரின் காலை நேர குளிர் தென்றல் இருவரது முகத்தையும் வருடி, உடலில் ஜில்லென ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது. பைக்கின் வேகம் அதிகரித்ததுமே சற்று தடுமாறிய ப்ரியா, தனது வலது கையை மெல்ல உயர்த்தி அசோக்கின் தோளைப் பற்றிக் கொண்டாள். அசோக்கின் நெருக்கம் ஆணுடைய வாசனையை அவளுடைய நாசிக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அவனுடைய முதுகையும், கழுத்தையுமே வெறித்துப் பார்த்தவாறு பயணித்தாள். ப்ரியாவின் ஸ்பரிசம் அசோக்கிற்கு இதமாக இருந்தது. பைக்கின் ரியர் வியூ மிரரில் அரைகுறையாக தெரிந்த அவளுடைய முகத்தை, அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்தவாறே பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருந்தான். அசோக்கும் ப்ரியாவும் ஒரே நாளில்தான் இந்த கம்பெனியில் சேர்ந்தார்கள். சேர்ந்த அன்றே 'ஹாய்..!!' என்று ஃபார்மலாக புன்னகைத்தவாறு அறிமுகமாகிக் கொண்டார்கள். அன்று ஆரம்பித்த நட்பு, ஐந்தரை வருடங்களில் இப்போது ஆழமாய் வேர் விட்டிருக்கிறது. முதல் நாள் அறிமுகத்துக்கு அப்புறம், முதல் ஆறு மாதங்களுக்கு இருவரும் ஒன்றாகவே ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தார்கள். ஒரே டெவலப்மன்ட் டீமில் இடம்பெற்றார்கள். அசோக் டெக்னிக்கலாக ரொம்ப ஸ்ட்ராங்.. ப்ரியாவுக்கோ அதுதான் வீக்..!! தன்னுடைய வேலைகளில் பிரச்னை வரும்போதெல்லாம் ப்ரியா அசோக்கின் உதவியையே நாடுவாள். அவனும் அந்த பிரச்னையை சால்வ் செய்து, அவளுக்கு உதவுவான். ஐந்தரை வருடங்களாக இந்தக்கதைதான் நடந்து கொண்டிருக்கிறது. ப்ரியாவும் 'கூல் ப்ரியா.. கூல்..' என்று கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாள். ப்ரியா ஒரு 'வெத்து வேட்டு.. வெட்டி ஸீன்..' என்று வெகுசீக்கிரமே புரிந்துகொண்ட வெகுசிலரில் அசோக் முதன்மையானவன். ப்ரியாவும் சற்றுமுன் அப்பாவிடம் ப்ளேடு போட்டது மாதிரி எல்லாம் அசோக்கிடம் ப்ளேடு போட மாட்டாள். 'ஒபாமா என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?' என்று அசோக்கிடம் கேட்டால், 'உன்னை இப்படி லூசு மாதிரி உளற சொல்லிருக்காரா..?' என்று அவன் திருப்பி கேட்பான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அசோக்கை அவளுக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்களிடம் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள நினைக்கிற ப்ரியா, அசோக் தன்னை 'லூசு..!!' என அழைப்பதை அனுமதித்திருக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அசோக்கிற்கும் ப்ரியாவை மிகவும் பிடிக்கும் என்று தனியாக நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அண்ணியிடம் அவன் உளறியதில் இருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் எல்லா விஷயங்களும் நன்றாக ஒத்துப்போனது. இந்த ஐந்தரை வருடங்களில் அவ்வப்போது சின்ன சின்ன செல்ல சண்டைகள் வந்திருக்கிறதே ஒழிய, பெரிதாக பிரச்னை வந்து அவர்கள் பேசாமல் இருந்தது இல்லை. நல்ல நட்பின் உண்மையான சந்தோஷத்தை இருவரும் நன்றாகவே அறிந்து உணர்ந்திருந்தார்கள். நட்பில் ஊறித் திளைத்திருந்த அவர்களுடைய மனங்கள் இரண்டும், இப்போது அந்த நட்பையும் தாண்டி செல்லலாமா என தடுமாற ஆரம்பித்திருக்கும் சமயம்..!! எலக்ட்ரானிக் சிட்டி பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்பாகவே இடது புறம் செல்கிற சாலையில், பரந்து விரிந்திருக்கும் அந்த சாப்ட்வேர் கம்பெனியின் வளாகம்..!! அசோக்கும், ப்ரியாவும் ஐந்தரை வருடங்களாக வேலை பார்க்கிற கம்பெனியின் தலைமையகம்..!! வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பெரிதான தாக்கத்தை அளிக்காது.. உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும்.. அது ஒரு தனி உலகம் என்று..!! உலகின் எல்லா மூலைகளிலும் தங்கள் வியாபரத்தின் வேர் விட்டிருக்கிறார்கள்..!! மொத்த எம்ப்ளாயிகளின் எண்ணிக்கை போன வருடம்தான் ஒரு லட்சத்தை தாண்டியது..!! கம்பெனியின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்கிறதே ஒழிய, சரிவென்பதே கிடையாது..!! கம்பனி காம்பவுண்டுக்குள் பைக்கில் நுழைந்த அசோக்கும், ப்ரியாவும்.. எதிர்ப்பட்ட செக்யூரிட்டியிடம் தங்கள் அடையாள அட்டைகளை உயர்த்தி கட்டினார்கள்..!! அட்டையை பார்த்த செக்யூரிட்டியும், வணக்கம் தெரிவித்து வழிவிட்டு ஒதுங்கி நின்றான். பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் இட்ட அசோக், "அப்டியே கேஃப்ட்டீரியா போயிட்டு போகலாம் ப்ரியா..!!" என்றான். "ஏண்டா.. இன்னும் சாப்பிடலையா நீ..??" "இல்ல..!! நீ சாப்டியா..??" "ம்ம்.. நான் சாப்டேன்..!! ஏன்.. நீ வீட்ல சாப்பிட்டு வர மாட்டியா..??" "சாப்டுவேன்.. இன்னைக்கு புடிக்கலை.. அதான் ஆபீஸ்ல சாப்டுக்கலாம்னு வந்துட்டேன்..!! போலாமா.. கம்பெனி தர்றியா..?? " "ம்ம்ம்.. ஓகே..!!" ப்ரியா மறு பேச்சே பேசாமல் ஒத்துக்கொண்டாள். இருவரும் கேஃப்ட்டீரியா நோக்கி நடந்தார்கள். கீழ்த்தளத்திலேயே மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த கேஃப்டீரியா..!! இருபதுக்கும் மேற்பட்ட கவுன்டர்கள்.. ஒவ்வொரு கவுன்டரிலும் ஒவ்வொரு விதமான உணவு.. உலகின் எல்லா மூலைகளிலும் பிரபலமான உணவு வகைகள்.. ஒரே இடத்தில் கிடைக்கும்..!! ஒரு கவுன்ட்டரை அடைந்து அசோக் எக் சான்ட்விச் ஆர்டர் செய்தான்..!! சான்ட்விச் வரும்வரை காத்திருந்தவன், எதேச்சையாக தூரத்தில் பார்வையை வீசினான். இவர்களுடைய டீமில் உள்ள மற்றவர்கள் சிறிது தூரத்தில் இருந்த ஒரு டேபிளை ஆக்கிரமித்திருந்தார்கள். இவனைப் பார்த்து கையசைத்தார்கள். இவனும் பதிலுக்கு கையசைத்து புன்னகைத்தான்..!! சான்ட்விச் வாங்கிவிட்டு வருகிறேன் என்று சைகையாலேயே சொன்னான்..!! அசோக்கும் ப்ரியாவும் அடங்கிய அவர்களது டீம், இந்த ஐந்தரை வருடங்களில் பல க்ளையன்ட்டுகளுக்காக பல ப்ராஜக்ட்களில் வேலை செய்திருக்கிறார்கள். டீமுக்குள்ளும் பல பேர் வந்திருக்கிறார்கள்.. சென்றிருக்கிறார்கள்..!! போன மாதந்தான் ஒரு ப்ராஜக்டை முடித்துவிட்டு, இப்போது அடுத்த ப்ராஜக்டின் வருகைக்காக மொத்த டீமும் காத்துக் கொண்டிருக்கிறது..!! இப்போதைய டீமில் உள்ளவர்களை மட்டும் (அசோக், ப்ரியா தவிர்த்து) கொஞ்சம் குயிக்காக ஒரு பார்வை பார்க்கலாம்..!! ரவிப்ரசாத் - இவன்தான் டீம் லீட். சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இவன் டீமை லீட் செய்கிறான். அதற்குமுன் வேறொரு கம்பெனியில் வேலை பார்த்தவன். இப்போது இந்த கம்பெனியிலும் போன மாதம் பேப்பர் போட்டுவிட்டான். பேப்பர் போட்டுவிட்டான் என்றால் வேலையை ரிசைன் செய்துவிட்டான் என்று அர்த்தம். நோட்டீஸ் பீரியடில் இருக்கிறான். அடுத்த கம்பெனியில் ஜாயின் செய்வதற்கு முன், இன்னும் இரண்டு மாதங்களை இங்குதான் கழிக்க வேண்டும். ரிசைன் செய்துவிட்டதால் ஏனாதானோவென்றுதான் இப்போதெல்லாம் வேலை பார்க்கிறான். ஹரிஹரன் - அசோக், ப்ரியாவுடன் ஆரம்பத்தில் இருந்தே டீமில் இருப்பவன். 'மாமா.. மச்சி..' என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு அசோக்கிற்கு மிகவும் நெருக்கம். அசோக்கைப் பற்றி நிறைய தெரிந்த ஆள் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். ஜாலியான பையன். சென்னையை சேர்ந்தவன். கம்பெனியில் சேர்ந்த காலத்தில் இருந்தே அசோக்கின் தண்ணி பார்ட்னர். இப்போது கொஞ்ச நாளாக இருவரும் சேர்ந்து தண்ணியடிக்கிற ஃப்ரிக்வன்சி வெகுவாக குறைந்து போயிருக்கிறது. அதற்கு காரணம் கீழே..!! கவிதா - இவளும் சென்னைதான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் டீமில் வந்து சேர்ந்து கொண்டாள். திருமணமானவள். ஒரு வருடத்திற்கு முன்புதான் கழுத்தில் தாலி வாங்கிக்கொண்டாள். கலகலப்பாக பேசுவாள்.. கணவனிடம் மட்டும் கொஞ்சம் கடுகடு..!! இவளுடைய கணவன் வேறு யாரும் இல்லை.. மேலே பார்த்த ஹரிஹரன்தான்..!! சென்னையில் வேலை பார்த்தவள், கணவனின் சில பல முயற்சிகளுக்கு அப்புறம்.. இப்போது இந்த கம்பெனியில்..!! அசோக்கும் ஹரியும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி தண்ணியடிக்க முடியாமல் போனதற்கு இவள்தான் காரணம்..!! 'ஏன்தான் இவளை இதே கம்பெனில சேத்துவிட்டனோ.. எந்த நேரமும் என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கா மச்சி.. ஒரே டார்ச்சரா இருக்குடா..!!' என்று ஹரி அசோக்கிடம் அடிக்கடி நொந்து கொள்வதற்கும் இவளே காரணம்..!! கோவிந்த் - கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் இவனுக்கு சொந்த ஊர். ஒரு வருடத்திற்கு முன்பாக கம்பனியில் சேர்ந்தவன். ஒரு வருடத்தில் பல டீம்களுக்கு சென்று, ஒரு மாதத்துக்கு முன்பாக இந்த டீமில் வந்து சேர்ந்து கொண்டான். அமெரிக்காவுக்கு ஆன்சைட் செல்லவேண்டும் என்று ஒரு லட்சியத்துடன் வந்து இந்த கம்பனியில் சேர்ந்தவன். அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்து சேர்த்துக் கொண்ட கம்பனி, இதுவரை அவனை அனுப்பி வைக்கவில்லை. கம்பனி காட்டும் அலட்சியத்தால் அடிக்கடி நொந்து போகும் கோவிந்த், அடிக்கடி வேலையையும் ரிசைன் செய்வான். இந்த ஒரு வருடத்தில் மட்டும் நான்கு முறை பேப்பர் போட்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அவனை சீனியர் மேனேஜர் அழைத்து பேசி, கூடிய சீக்கிரம் அனுப்பி வைப்பதாக உறுதி தந்து (அல்வா கொடுத்து) அவன் போட்ட பேப்பரை, அவனையே திரும்ப வாயில் கவ்விக்கொள்ள சொல்வார். அவனும் அப்பாவியாக கவ்விக்கொண்டு திரும்ப வருவான். இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'ஹேய்.. நான் ஆன்சைட் போறேன்.. ஆன்சைட் போறேன்.. ஆன்சைட் போறேன்..' என்று எல்லோரிடமும் பந்தாவாக சொல்லிவிட்டு சென்றவன், அடுத்த நாளே ஆபீசில் எல்லோருக்கும் முன்பாக வந்து அமர்ந்திருந்தான். மும்பை வரைக்கும் சென்றவனை 'ப்ராஜக்ட் கேன்சல் ஆயிடுச்சு... திரும்ப வந்துடு..' என்று திரும்ப வரவழைத்திருந்தார்கள். 'என்ன கொடுமைடா இது கோவிந்தா..??' என்று எல்லோரும் அவனை கிண்டல் செய்தார்கள். இங்க்லீஷ் கம்யூனிகேஷனில் இவன் கொஞ்சம் வீக்.. கொஞ்சம் திக்கி திக்கி பேசுவான்.. டீமுக்கு புதியவன் என்பதால் யாரும் இவனுடன் அதிகமாக ஒட்டுவது இல்லை.நேத்ரா - டீமில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் நான்காவது ஆள். கன்னடம் பேசுகிற ஊரில், தமிழர்கள் நிறைந்த டீமில் தனியாக மாட்டிக்கொண்ட ஒரே கன்னடத்துப் பெண். தமிழ் நன்றாக புரியும் இவளுக்கு. ஓரளவு பேசவும் செய்வாள். இருந்தாலும், முடிந்தவரையில் கன்னடத்துக்காக மிகவும் சப்போர்ட் செய்து பேசுவாள். 'தமிழை விட கன்னடம்தான் தொன்மையானது.. ஆதாரம் என்னிடம் இருக்குறது.. காட்டவா..??' என்று அடித்து பேசுவாள். வேலை விஷயத்தில் சராசரி. ஹிந்திப்பாடல் பிரியை. எந்த நேரமும் ஏதாவது ஹிந்திப்பாடலை முனுமுனுத்துக்கொண்டே இருப்பாள். அசோக்கிற்கு இவளை சீண்டுவது என்றால் அலாதிப்ரியம். "மே ஷாயர் தோ நஹி.. மகர் ஏ ஹஸீ.." என்று பாபி படப்பாடலை நேத்ரா மிக சீரியஸாக உருகி உருகி பாடிக்கொண்டிருப்பாள். "மைக்கேல் ஹஸீயா.. டேவிட் ஹஸீயா..??" என்று சிரிக்காமல் கேட்பான் அசோக். "ஐயே.. ப்ராந்தா.." என்று அவனை கன்னடத்தில் திட்டுவாள் நேத்ரா. இப்போது அந்த டேபிளில் ரவிப்ரசாத் தவிர்த்து மற்ற அனைவரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கமாக கோவிந்த் இவர்களுடன் காணக்கிடைக்க மாட்டான். இன்று அதிசயமாக இவர்களுடன் ஐக்கியமாகி இருந்தான். "ஹாய் கைஸ்.." என்றவாறு அசோக்கும் ப்ரியாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். "ஹேய் மச்சி.. பக் மீட்டிங் ரெக்வஸ்ட் அனுப்பிருக்கார்டா..!!" என்றான் ஹரி அவர்கள் அமர்ந்ததுமே. "என்னவாம்..??" சாண்ட்விச்சை கடித்துக்கொண்டே கேட்டான் அசோக். "அந்த ப்ராஜக்ட் சைன் பண்ணிட்டானுக போல இருக்கு..!!" "கிழிஞ்சது.. பக் ஒன்றை மணி நேரம் மொக்கை போட்டே கொல்வானே..!!" பக் என்று அவர்கள் குறிப்பிடுவது அவர்களது சீனியர் மேனேஜர் பாலகணேஷ். வட அமெரிக்க கண்டத்தின் எல்லா க்ளையண்டுகளையும் அவர்தான் மேனேஜ் செய்கிறார். அவருடைய முன்னிலையில் பாலா என்று பாசமாக கூப்பிடும் இவர்கள், அவர் இல்லாத போது பக் என்று நக்கலாக குறிப்பிடுவதுதான் வழக்கம். "நல்ல நிக் நேம் வச்சிருக்கீங்கடா அவருக்கு..!! ஹாஹா..!!" என்று கவிதா சிரிக்கவும், அவர்களுடைய பேச்சு வேறு திசையில் திரும்பியது. புதுவிதமான, கிரியேட்டிவான பட்டப்பெயர்களை பற்றி அனைவரும் பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் ஹரி திடீரென சொன்னான். "அசோக்குக்கு காலேஜ்ல சூப்பரா ஒரு நிக் நேம் வச்சிருக்காங்க தெரியுமா..?? அன்னைக்கு அவன் காலேஜ் இயர் புக் பாத்தப்போத்தான் எனக்கே தெரிஞ்சது..!! சும்மா சொல்லக்கூடாது.. சூப்பரான பேரா வச்சிருக்கானுக.. ஹாஹா..!!" என அவன் சிரிக்கவும், "ஹேய்.. என்னடா அது.. சொல்லு.. சொல்லு..!!" என்று அனைவரும் ஆர்வமானார்கள். "ஏய்.. வேணாண்டா ஹரி.. சும்மா இரு..!!" என அசோக் டென்ஷனானான். "ஹேய்.. போடா.. நான் சொல்லப்போறேன்..!!" என்று மிஞ்சினான் ஹரி. "சொல்லப்போறியா.. சரி சொல்லிக்கோ போ..!!" என்றவாறு கண்களை உருட்டி ஹரியை முறைத்தான் அசோக். அவனுடைய உஷ்ணப்பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். இப்போது ஹரியின் குரல் பட்டென தடுமாறிப்போய் கெஞ்சலாக ஒலித்தது. "ஹேய்.. சொல்லிக்கிறேண்டா மச்சி.. ப்ளீஸ்..!!" "வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல.. சொல்றேன்றல..?? சொல்லு.. சொல்லிக்கோ..!!" அசோக் முன்பை விட இப்போது அதிகமாக அவனை முறைத்தான். ஹரி இப்போது ஒரு மாதிரி குலை நடுங்கிப் போனவனாய், அசோக்கையே பரிதாபமாக பார்த்தான். அதற்குள்ளாக ஆளாளுக்கு, "ஹேய் சொல்லுடா.. ஹேய் சொல்லுடா..!!" என்று ஹரியை பிய்த்து எடுக்க ஆரம்பித்தனர். சில வினாடிகள் அசோக்கையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்த ஹரி, அப்புறம் "ஹேய்.. ப்ளீஸ்.. அந்த டாப்பிக்கை விடுங்க.. வேற ஏதாவது பேசுங்க..!!" என்று பட்டென பின்வாங்கினான். "அது.. அந்த பயம் இருக்கணும்..!!" என்று கெத்தாக சொன்ன அசோக், சாப்பிட்டு முடித்த காலி பிளேட்டை எடுத்துக்கொண்டே ஹேன்ட்வாஷ் பகுதியை நோக்கி நடந்தான். ப்ரியாவும் எழுந்து அவனுக்கு பின்னால் ஓடிவந்தாள். இருவரும் அவர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு லிப்டில் செல்கையில் ப்ரியா கேட்டாள். "ஹேய் அசோக்.. என்னடா ஆச்சு.. அவன் ஏதோ சொல்ல வந்தான்.. நீ ஏதோ சொன்ன.. அவன் வாயைத்தொறந்தா நீ ஏதோ சொல்லப்போற மாதிரி முறைச்ச..!! கடைசில அவனும் எதுவும் சொல்லல.. நீயும் எதுவும் சொல்லல.. அவன் பேக் அடிச்சுட்டான்.. நீயும் எந்திரிச்சு வந்துட்ட.. என்னடா இதுலாம்..?? இதுக்குலாம் என்ன அர்த்தம்..?? எனக்கு எதுவுமே புரியலை..!!" "ம்ம்ம்.. அர்த்தம் தெரிஞ்சுக்கனுமா..?? சரி சொல்றேன்.. இதுக்குலாம் என்ன அர்த்தம்னா.. என்னைப்பத்தி ஒரு சில ரகசியம் அவனுக்கு தெரியும்னா.. அவனைப்பத்தி பலப்பல ரகசியம் எனக்கு தெரியும்னு அர்த்தம்..!! என் மேட்டரை அவன் சொன்னா அவன் மேட்டர் நாறிப்போயிடும்னு அர்த்தம்..!!" "அடப்பாவிகளா..!! ம்ம்ம்ம்.. சரி.. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள ரகசியம்..?? ம்ம்..??"

"ஹேய் லூசு.. அதான் ரகசியம்னு சொல்றேன்ல..?? அப்புறம் என்னன்னு கேட்டேன்னா என்ன அர்த்தம்..??" "அப்போ.. சொல்ல மாட்டியா..???" "ஹாஹா.. சான்சே இல்ல..!! அந்த ரகசியத்தை நான் காப்பாத்தி வச்சிருக்குற வரைதான் அவன் என் கண்ட்ரோல்ல இருப்பான்.. நானும் கூலா இருக்க முடியும்..!!" "ஏதோ தெலுங்குப்பட வில்லன் மாதிரியே பேசுறடா நீ.. எனக்கு எதுவும் புரியலை..!!" "அடி லூசு..!! ம்ம்ம்.. சரி.. நான் உனக்கு ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொல்றேன்.. கேக்குறதுக்கு உனக்கு பொறுமை இருக்கா..??" "ம்ம்ம்.. சரி.. சொல்லு..!!" "இப்போ.. நாம லைஃப் சந்தோஷமா இருக்கணும்னு வச்சுக்கோ.. மொதல்ல நம்மள சுத்தி இருக்குறவங்கள நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்.. புரியுதா..??" "ம்ம்.. புரியிற மாதிரி இருக்கு.. ஆனா அதை எப்படி பண்றது..?? ஐ மீன்.. எப்படி அவங்களை கண்ட்ரோல்ல வச்சுக்குறது..??" "இரு.. சொல்றேன்..!! எதிராளியை நம்ம அடக்கி ஆளனும்னா.. அதுக்கு ரெண்டு வழி இருக்கு..!! ஒன்னு.. அவனோட பலத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு.. அதுக்கு தகுந்த மாதிரி நம்மோட பலத்தை பெருக்கிக்கிறது...!!" "ம்ம்ம்.. இன்னொன்னு..??" "இன்னொன்னுதான் ஈசியான வழி.. அவனோட பலவீனத்தை தெரிஞ்சுக்கிட்டு.. குத்த வேண்டிய எடத்துல சரியா குத்த வேண்டியது..!!" "அப்டின்னா..???" "ஐயோ.. ப்ரியா..!! ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்கும்.. புரியுதா..?? அந்த வீக்னசை மட்டும் கரெக்டா புடிச்சு.. சரியான நேரத்துல சரியா எடத்துல அடிச்சேன்னு வச்சுக்கோ.." "ம்ம்ம்.." "நீதான் கிங்..!!" "ச்சை.. நான் பொண்ணுடா..!!" "சரி.. குயின்னு வச்சுக்கோ..!! நான் சொல்ல வந்தது புரிஞ்சதா..??" "ம்ம்.. ஏதோ புரிஞ்சது..!!" என்ற ப்ரியா உடனடியாய் அமைதியானாள். சுட்டுவிரல் நகத்தால் நெற்றியை கீறிக்கொண்டாள். அவளது செய்கையின் அர்த்தம் புரியாத அசோக், அவனே கேட்டுவிட்டான். "ஏய்.. என்னாச்சு உனக்கு இப்போ..??" "இல்ல.. உனக்கு என்ன வீக்னஸ்னு யோசிச்சுட்டு இருக்கேன்..!!" "ஹாஹா.. ரொம்ப யோசிக்காத செல்லம்..!! ஐயாவுக்கு வீக்னசே இல்ல... யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது.. நான்தான் எல்லாரையும் கண்ட்ரோல் பண்ணுவேன்.. புரிஞ்சதா..??" "ம்ம்.. ரொம்பத்தான் கான்பிடன்ஸ் உனக்கு..!!" "யூ நோ வாட்..?? கான்சியஸ் மேக்ஸ் கான்ஃபிடன்ஸ்..!!" "வாவ்..!!!!!" ப்ரியா அசோக்கை அதிசயமாகவும், பெருமிதமாகவும் பார்த்தாள்.அன்று முன்பகல் பதினோரு மணி அளவிற்கு அந்த மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலகணேஷ் புதிதாக ஒப்பந்தமாயிருக்கும் ப்ராஜக்ட் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். அவர் எப்போதுமே ஒரு விஷயத்தை சுற்றி வளைத்துத்தான் சொல்வார். நேரடியாக சொல்லக்கூடிய விஷயத்தை கூட, பலப்பல புதுமையான ஆங்கில வார்த்தைகளால் பாலிஷ் செய்து, நீண்ட உரை ஆற்றுவார். மனதில் என்ன நினைத்திருக்கிறாரோ அதை நூறு சதவீதம் வார்த்தைகளில் கொண்டு வரக்கூடிய வல்லமை பெற்றவர். அனைவரும் அவருடைய பேச்சை பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருக்க, பின் வரிசையில் அமர்ந்திருந்த அசோக் மட்டும், தனது ஆண்ட்ராய்ட் செல்ஃபோனில் ஆங்ரிபேர்ட் விளையாடிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தான். பாலகணேஷ் சொல்வதெற்கெல்லாம் வடிவேலு வசனங்களை அவ்வப்போது முனுமுனுத்தான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ப்ரியா, சிரிப்பு சத்தம் வெளியே கேட்டுவிடாமல் இருக்க அவளுடைய வாயை அடிக்கடி பொத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பாலகணேஷுடைய நீண்ட உரையின் தமிழ் சாராம்சத்தையும், அதற்கு அசோக் அடித்த கமெண்ட்டையும் மட்டும் சுருக்கமாக சொல்கிறேன்..!! "அட்லாஸ்ட்.. அந்த யூனியன் பேங்க் ஆஃப் கலிஃபோர்னியா ப்ராஜக்ட் சைன் ஆகிடுச்சு..!!" 'நமக்கு இன்னொரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லுங்க..!!' "நெறய காம்பட்டிஷனுக்கு அப்புறம்.. நம்மாளதான் இதை செய்ய முடியும்னு அவங்க முடிவு பண்ணிருக்காங்க..!!" 'ம்ம்.. இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கு..??' "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. அவங்க நெனைக்கிறதை விட நம்மகிட்ட ரொம்ப ஸ்ட்ராங் டீம் இருக்கு..!!" 'இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணரணமா ஆக்கி வச்சிருக்கீங்க..!!' "ஹேய் ஃபோக்ஸ்.. நான் ஒன்னு சொல்றேன்.. நல்லா நோட் பண்ணிக்குங்க.. இந்த ப்ராஜக்டை சக்சஸ்ஃபுல்லா பண்ணி முடிச்சா.. நாமதான் கிங்..!!" 'உன் ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்குது.. ஃபினிஷிங் சரியில்லையப்பா..!!' "திஸ் இஸ் வெரி க்ரிட்டிக்கல்.. அண்ட் சேலஞ்சிங் வொர்க்..!!" 'ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. இப்போவே கண்ணைக்கட்டுதே..!!!' "ஆக்சுவல் டெவலப்மன்ட் வொர்க் நெக்ஸ்ட் வீக் ஸ்டார்ட் ஆகுது.. அதுக்கு முன்னாடி வீ ஷுட் பீ ப்ரிப்பேர்ட் வித் த ஃப்ரேம்வொர்க்..!!" 'எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது.. ஓகே..??' எல்லாம் பேசி முடித்த பாலகணேஷ், இறுதியாக எல்லோரையும் உற்சாகப்படுத்தும் விதமாக கேட்டார். "வீ ஹேவ் வெரி சேலஞ்சிங் வொர்க் அஹெட்.. ஆர் யூ ரெடி..?? ஷேல் வீ கெட் திஸ் ஸ்டார்ட்டட்..??" அவர் அவ்வாறு உற்சாகம் கொப்பளிக்க கேட்கவும், இப்போது அனைவரும் முஷ்டியை மடக்கி கத்தினார்கள். அசோக்கும் கூட ஆங்ரிபேர்டை ஆஃப் செய்துவிட்டு கத்தினான். "யா..!! லெட்ஸ் ஸ்டார்ட்..!!!!!"அத்தியாயம் 4 "புதுப் ப்ராஜெக்ட்ன்றது, புதுப் பொண்டாட்டி மாதிரி ஃபோக்ஸ்.. ஆரம்பத்துல விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கடைசி வரை புடிக்கவே முடியாது..!!" இது அன்றைய மீட்டிங்கில் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அருளிய தத்துவம்..!! அவர் எப்போதும் இப்படித்தான். எதற்கெடுத்தாலும் ஏதாவது புதிது புதிதாக உதாரணம் யோசிப்பார். குப்புறப் படுத்தா.. மல்லாக்கப் படுத்தா.. என்று தெரியவில்லை. பெண்கள், பெண்டாட்டி, காதல், கல்யாணம்.. இந்த நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் உதாரணங்கள் சொல்ல தேர்ந்தெடுப்பார். கழுத்தில் தொங்குகிற ஐடி கார்டையும், கல்யாணத்தில் கட்டுகிற தாலி கயிறையும் கம்பேர் செய்வார். லைசென்ஸ் என்பார். பவர்ஃபுல் என்பார். பட் டேஞ்சரஸ் என்பார். ஹேண்டில் வித் கேர் என்பார். சில நேரங்களில் அவருடைய அசட்டுத்தனமான கம்பேரிசன்கள் அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வது இல்லை. "ச்ச.. எனக்கு வாச்ச பொண்டாட்டியும் அப்படித்தான் இருக்குறா.. க்ளையன்ட்டும் அப்படித்தான் இருக்கானுக அசோக்..!!" என்பார் திடீரென. "ஏன் பாலா.. என்னாச்சு..??" என்று அசோக் சீரியஸாக கேட்பான். "என்ன பண்ணினாலும் ரெண்டு பெரும் சாடிஸ்ஃபையே ஆக மாட்டேன்றாங்க..!!" என்று எஸ்.ஜே.சூர்யாத்தனமாய் ஒரு ஜோக் அடித்து விட்டு இளிப்பார். 'ஐயே..!!' என்று மனசுக்குள் தலையில் அடித்துக் கொள்வான் அசோக். ஆனால் அன்று அவர் மீட்டிங்கில் சொன்ன தத்துவத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த ப்ராஜக்ட்டுக்கும் ஆரம்ப கட்டம் மிக முக்கியம். அந்தக்கட்டத்தில் ஸ்லிப் ஆகிவிட்டால், அப்புறம் எல்லாக்கட்டமுமே 'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' கணக்காக மாறிவிடும். புதுமனைவியின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டு பேசி தெரிந்து கொள்வது போல, க்ளையன்ட்டின் தேவை, ஆசைகளை மீட்டிங் போட்டு அறிந்து கொள்வது அவசியம். 'எங்களிடம் வேலை பார்ப்பவர்களின் சம்பளக்கணக்கை நிர்வகிக்கிற மாதிரி ஒரு மென்பொருள் வேண்டும்..!!' என்று க்ளையன்ட் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு மென்பொருளை தயாரித்து கொடுப்பதுதான் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனிகளின் வேலை. அதைத்தான் ப்ராஜக்ட் என்கிறார்கள். 'வாழ்க்கைன்றது ஒரு வட்டம்டா..!!' என்று டாக்டர் ஒருவர் சொல்லியிருக்கிறார் அல்லவா..?? அதுபோல மென்பொருள் அபிவிருத்திக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. அதை மென்பொருள் அபிவிருத்தி வாழ்க்கை சக்கரம் என்று தமிழ்ப்படுத்தலாம். அந்த சக்கரத்திற்கு நிறைய வடிவங்கள் இருந்தாலும், அதில் வருகிற முக்கியமான கட்டங்கள் என்றும் மாறாது. அவை மூன்று கட்டங்கள்..!! முதல் கட்டம், ப்ளானிங் - 'எதையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது..!!' என்று வடிவேலுவின் வார்த்தைகளை எல்லா சாப்ட்வேர் கம்பனிகளின் சுவற்றிலும் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டும். அந்த அளவிற்கு முக்கியமானது இந்தக்கட்டம். ரெகயர்மன்ட் கேதரிங், எஸ்டிமேஷன், சாஃப்ட்வேர் டிசைன் எல்லாம் இந்தக்கட்டத்தில்தான் வரும். 'ரெகயர்மன்ட் கேதரிங்' என்றால் க்ளையண்ட்டுக்கு என்ன தேவை என்று விவரமாக விசாரித்து தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொள்ளும்போது தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்ட கடலை எண்ணையை கண்ணாடி சீசாவில் ஊற்றிக் கொண்டிருக்கும்போதே, 'இது நல்லெண்ணைதான..?' என்று கேட்டு நம்மை குழப்புவார்கள். அதற்கெல்லாம் பித்துப் பிடித்துப் போகாதவாறு, முழு சித்தத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம். எஸ்டிமேஷன்தான் பொதுவாக நிறைய தவறு நடக்கிற ஏரியா. ப்ராஜக்டை எப்படியாவது லவட்டிவிட வேண்டும் என்ற பேராசையால், இரண்டு வருடத்தில் முடிக்கவேண்டிய ப்ராஜக்ட்டை, ஆறு மாதங்களில் முடித்து தருவதாக க்ளையன்ட்டிடம் உதார் விட்டு, கம்பனி மேனேஜ்மன்ட் லவட்டிவிடும். பிறகு டெவலப்பர்களும், மேனேஜர்களும் இந்த விஷயத்தில்தான் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பாப்புலரான ஜோக் ஒன்று இருக்கிறது.கொழந்தை வேணும்னா.. ஒரு பொண்ணையும், பத்து மாசம் டைமும் கொடுங்க..!!' ன்னு டெவலப்பர் சொல்வான். 'இல்ல இல்ல.. உனக்கு பத்துப் பொண்ணு தாரேன்.. ஆனா எனக்கு ஒரே மாசத்துல கொழந்தை வேணும்..!!' ன்னு மேனேஜர் சொல்வார். இந்த விஷயத்தில் மேனேஜருக்கும், டெவலப்பருக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அவர் இவர்களை குறை சொல்வார். இவர்கள் அவரை குறை சொல்வார்கள். அதிருப்தியுடனே ப்ராஜக்ட் முடியும்வரை அலைவார்கள். சாஃப்ட்வேர் டிசைன் என்பது, பெரிதாக கோலம் போடுவதற்கு முன்பாக சின்ன சின்னதாக புள்ளி வைத்துக் கொள்கிற மாதிரியான சமாச்சாரந்தான். கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் வரைந்து வைத்துக் கொள்கிற ட்ராயிங்குகள் மாதிரி. க்ளையன்ட்டுகளிடம் விசாரித்து தெரிந்து கொண்ட அவர்களது தேவைகளை மனதில் கொண்டு, உருவாகப் போகிற மென்பொருள் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே தோராயமாக வடிவமைத்துக் கொள்கிற வேலை. புள்ளிகள் சரியாக வைக்கப்படவில்லையெனில், கோலமும் கோணல் மாணலாய் போய் விட கூடிய வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது கட்டம், இம்ப்ளிமண்டேஷன் - வைத்த புள்ளிகளை இணைத்து கோலம் போட ஆரம்பிக்க வேண்டியதுதான். முதல் கட்டத்தில் உருவாக்கிய டிசைனை கொண்டு கோட் எழுதுவதும், அதை டெஸ்டிங் செய்வதும் இந்தக்கட்டத்தில்தான். எல்லா கட்டங்களிலும் இந்த கட்டத்துக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கப்படும். டெவலப்மன்ட் டீமும், டெஸ்டிங் டீமும் அடித்துக் கொள்கிற கட்டம். அதுவரை மாமன் மச்சான் என்று கொஞ்சித் திரிந்தவர்கள், அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல முறைத்துக் கொண்டு எதிரெதிராக க்ராஸ் செய்து கொள்வார்கள். பாட்டெழுதி பேர் வாங்குகிற கூட்டம் டெவலப்பர் கூட்டம் என்றால்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குகிற கூட்டம் டெஸ்டிங் கூட்டம்..!!

மூன்றாவது கட்டம், இன்ஸ்டாலேஷன் - அத்தனை நாளாய் கோட் அடித்து குவித்த குப்பைகளை கொண்டு சென்று, க்ளயன்ட்டின் தலையில் கொட்டுகிற கட்டம். உருவாக்கிய மென்பொருளை க்ளயன்ட்டின் சிஸ்டத்தில் நிறுவவேண்டும். டெப்ளாய்மன்ட்..!! க்ளையண்டும் அவர்கள் பங்கிற்கு ஒரு டெஸ்டிங் டீம் வைத்து மென்பொருளை டெஸ்ட் செய்து கொள்வார்கள். மென்பொருளின் இறுதி வடிவத்தில், பெரும்பாலும் க்ளையண்ட்டுக்கு திருப்தி இராது. 'ஐயையோ.. நாங்க பார்வதி ஓமனக்குட்டன்ல கேட்டோம்.. நீங்க பரவை முனியம்மாவை டெலிவர் பண்ணிருக்கீங்களே..??' என்ற ரீதியில் பதறுவார்கள். இவர்களும் 'ஐயையோ பதறாதீங்கங்க.. கொஞ்சம் மேக்கப் இல்லனா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினா சரியாப் போவும்..' என்ற ரீதியில் சமாளித்து, தலையில் கட்டித் திரும்புவர். சில கில்லாடி சாப்ட்வேர் கம்பனிகள் தொடர்ந்து அந்த மேக்கப் போடும் பணிக்காக, மெயின்டனஸ் காண்ட்ராக்ட் வேறு தனியாக போட்டு துட்டு தீட்டுவார்கள். சரி. இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா..?? காரணம் இருக்கிறது. கதையை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு சாப்ட்வேர் கம்பனி இயங்கும் விதம் பற்றி இந்த அளவிற்காவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்..!! இப்போது இவர்களது ப்ராஜக்ட் இருப்பது ப்ளானிங் ஸ்டேஜில்..!! முதல் கட்ட ரெகயர்மன்ட் கேதரிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ரெகயர்மன்ட் கேதரிங்குக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவிற்கே யாரையாவது நேரிடையாக அனுப்பி வைப்பார்கள். டிசைன் ஆரம்பித்து விட்டார்கள். ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதுதான் இப்போது டீமின் பிரதான வேலை. ஃப்ரேம்வொர்க் என்றால் என்னவென்று எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உருவாக்கப் போகிற முக்கியமான மென்பொருளுக்கு அடித்தளமான மென்பொருள் என்று சொல்லலாம். ஃப்ரேம்வொர்க் சரியாக அமையாமல் போனால், 'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்கு..' கதையாகி விடும். ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதற்கான மொத்த வேலைகளும் டீமில் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு காம்போனன்ட் என்று டிசைன் அண்ட் டெவலப்மன்ட் செய்ய ஆரம்பித்து இப்போது ஒருவாரம் ஓடிவிட்டது. அத்தனை நாளாய் ஜாலியாய் சுற்றித் திரிந்த அனைவரும் இப்போது சைலண்டாகிப் போயிருந்தனர். அவர்கள் வேலை பார்க்கும் தளத்தில் கேட்கும் அரட்டை சத்தம் அறவே வற்றிப் போயிருந்தது. எல்லோரும் தீயாக வேலை பார்த்தார்கள்..!! அசோக் ஆபீஸ் நேரத்தில் வழக்கமாக மூன்று தம் அடிப்பான். ஃப்ரேம்வொர்க் வேலை ஆரம்பித்த பிறகு, அந்த மூன்று ஆறாகிவிட்டது. அன்று மாலை அவன் தம்மடிக்க ஸ்மோகிங் ஏரியா சென்றபோது, அவனுக்கு பின்னாடியே ஹரியும் வந்தான். "எனக்கு ஒரு தம் குடுடா மச்சி.. ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷரா இருக்கு..!!" என்றான் வெறுப்பான குரலில். "என்னடா.. தைரியமா தம்மடிக்க வந்துட்ட..?? உன் வொய்ஃப் இல்லையா..??" கேட்டுக்கொண்டே சிகரெட் எடுத்து நீட்டினான் அசோக். "உன் ஆளும் என் ஆளும் மட்டையை தூக்கிட்டு வெளையாட கெளம்பிட்டாங்க.. அவங்களுக்கும் ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷர் போல..!!" ஹரி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். "உன் ஆளு சரி.. அது யாரு என் ஆளு..??" கேலியாக கேட்டவாறே, அசோக்கும் சிகரெட்டின் தலைக்கு கொள்ளி வைத்தான். "ஏன்.. நெறைய ஆள் வச்சிருக்கியோ.. ப்ரியாவைத்தான்டா சொன்னேன்..!!" ஹரி சொல்லும்போது அசோக்கிற்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 'நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ்னு சொன்னேன்..' என்று ப்ரியா சொன்னது இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது. உடனே முகத்தை ஒருமாதிரி கடுகடுப்பாய் மாற்றிக்கொண்டு சொன்னான். "இங்க பாரு ஹரி.. இப்படிலாம் சொல்லிட்டு திரியாத.. எங்களுக்குள்ள இருக்குறது ஜஸ்ட் ஃப்ரண்ட்ஷிப்.. அவ்ளோதான்..!! புரியுதா..??" அசோக்கின் கோபம், ஹரியை சற்றே மிரள செய்தது. "ஹிஹி.. எனக்கு தெரியும் மச்சி.. உன் ஃப்ரண்ட்ன்றதைதான் உன் ஆளுன்னு சொன்னேன்..!!" என்று சமாளிக்க முயன்றான். "இனிமே ஃப்ரண்ட்னே சொல்லு.. இந்த ஆளு, வாலுன்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்லாம் வேணாம்..!! சரியா..??" "சரிடா சரிடா.. மொறைக்காத..!!" அப்புறம் ஓரிரு நிமிடங்கள் இருவரும் அமைதியாக புகைவிட்டுக் கொண்டிருந்தனர். பாதியில் விட்டு வந்திருந்த வேலையைப் பற்றியே அவர்களது மூளை யோசித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் ஹரியின் செல்போனுக்கு அந்த கால் வந்தது. யார் அழைக்கிறார்கள் என்று எடுத்துப் பார்த்தவனை, உடனே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. பாதி தீர்ந்திருந்த சிகரெட்டை அவசரமாய் கீழே போட்டு நசுக்கிவிட்டு, காலை பிக்கப் செய்தான். "ஆங்.. சொல்லுங் மாமா.." என்றான் பவ்யமாக. ஹரியின் மாமனார் அடுத்த முனையில் இருக்கிறார் என்று அசோக் உடனே புரிந்துகொண்டான். மனைவியைக் கண்டால் அவன் அப்படியே மிரளுவான் என்பது அசோக்கிற்கு தெரியும். ஆனால் மாமனாரிடமும் இப்படி பம்முவான் என்பதை இப்போதுதான் அறிந்து கொள்கிறான். போனில் பேசுவதற்கே சிகரெட்டை கீழே போட்டு அணைக்கிறானே..?? நேரில் பார்த்தால் நெடுஞ்சான் கிடையாக விழுந்து விடுவானோ..?? அசோக் ஹரியை சற்றே ஏளனமாய் பார்க்க ஆரம்பித்தான். அவனோ 'சரிங் மாமா.. சரிங் மாமா..' என்று சலிக்காமல், பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தான். அவரிடம் பேசி முடித்ததும், 'ஹ்ஹ..!!' என்று நிம்மதியாய் ஒருமுறை தலையை உலுக்கினான். ஒரு சில வினாடிகள் நெற்றியைக் கீறியவாறு எதையோ யோசித்தான். அப்புறம் தனது செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே, அலட்சியமான குரலில் சொன்னான். "என் பொண்டாட்டிக்கு ஒரு ஃபோனை போடு மாப்ள..!!" "எதுக்கு..??" அசோக் குழப்பமாக கேட்டான். "போடு.. சொல்றேன்...!!" அசோக் குழப்பமாய் ஒரு பார்வை பார்த்தவாறே, அவனிடமிருந்து செல்போனை வாங்கினான். கவிதாவின் நம்பர் தேடிப்பிடித்து டயல் செய்துவிட்டு, காதில் வைத்துக் கொண்டான். ரிங் போய்க்கொண்டிருந்தது. காத்திருந்த நேரத்தில் ஹரியிடம் கேட்டான். "போட்டாச்சு.. ரிங் போயிட்டு இருக்கு.. என்னன்னு சொல்லு..!!" "அவ அப்பா கால் பண்ணினாரு.. அவகிட்ட பேசணுமாம்.. அவளை கால் பண்ணி பேச சொல்லு..!!" "ஏன்.. அதை நீங்க சொல்ல மாட்டீங்களோ..??" "நான் அவகூட பேச மாட்டேன் மாப்ள.. சண்டை..!!" ஹரி கூலாக சொல்ல, "சண்டையா.. எப்போ..??" அசோக் மெலிதாக அதிர்ந்தான். "நேத்து நைட்டு..!!" ஹரி அவ்வாறு சொன்னதும், அசோக்கிற்கு இப்போது சின்னதாய் ஒரு குழப்பம். "நேத்து நைட்டா..?? காலைல ஒண்ணா பைக்ல வந்தீங்க..??" "ஆமாம்.. வீட்ல ஒரு பைக்தான இருக்கு.. அதான் ஒண்ணா வந்தோம்.. அதுக்காக ஒத்துமையா இருக்கோம்னு அர்த்தமா..?? நீ நல்லா கவனிச்சு பாத்திருந்தா உனக்கு ஒரு மேட்டர் புரிஞ்சிருக்கும்..!!" "என்ன..??" "என்னைக்கும் ரெண்டு பக்கமும் காலை போட்டு உக்காந்துட்டு வருவாள்ல..?? இன்னைக்கு ஒரே சைட் போட்டு உக்காந்திருந்தா.. கவனிச்சியா..??" "அடச்சை.. இதெல்லாம் கவனிக்கிறதுதான் என் வேலையா..?? உங்க ரெண்டு பேருக்கும் வேற பொழப்பே இல்லடா.. எப்பப்பாரு சின்னப்புள்ளைங்க மாதிரி சும்மா சும்மா சண்டை போட்டுக்க வேண்டியது..!!" பிக்கப் செய்யப்படாமலே கால் கட் ஆக, செல்போனை காதில் இருந்து எடுத்துக்கொண்டே அசோக் சொன்னான். "ஐயோ.. இது ஸ்மால் ஃபைட்லாம் இல்ல மச்சி.. பிரச்னை பெருசாயிடுச்சு.. இந்த மாதிரி நாங்க சண்டை போட்டுக்கிட்டதே இல்ல..!!" "ஏன்.. என்ன ஆச்சு..??" "அவளுக்கு ரொம்ப கொழுப்பு மச்சி..!!" ஓஹோ..?? மேல..!!" "நேத்து நைட்டு வெஜ் பிரியாணி பண்ணுனா.. நல்லாவே இல்ல.. என்னடி இவ்வளவு கேவலமா இருக்குன்னு சாதரணமாத்தான் கேட்டேன்.. அதுக்குப்போய் ஆய் ஊய்ன்னு கத்துறா.. நானும் பொறுத்து பொறுத்து பாத்தேன் மச்சி.. ரொம்ப ஓவரா பேசிட்டே இருந்தாளா.. விட்டேன் ஒன்னு கன்னத்துல பளார்ன்னு..!!" ஹரி சீரியசாக சொல்லிக்கொண்டே போக, அசோக் இப்போது தன் தலையை ஒருபக்கமாய் சாய்த்து, கண்களை இடுக்கி அவனை கடுப்புடன் முறைத்தான். அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாத ஹரி, சொன்னதை பாதியில் நிறுத்திவிட்டு, "என்ன மச்சி.. என்னாச்சு..??" என குழப்பமாக கேட்டான். "நீ அறைஞ்ச..??" "ம்ம்ம்.." "உன் பொண்டாட்டியை..??" "ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..??" "மச்சி.. பொய் சொல்லலாம்.. ஆனா பொருந்த சொல்லணும்..!! நான் கூட நெறைய பொய் சொல்வேன்.. ஆனா நம்புற மாதிரி சொல்வேன்..!!" "அப்போ நீ நம்பலையா..??" "போடா கப்ஸா கண்ணா.. இதெல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் கேனயன் இல்ல..!!" "ஹேய் மச்சி.. ப்ராமிஸ்டா..!!" "ஹ்ஹ.. உன் ப்ராமிஸ், பெப்சொடன்ட்லாம் வேற யார்ட்டயாவது போய் பிதுக்கு மகனே..!! மாமனார்ட்டயே இப்படி மட்டையா மடங்குற நீ.. பொண்டாட்டிட்ட எப்படி பம்முவன்னு எனக்கு தெரியாதா..?? என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லவா..??" "எ..என்ன நடந்திருக்கும்..??" "ரொம்ப டயர்டா இருக்குன்னு நேத்து நைட்டு அவ உன்னையே சமைக்க சொல்லிருப்பா.. நீ உனக்கு ரொம்ப புடிச்ச வெஜ் பிரியாணி பண்ணிருக்குற.. ஆர்வத்துல காரத்தை அள்ளி போட்டிருப்ப.. அவ ஏன் இவ்ளோ காரம்னு கேட்டிருப்பா.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருக்காம ஏடாகூடமா ஏதாவது சொல்லிருப்ப.. அவ கடுப்பாயிருப்பா.. கையை முறுக்கிட்டு கும்மு கும்முன்னு நல்லா பன்ச் விட்டிருப்பா..!! அதை அப்படியே உல்ட்டா பண்ணி, இங்க வந்து ஊத்தி விட்டுட்டு இருக்குற..!!" "ஹேய்.. போடா.. நான் உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்குறேன்..!!" "ஹாஹா.. எது உண்மைன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி.. விடு..!!" "சரி நம்பாட்டி போ.. எனக்கு என்ன..?? ஆனா நீ சொன்னதுல ஒன்னு தப்பு..!!" "என்ன..??" "காரம்லாம் நான் எப்போவும் கரெக்டா போட்டிருவேன்.. உப்புதான் கொஞ்சம் தப்பு தப்பா..!!" "ம்ம்.. உப்போ காரமோ.. அவ உன்னை அப்புனது உண்மைதான..??" "ஏய்.. அது வேற இது வேற.. ரெண்டையும் போட்டு கொழப்பாத..!!" ஹரி எரிச்சலாக சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். ஹரியின் முகத்தையே சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். 'வாங்குற அடியையும் வாங்கிக்கிட்டு.. எப்படித்தான் இப்படி வெறப்பா மூஞ்சியை வச்சுக்குறானோ..??' என்று அவன் மனதிற்குள் ஒரு எண்ணம் ஓடியது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறு சொன்னான். "சரி எப்படியோ போ.. அது உங்க குடும்பத்துக்குள்ள நடக்குற குத்து வெட்டு.. அதுல நான் தலையிட விரும்பலை..!!" "ஹ்ம்ம்.. சரி அதை விடு.. அவளுக்கு ஃபோன் போட்டியே.. என்னாச்சு..??" "ரிங் போகுது.. எடுக்கலை..!!" "ஓ..!! அவரும் அதைத்தான் சொன்னாரு..!! வெளையாடுறா போல.. அதான் கவனிச்சிருக்க மாட்டா..!! சரி நீ ஒன்னு பண்ணுறியா..??" "என்ன..??" "நேராவே போய் அவளைப் பாத்து சொல்லிட்டு வந்துடுறியா..?? ப்ளீஸ்..!!" "என்னடா.. வெளையாடுறியா..?? உனக்கென்ன நான் அல்லக்கையா..?? அப்படி என்ன அவசரம்..?? அவ ஆடி முடிச்சுட்டு வரட்டும்.. அப்புறமா சொல்லிக்கலாம்..!!" "ஏய் மச்சி.. ப்ளீஸ்டா.. உடனே போய் சொல்லிட்டு வாடா.. இல்லனா அவ வர்றதுக்குள்ள இந்த ரப்பர் வாயன் பத்து தடவை எனக்கு கால் பண்ணி ரவுசு விடுவான்.!!" "ரப்பர் வாயனா..?? இரு.. அவருக்கு கால் பண்ணி சொல்றேன்..!!" என்றவாறு அசோக் செல்போனை அமுக்க, ஹரி பதறிப்போய் அதை பறித்தான். "டேய்.. சும்மா இருக்க மாட்டியா நீ..??" "ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!! வீட்ல பம்முறது.. வெளில உதார் விட்டுட்டு திரியிறது..!!" "சரிப்பா.. நான் பயந்தாங்கொள்ளின்னு ஒத்துக்குறேன்.. போதுமா..?? அவகிட்ட போய் சொல்லிட்டு வாடா.. ப்ளீஸ்..!!" "நீயும் வா.. ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்..!!" "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மச்சி.. டீபக் போட்டு விட்டு வந்திருக்கேன்.. அப்புறம் சிஸ்டம் அப்படியே ஹேங் ஆகி படுத்துடும்..!! இன்னைக்கு அதை செக்கின் பண்ணனும் வேற.. இல்லனா அந்த ஸ்ப்ரிங்கு மண்டையன் வந்து டாபர் மேன் மாதிரி சவுண்டு விட்டுட்டு இருப்பான்..!! ஒரு அஞ்சு நிமிஷம்தான.. என் செல்லம்ல.. அப்படியே பொடிநடையா போய் சொல்லிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!" ஹரி கெஞ்சலாக சொல்லவும், அசோக் கொஞ்சம் மனம் இளகினான். நேராகவே சென்று கவிதாவிடம் சொல்லிவர ஒத்துக்கொண்டான். இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரி தனது பணியிடம் செல்லும் பாதையில் திரும்ப, அசோக் எதிர் திசையில் நடந்தான்.

கம்பெனி வளாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இல்லையா..?? வளாகத்தின் உட்புறம் நாலாபக்கமும் சிமென்ட்டாலான சாலைகள் அகலமாகவும், நீளமாகவும் ஓடும். சாலையின் ஒருபுறம், காம்பவுண்ட் சுவரை ஒட்டி, கரும்பச்சை நிறத்தாலான ஸ்டீல் தகடுகள் வேயப்பட்ட கொட்டாரம் இட்டிருப்பார்கள். கொட்டாரத்தின் அடியில் கொஞ்சம் கூட கேப் இல்லாமல், கார்களும் பைக்குகளும் பார்க் செய்யப்பட்டிருக்கும். சாலையின் மறுபக்கத்தில், இளம்பச்சை நிற இலைகள் கொண்ட பெயர் தெரியாத தாவரம், இடுப்பளவு உயரத்திற்கு நெருக்கமாக நடப்பட்டிருக்கும். மையப்பகுதியில் சின்ன சின்ன மேடு பள்ளங்களுடன் கோல்ஃப் மைதானம் போன்று பரந்து விரிந்திருக்கும் புல்வெளி..!! அந்த புல்வெளிகளில்தான் ஆங்காங்கே, ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த மாதிரியான கலரில், அவர்கள் வேலை பார்க்கிற கட்டிடங்கள், உடலெல்லாம் கண்ணாடி பாதிக்கப்பட்டு உயர உயரமாய் எழுப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் 'டவர் ஒன்.. டவர் டூ..' என்று பெயரிட்டிருப்பார்கள். எல்லா டவர்களையும் தாண்டி சென்றால், வளாகத்தின் பின்பக்க காம்பவுன்ட்டை ஒட்டி இரண்டு கட்டிடங்கள் நின்றிருக்கும். ஒன்று, க்ளையன்ட்டுகள் வந்தால் அவர்களை தங்க வைக்கிற வசதிக்காக கட்டப்பட்ட லக்ஸுரி கெஸ்ட் ஹவுஸ்..!! இன்னொன்றுதான் கம்பனி எப்ளாயிக்கள் ஆரோக்கியமாக பொழுதை போக்குவதற்காக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கம். அசோக் அந்த அரங்கத்துக்குள் நுழைந்தான். அரங்கத்தின் ஒரு பக்கம் பிரம்மாண்டமான ஜிம். இன்னொரு பக்கம் இன்டோர் கேம்ஸ் ஆடுவதற்கான சிறு சிறு அறைகள்.. வரிசையாக..!! அந்த அறைகளுக்குள் கேரம், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் என விளையாடிக் கொண்டிருந்தவர்களை கடந்து அசோக் நடந்து சென்றான். ஸ்குவாஷ் அரங்கம் இருந்த பகுதிக்கு நகர்ந்தான். வரிசையாக இருந்த நான்கு ஸ்குவாஷ் கோர்ட்டுகளில் கவிதாவை தேடினான். இரண்டாவது கோர்ட்டிலேயே அவள் பார்வைக்கு சிக்கினாள்... அவளோடு விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவும்..!! ஸ்குவாஷ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா..?? நான்கு புறமும் சூழப்பட்ட சுவர்களுக்குள் விளையாடப்பட்டும் உள்ளரங்கு விளையாட்டு. ரப்பர் பந்தும், ராக்கெட் எனப்படும் வலை மட்டையும் கொண்டு ஆடப்படும் ஆட்டம். டென்னிஸ் போன்றதுதான். டென்னிஸ் விளையாடுபவர்கள் எதிரெதிர் பக்கமாக நின்று கொண்டு, பந்தை மாற்றி மாற்றி அடித்துக் கொள்வார்கள். ஸ்குவாஷில் ஒரே பக்கமாக நின்று கொண்டு, முன்பக்க சுவரை நோக்கி பந்தை மாற்றி மாற்றி அடித்து விளையாடவேண்டும். டென்னிஸில் நெட் இருப்பது போல, இங்கு அதே உயரத்திற்கு சுவரோடு பொருந்திய மெட்டல் தகடு இருக்கும். அந்த தகடுக்கு மேல்தான் பந்தை அடிக்கவேண்டும். நாம் சுவற்றில் அடித்த பந்து திரும்பி வரும்போது, அதை எதிராளி திரும்பவும் சுவற்றில் அடிக்க முடியாமல் போனால், நமக்கு ஒரு பாயின்ட்..!! அசோக் ஓரிரு நிமிடங்கள் கோர்ட்டுக்கு வெளியே நின்று, உள்ளே விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவை, கண்ணாடி சுவர் வழியாக கண்களாலேயே விழுங்கினான். அசோக்கிற்கு பொதுவாகவே ஸ்போர்ட்ஸில் இருக்கிற பெண்களை பிடிக்கும். விளையாடுவது பெண்களுக்கு கட்டான உடலை மட்டுமன்றி, முகத்தில் ஒரு தனி களையையும் கொடுப்பதாக அவனுக்கு தோன்றும். பூப்போன்ற தேகம் கொண்டவர்கள், புயல் போல சுழன்றாடி விளையாடுவதே ஒரு தனி அழகுதான். அதுவும் இந்தப்புயல் தன் இதயத்தில் மையம் கொண்ட புயலாக வேறு இருந்து போனதே..?? ஆசையாகவும், ஆர்வமாகவும் ரசித்தான். ப்ரியா வெள்ளை நிற டி-ஷர்ட்டும், அதே நிறத்தில் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முழங்கால் வரை ஸ்கர்ட் மறைத்திருக்க, மீதி கால் வெளுப்பாய், வழவழப்பாய் வெளிப்பட்டிருந்தது. அழகு பாதங்களை அடிடாஸ் ஷூ கவ்வியிருந்தது. கூந்தலை குதிரை வால் போலாக்கி, அங்குமிங்கும் அசைய விட்டிருந்தாள். இடது கை மணிக்கட்டில் ஒரு ரிஸ்ட் பான்ட் அணிந்திருந்தாள். நெற்றியில் வழியும் வியர்வையை அவ்வப்போது அதில் துடைத்துக் கொண்டாள். நளினமாக விளையாடிக் கொண்டிருந்தாள் என்றுதான் ப்ரியாவை சொல்லவேண்டும். அழகாக சர்வீஸ் போடுவதும்.. லாவகமாக கோர்ட்டின் மையப்பகுதிக்கு நகர்ந்து கொள்வதும்.. ஓடிச்சென்று அகலமாய் அடியெடுத்து வைத்து கால்களை ஊன்றி, வலது கையை வலுவாக வீசி பந்தை சுவற்றுக்கு அடிப்பதும்.. பாயின்ட் கிடைத்ததும் 'ஹேய்..' என்று உற்சாகமாக கத்தி முஷ்டியை மடக்குவதும்..!! ப்ரியா ஸ்குவாஷ் விளையாடுவாள் என்று அசோக்கிற்கு முன்பே தெரியும். ஆனால் அவள் விளையாடுவதை இன்றுதான் பார்க்கிறான். இவ்வளவு அழகாக ஆடுவாள் என்பதை இப்போதுதான் அறிகிறான். அவள் விளையாடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! ஆனால் கொஞ்ச நேரத்திலேயே வந்த வேலை ஞாபகம் வரவும், கைவிரல்களை மடக்கி கண்ணாடி சுவற்றில் 'லொட்.. லொட்..' என்று தட்டினான். ஆட்ட சுவாரசியத்தில் இருந்த இருவரும், சிறிது நேரம் அந்த சத்தத்தை கவனிக்கவே இல்லை. அசோக் அந்த மாதிரி ஒரு நாலைந்து தடவை தட்டியதுந்தான் கவிதா திரும்பி பார்த்தாள். அசோக்கை பார்த்து ஆச்சரியமுற்றவள், 'என்ன..??' என்பது போல சைகையாலேயே கேட்டாள். இவன் 'வெளில வா..' என்பது போல சைகையாலேயே சொன்னான். கவிதா நடந்து வந்து கதவு திறந்தாள். "என்ன அசோக்..??" "உன் அப்பா ஹரிக்கு கால் பண்ணிருந்தாராம்.. உன்கிட்ட அவசரமா பேசணும்னு சொன்னாராம்.. உன்னை கால் பண்ணி அவர்கிட்ட பேச சொன்னான்..!!" "ஓ.. அவர் எங்க.. அவர் வரலையா..??" கவிதா கண்களாலேயே தன் கணவனை தேட, அசோக் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். அவர்களுக்குள் நடந்த சண்டையின் அறிகுறி அந்த முகத்தில் துளியும் தெரியவில்லை. இல்லையென்றால் அவள் காட்டிக்கொள்ளவில்லை என்றும் சொல்லலாம். ஒரு இயல்பான புன்னகையுடனே அந்த மாதிரி கேட்டாள். சிறிது நேரத்திற்கு முன்பு ஹரியின் முகத்தை பார்த்தபோது தோன்றிய மாதிரியே ஒரு எண்ணம், இப்போதும் அசோக்கின் மனதில் ஓடியது. 'அடிக்கிற அடியையும் அடிச்சுப்புட்டு.. எப்படித்தான் இவ அப்பாவி மாதிரி மூஞ்சியை வச்சுக்குறாளோ..??' "இல்ல.. அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு கெளம்பிட்டான்.. என்னை சொல்ல சொன்னான்..!!" உதட்டில் அரும்பிய சிறு புன்னகையுடனே அசோக் சொன்னான். "ஓ.. ஓகே ஓகே..!! ரொம்ப தேங்க்ஸ் அசோக்..!!" நன்றி சொன்ன கவிதா கையில் இருந்த ராக்கெட்டை ப்ரியாவிடம் நீட்டிவிட்டு, கோர்ட்டை விட்டு வெளியே வந்தாள். சுவற்றில் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த தனது பேக் திறந்து செல்போனை கையில் எடுத்தாள். டயல் செய்து காதில் வைத்துக்கொண்டவள், 'ஹாங்.. சொல்லுங்க டாடி..' என்றவாறே அந்த இடத்தை விட்டு அகன்றாள். அவள் செல்லும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், அப்புறம் ப்ரியாவின் பக்கமாய் பார்வையை திருப்பினான். ப்ரியாவோ, விரிந்த இமைகளுக்குள் மினுக்கும் விழிகளுடன் இவனையே சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் திரும்பியதும், சகஜமாய் மாற முயற்சி செய்தாள். அசோக் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, கண்ணாடி சுவரில் லேசாக சாய்ந்து கொண்டான். ப்ரியாவை பார்த்து கண்களில் குறும்பு கொப்பளிக்க புன்னகைத்தான். அப்புறம் அந்த கண்களில் ஒன்றை மட்டும் லேசாக சிமிட்டியவாறே சொன்னான். "ம்ம்ம்ம்.. கலக்குற ப்ரியா..!!" "ஹேய்.. ச்சீய்.. போடா..!!" ப்ரியா அழகாக நாணமுற்றாள். "ஹ்ம்ம்.. சும்மா சொல்லக்கூடாது.. நல்லாவே ஆடுற..!!" "நெஜமாவா சொல்ற..??" ப்ரியா நம்பமுடியாமல் கேட்டாள். "சீரியஸாத்தான் சொல்றேன்..!! நல்லா ஆடுற..!!" அவ்வளவுதான்..!! அசோக்கின் வாயில் இருந்து பாராட்டு பெற்றதுமே, ப்ரியா பறக்க ஆரம்பித்திருந்தாள். ஒரு புதுவித உற்சாகம் குரலில் கொப்பளிக்க சொன்னாள். "ம்ம்.. நான் காலேஜ்ல ஸ்குவாஷ் ஆடுறப்போ நீ பாத்திருக்கணும் அசோக்.. இதை விட அமேசிங்கா ஆடுவேன் தெரியுமா..?? நான் ஸ்குவாஷ் ஆட கூப்பிட்டாலே.. அவ அவ தெறிச்சு ஓடுவாளுக.. நாலு வருஷத்துல எத்தனை டோர்னமன்ட் பாத்திருக்கேன் தெரியுமா.." ப்ரியா பேசிக்கொண்டே போக, அசோக் இப்போது பொறுமையில்லாமல் ஒரு சலிப்பு மூச்சு விட்டான். 'ஆரம்பிச்சுட்டாளா.. கொஞ்சம் பாராட்டிட்டா போதுமே..??' என்பது போல அவளையே கேலிப்புன்னகையுடன் பார்த்தான். அதைக்கவனியாத ப்ரியா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். "எத்தனை கப்பு.. எத்தனை கப்பு.." "என்ன.. காபி கப்பா..??" அசோக் அவ்வாறு கிண்டலாக கேட்கவும், ப்ரியாவுக்கு பொசுக்கென்று முகம் சுருங்கிப் போனது. "ஹேய்.. நீ என்னை நம்பலைன்னு நெனைக்கிறேன்..!!" "சொல்றது யாரு.. ப்ரியாவாச்சே..?? அதான்.. நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குது..!!" "போடா போ.. நம்பாட்டா போ..!!" ப்ரியா கோபமாகவும், "ஹாஹா.. சரி விடு.. நம்புறேன்..!!" அசோக் சமாதானமாக சொன்னான். "ம்ம்... அப்படி வா வழிக்கு..!! இன்டர் காலேஜ் டோர்னமன்ட்ல ஒரு வருஷம் நான்தான் சாம்பியன்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எந்த நேரத்துல இந்த ஐ.டி கம்பனிக்குள்ள அடி எடுத்து வச்சனோ.. என் டேலன்ட்லாம் கெணத்துக்குள்ள போட்ட கல்லு மாதிரி ஆகிப் போயிடுச்சு..!! ஏதோ இப்போ இந்த கவிதா வந்ததும் திரும்ப ஆட ஆரம்பிச்சிருக்கேன்.. அட்லீஸ்ட் அவளுக்காவது ஸ்குவாஷ்ல இன்ட்ரஸ்ட் இருந்ததே.. அதுக்கு நான் கடவுளுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்..!!""ஹ்ம்ம்.. ஸ்குவாஷ் கூட நல்ல கேம்தான் இல்ல..??" அசோக் பேச்சை மாற்றும் விதமாக கேட்க, "ஹேய்.. செம இன்ரஸ்டிங்கா இருக்கும்.. நீ ஆடிருக்கியா..??" ப்ரியா உற்சாகம் பீறிட கேட்டாள். "இல்ல.. ஆடுனது இல்ல..!!" "ஓ.. இப்போ ஆடலாமா..??" "இ..இப்போவா..??" "ம்ம்..!!" "ஹேய்.. எங்கிட்ட ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்லாம் இல்ல..!!" "பரவால வா.. ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டிருக்கேல.. அது போதும்..!!" "அட லூசு.. எனக்கு இந்த கேம் ரூல்ஸ்லாம் எதுவும் தெரியாது..!!' "வா.. நான் சொல்லித் தர்றேன்.. எல்லாம் சிம்பிள் ரூல்ஸ்தான்..!!" "வே..வேணாம் ப்ரியா..!!" "ஏய் ச்சீய்.. வாடா.. எனக்கு உன் கூட வெளயாடி உன்னை ஜெயிக்கணும் போல இருக்கு..!!" ப்ரியா அசோக்கின் சட்டையைப் பற்றி அவனை உள்ளே இழுத்தாள். கதவை மூடி தாழிட்டாள். அவன் கையில் ராக்கெட்டை திணித்தாள். ஆட்டத்தின் அடிப்படை விதிகளை சுருக்கமாக சொன்னாள். அசோக்கை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, பந்தை தூக்கிப்போட்டு சர்வீஸ் செய்தாள். சுவற்றில் பட்ட பந்து, அசோக்கை நோக்கி எம்பி வர, 'ம்ம்ம்.. அடி..!!!!' என்று கத்தினாள். அசோக் கையிலிருந்த ராக்கெட்டால் பந்தை திருப்பி அடித்தான். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் குழந்தைகள் போல மாறிப் போயினர். சூழ்நிலை மறந்து குதுகலமாய் ஸ்குவாஷ் ஆடிக் கொண்டிருந்தார்கள். ப்ரியாவுக்கு ஸ்குவாஷ் ஆடுவதே மிகவும் பிடித்தமான விஷயம். அதிலும் இப்போது அசோக்குடன் சேர்ந்து ஆடுகிறோம் என்ற நினைவே அவளை உள்ளம் பூரிக்க செய்திருந்தன. சந்தோஷமும், உற்சாகமுமாய் விளையாடினாள். எப்படி ஆட வேண்டும் என்று அசோக்கிற்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே, இங்கும் அங்கும் ஓடி ஓடி பந்தை அடித்தாள். "ராக்கெட்டை இப்படி புடி அசோக்..!!" "கையை நல்லா ஃப்ரீயா விடு.. இப்படி..!!" "இன்னும் கொஞ்சம் ஃபாஸ்டா.. ஃபாஸ்ட்..!!" "அந்த லைன்ஸ்குள்ளதான் அடிக்கனும்னு சொன்னேன்ல..??" "வுட் ஃப்ளோர்டா.. ஸ்லிப் ஆகும்.. கேர் ஃபுல்..!!" கத்தினாள். அசோக்கும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான். ப்ரியாவுடன் இப்படி ஓடி ஓடி விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டே விளையாடுவதில் ப்ரியா கவனமாக இருக்க, இவனது கவனமோ அவளுடைய அழகை அருகிருந்து ரசிப்பதிலேயே லயித்திருந்தது. அவளிடம் அத்தனையுமே அழகாய் தோன்றியது அசோக்கின் கண்களுக்கு..!! சர்வீஸ் போடுகையில் அந்த செர்ரி உதடுகளை கடித்துக் கொள்ளும் முத்து பற்கள்.. அவள் விழிகளில் தெரிகிற தீவிரம்.. நெற்றியில் முத்து முத்தாய் திரளும் வியர்வை துளிகள்.. அந்த துளிகளை துடைத்து சுண்டுகிற சுட்டு விரல்..!! பந்தை அடிக்க விரையும்போது அதிர்கிற அவளது ஆடுதசைகள்.. அசைகிற காது வளையங்கள்.. குலுங்குகிற அவளது கையடக்க கனிகள்..!! புஜத்தை உயர்த்தையில் காணக்கிடைக்கும் அக்குள் ஈரம்.. இளமஞ்சள் நிற இடுப்புக்குழைவு..!! இருவரும் குறுக்கே ஓடிக்கொள்கையில் இவன் நாசியில் சுருக்கென்று ஏறும் அவளது மேனி வாசனை.. முகத்தை கீறி செல்லும் அவளது கூந்தல் நுனிகள்..!! அசோக் தடுமாறிப் போயிருந்தான். ப்ரியா சொல்கிற இன்ஸ்ட்ரக்ஷன்கள் கூட இப்போது அவனுடைய காதில் விழ மறுத்தன. ப்ரியாவின் அழகு அசோக்கின் மூளையில் ஒரு போதையை கிளப்பி விட்டிருந்தது.. அந்த போதையுடன்தான் அங்குமிங்கும் ஓடிச்சென்று பந்தை அடித்துக் கொண்டிருந்தான்..!!

அந்த போதை ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைய.. பந்தை அடிப்பதற்காக தன்னை க்ராஸ் செய்து ஓடிய ப்ரியாவை.. அப்படியே வளைத்துப் பிடித்தான்.. அவளது இடுப்பை பற்றி தன்பக்கமாய் இழுத்தான்..!! ப்ரியா எதிர்பாராத பிடிக்குள் சிக்கி, 'ஆஆஆவ்வ்வ்வ்' என்று சப்தமெழுப்பியவாறு அவன் கையோடு சென்றாள்.. தனது மார்புப்பந்துகள் அவன் நெஞ்சில் சென்று மெத்தென்று அழுந்த நின்றாள்..!!ப்ரியா அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியில் அவளுடைய விழிகள் அகலமாய் திறந்து கொண்டன. உதடுகள் 'ஓ'வென பிளந்து கொண்டன. அசோக்கின் முகத்தையே திகைப்பாய் பார்த்தாள். அசோக் இன்னும் பித்தம் தெளியாதவனாகவே காட்சியளித்தான். ப்ரியாவின் பிறைமுகத்தை கண்ணுக்கு நெருக்கமாய் கண்டதில், வேறெதுவும் செய்யத் தோன்றாதவனாய், அவளையே விழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குமே அந்த நெருக்கம் பிடித்திருந்தது. அசோக்கிற்கு ப்ரியாவுடைய ஸ்பரிசத்தில் இருந்த மென்மை பிடித்திருந்தது என்றால், ப்ரியாவிற்கு அசோக்குடைய பிடியில் தெரிந்த முரட்டுத்தனம் பிடித்திருந்தது. ஆனால்.. எல்லாம் ஒரு ஐந்தாறு விநாடிகள்தான். ப்ரியாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு சற்றே திணறலான குரலில் கேட்டாள். "எ..என்ன ஆச்சுடா....??" ப்ரியாவின் குரல் காதில் விழுந்ததுமே அசோக் சுயநினைவுக்கு வந்தான். அவளைப் பிடித்திருந்த பிடியை பட்டென விட்டான். ப்ரியாவும் உடனே அவனிடமிருந்து சற்றே நகர்ந்து கொண்டாள். ஓரிரு வினாடிகள் என்ன சொல்வதென்று தடுமாறிய அசோக், உடனே சமாளித்துக்கொண்டு, "பா..பாத்து ப்ரியா.. இன்னும் கொஞ்சம்னா கீ..கீழ விழுந்திருப்ப.. நல்லவேளை.. புடிச்சுட்டேன்..!!" அசோக் அந்த சூழ்நிலையை அழகாக சமாளித்துவிட, ப்ரியாதான் புரியாமல் தலையை சொறிந்தாள். "கீ..கீழயா..?? நா..நான் எப்போ கீழ விழப் போனேன்..??" "இ..இதோ.. இப்போ.. அப்படியே சர்ருன்னு.. ஸ்லிப் ஆகிட்டு போனியே.??" "போடா லூசு.. நான் பால் ரிடர்ன் எடுகுறதுக்காக போனேன்..!!" "ஓஹோ..?? போறது.. கொஞ்சம் பொறுமையா போகலாம்ல..?? நான் கீழ விழப்போறியோன்னு பயந்துட்டேன்..!!" "ஹ்ம்ம்.. பொறுமையா போறதுக்கு இங்க என்ன கல்யாண ஊர்வலமா நடக்குது..??" "சரி சரி.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. ஸாரி..!!" அசோக் அவளை ஒரு திருட்டுப் பார்வை பார்த்தவாறே சொன்னான். "ப..பரவால.. விடு..!!" ப்ரியா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாகவே சொன்னாள். அப்புறம் கொஞ்ச நேரம் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவாறு, அமைதியாக நின்றிருந்தார்கள். பிறகு ப்ரியா அந்த மௌனத்தை உடைக்கும் விதமாய், மெல்லிய குரலில் கேட்டாள். "இப்போ என்ன.. போதுமா இல்ல கண்டின்யூ பண்ணலாமா..??" "க..கண்டின்யூ பண்ணலாம் ப்ரியா.. வா வா.. நாந்தான இப்போ சர்வீஸ்..??" குரலை இயல்பாக மாற்றிக்கொள்ள முயற்சித்தவாறே, அசோக் குனிந்து ஓரமாய் கிடந்த பந்தை பொறுக்கிக் கொண்டான். சர்வீஸ் செய்யும் கட்டத்துக்குள் சென்று நின்று கொண்டான். ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, பந்தை தூக்கிப்போட்டு சுவற்றில் அடித்தான். சுவற்றில் பட்ட பந்து மீண்டும் இவர்களை நோக்கி பறந்து வர, ப்ரியா அதை அடிப்பதற்காக பாய்ந்தாள். ப்ரியாவின் நெருக்கம் ஏற்படுத்திய கிறக்கத்தில் இருந்து இன்னும் மீளாத அசோக், அவள் ஓடுகையில் அதிர்கிற அவளது அங்கங்களையே வெறித்தான். ப்ரியா பந்தை திருப்பி சுவற்றில் அடித்த பிறகும், அவனது பார்வை அவள் மீதிருந்து அகல்வதாய் இல்லை. சித்தமெங்கும் பித்தம் ஏறிப்போனவனாய் 'பே' என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஹேய்.. பால்-டா..!!' என்று ப்ரியா கத்தியது காதில் விழவில்லை. பறந்து வந்த பந்து இவன் கன்னத்தில் வந்து 'சொத்..'தென்று ஒரு அடி போட்டதும்தான், சுரணை வந்து 'ஆஆஆ..' என்று கத்தினான்.

ஐ ஹேட் யூ, பட்.. 1


அத்தியாயம் 1 "One of the most commonly known cardiac surgery procedures is the coronary artery bypass graft, also known as bypass surgery..!!" ஸ்வர்ணா டிவியில் 'ஆரோக்ய ஜீவனா' ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டிருந்தது. காலங்காத்தாலேயே கார்டியாக் சர்ஜரி பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னணியில் குரல் ஒலிக்க, திரையில் நிஜமான அறுவை சிகிச்சையையே க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிந்திருந்த பேஷன்ட், மார்பு கிழிக்கப்பட்டு மல்லாந்திருந்தார். சுற்றி நின்றிருந்த மூன்று நான்கு சர்ஜன்கள், அவருடைய ஹார்ட்டுக்குள் கை விட்டு நோண்டிக் கொண்டிருந்தார்கள். குருதியில் குளித்திருந்த இருதயம் படக் படக்கென துடித்துக் கொண்டு கிடக்க, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலாலான ஊசிகளையும், கிடுக்கிகளையும் தாங்கிய கைகள், கவனமாக அந்த இருதயத்தை குத்தி குத்தி பார்த்துக் கொண்டிருந்தன. விரிந்த விழிகளும், திறந்த வாயுமாக ப்ரியா டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள். காதுகளை கூர்மையாக்கி, வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளை கவனமாக கிரஹித்துக் கொண்டிருந்தாள். வாய்க்குள் இருந்த உப்புமாவை அவ்வப்போது அசை போடுவதும், அப்புறம் அசை போட்டதை விழுங்க மறந்து அப்படியே ஃப்ரீஸ் ஆவதுமாக இருந்தாள். டிவி நிகழ்ச்சியோடு அந்த அளவுக்கு ஒன்றிப் போயிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த சோபாவிலேயே அவளுக்கு அருகே வரதராஜன் அமர்ந்திருந்தார். சர்க்கரை தோய்க்கப்பட்ட உப்புமா தாங்கிய கையை மகளுடைய உதட்டுக்கருகே நீட்டியவாறு உறைந்திருந்தார். அரைத்ததை விழுங்கிவிட்டு அவள் மறுபடியும் எப்போது வாய் திறப்பாள் என்று, அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவர், அவளுடைய இந்த குழந்தைத்தனமான செய்கையை கண்டு சற்றே நொந்து போயிருந்தார். மகளுடைய முகத்தையும், டிவி திரையையும் மாறி மாறி பார்த்தவர், இப்போது கெஞ்சலான குரலில் கேட்டார். "சாப்பிடுறப்போ போய் இதெல்லாம் பாக்கனுமாடா செல்லம்..??" "ஏன்.. பாத்தா என்ன..??" ப்ரியா டிவியில் இருந்து பார்வையை விலக்காமலே கேட்டாள். "கசாப்புக்கடை மாதிரி எதையோ போட்டு அறுத்துட்டு இருக்கானுக.. இந்த கருமம் புடிச்சவனுக அதை வேற படம் புடிச்சு டிவில காட்டிட்டு இருக்கானுக.. பாத்தாலே எனக்கு குடலை புரட்டிட்டு வருது..!!" வரதராஜன் முகத்தை சுளித்தவாறு சொல்ல, ப்ரியா டென்ஷனானாள். "கசாப்புக்கடையா..?? கார்டியாக் ஆபரேஷன் பண்ணிட்டு இருக்காங்க டாடி..!!" "அப்படின்னா..??" "ஷ்ஷ்ஷ்ஷ்..!! ஸாரி.. இங்லீஷ் உங்களுக்கு நஹி ஆத்தா ஹே'ல..?? தமிழ்ல சொல்றேன்.. கார்டியாக் ஆபரேஷன்னா இருதய அறுவை சிகிச்சைன்னு அர்த்தம்.. போதுமா..??" "ம்ம்ம்ம்.. இஞ்சினியரிங் படிச்ச பொண்ணுக்கும்.. இருதய அறுவை சிகிச்சைக்கும் என்னம்மா சம்பந்தம்..??" வரதராஜன் தலையை சொறிந்தார். "ஐயோ.. அறிவை வளத்துக்குறதுக்கு லிமிட்டேஷனே இல்லை டாடி..!! இப்போ.. ம்ம்ம்.. உலகத்துல எந்த நாட்டுல பாம்பு, பல்லிலாம் அதிகம்னு உங்களுக்கு தெரியுமா..??" "ஹ்ம்.. அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..??" "தெரிஞ்சுக்கணும் டாடி.. நாலு விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்குறது தப்பே இல்ல..!!" "ஓஹோ..?? மொதல்ல நீ ஒழுங்கா சாப்பிடு.. சாப்பிட்டுட்டு.. நாலு விஷயம் என்ன.. நானூறு விஷயம் கூட தெரிஞ்சுக்கோ..!!" "ப்ச்.. ஏன் டாடி இப்படி படுத்துறீங்க..?? திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காரு தெரியுமா..??" "என்ன சொல்லிருக்காரு..??" "செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈ..'ன்னு சொல்லிருக்காரு..!!" "என்னது..?? ஈஈஈ'ன்னு சொன்னாரா..??" வரதராஜன் முகத்தை சுருக்கி குழப்பமாக கேட்டார். "ஐயையே.. ஈஈஈ'ன்னு இழுக்காதீங்க டாடி.. ஜஸ்ட் ஈ.. அவ்ளோதான்..!! ஈன்னா நீங்க நெனைக்கிற ஈ இல்ல..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. அதுக்கு என்ன அர்த்தம்..??" "ஆங்.. சோறு துன்னுன்னு அர்த்தம்..!!" ப்ரியா கிண்டலாக சொல்ல, "நானும் அதைத்தானம்மா அப்போ இருந்து சொல்லிட்டு இருக்குறேன்..??" வரதாராஜன் சலிப்பாக கேட்டார். "அயையயயோ.. அறிவை வளத்துக்க நேரம் இல்லாதப்போதான் துன்ன சொல்லிருக்காரு.. நான்தான் இப்போ அறிவை வளத்துட்டு இருக்கேன்ல..?? ச்ச.. உங்களுக்கு வெளக்கம் சொல்லியே எனக்கு வாய் கோணிக்கும் போல இருக்கு..!! எனக்கு டாடியா பொறந்துட்டு.. ஏன்தான் இப்படி ட்யூப் லைட்டா இருக்கீங்களோ..??""ஹாஹா.. என்னம்மா பண்றது.. உன் அப்பன் படிச்சது வெறும் எட்டாங்கிளாஸ்தான..??" "ம்ம்ம்ம்.. போங்க டாடி.. படிப்புக்கும், அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!!" "சரி சரி.. நான் அறிவில்லாதவனாவே இருந்துட்டு போறேன்..!! அதான் என் பொண்ணு இவ்வளவு அறிவா இருக்காளே.. அது போதும் எனக்கு..!!" முகம் முழுதும் மலர்ச்சியும், பெருமிதமுமாய் வரதராஜன் அவ்வாறு சொல்ல, ப்ரியா இப்போது அப்படியே உருகிப் போனாள். அன்பு கொப்பளிக்கும் அவருடைய முகத்தை அவள் ஏறிட, மனதுக்குள் குபுக்கென்று அப்பாவின் மீது ஒரு பாசம் பொங்க ஆரம்பித்தது. முகத்தை பட்டென குழந்தை மாதிரி மாற்றிக் கொண்டவள், 'ஹம்.. ஹம்.. ஹம்..' என்று செல்லமாக சிணுங்கியவாறே, அவருடைய நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். தனது மூக்கால் அவருடைய மார்பை தேய்த்தவாறே குழைவான குரலில் சொன்னாள். "என்ன டாடி நீங்க.. நான் ஏதோ சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. அதைப்போய் சீரியஸா எடுத்துக்கிட்டு..!!" "இதுல என்னம்மா இருக்கு.. நான் உண்மையைத்தான சொன்னேன்..?? நான் படிக்காத தற்குறியா இருந்தாலும்.. என் புள்ளைங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சிருக்கேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? யாராவது 'உன் புள்ளைங்க என்ன பண்றாங்க..?'ன்னு கேட்டா.. 'மூத்தவ சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்குறா.. சின்னவன் சென்னைல இஞ்சினியரிங் படிக்கிறான்'னு.. எவ்வளவு பெருமையா சொல்வேன் தெரியுமா..?? நீங்க ரெண்டு பேரும் என் புள்ளைகளா பொறந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்மா..!!" "ம்ஹூம்.. அப்டிலாம் ஒன்னும் இல்ல..!! இத்தனை வருஷமா அம்மா இல்லாத குறை கொஞ்சம் கூட தெரியாம எங்களை வளர்த்திருக்கீங்களே.. நீங்க எங்க அப்பாவா கெடைச்சதுக்கு நாங்கதான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கணும்..!! யூ ஆர் த பெஸ்ட் டாடி இன் திஸ் வேர்ல்ட்..!!" ப்ரியா உற்சாகமாக கத்த, "ஹ்ம்ம்.. இதுக்கு என்ன அர்த்தம்..??" வரதராஜன் ஆங்கிலம் புரியாதவராய் கேட்டார். "இதுக்கா..?? அது... ம்ம்ம்ம்.. நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்ர்ர்ர்னு அர்த்தம்..!!" ப்ரியா புன்னகையுடன் சொல்லிவிட்டு, குறும்பாக கண்சிமிட்டினாள். வரதராஜன் சிரித்தார். "ஹாஹா..!! சரி சரி.. அப்பாவுக்கு ஐஸ் வச்சது போதும்.. இந்தா இன்னும் ரெண்டு வாய்தான்.. ஆஆஆ..!!" "ப்ச்.. இருங்க டாடி.. சும்மா சும்மா சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லிக்கிட்டு..!! ஒபாமா என்ன சொல்லிருக்காரு தெரியுமா..??" "மொதல்ல நீ உப்புமாவை சாப்பிடுமா.. ஒபாமா என்ன சொன்னார்னு அப்புறம் சொல்லலாம்..!!" வரதராஜன் சற்றே குரலை உயர்த்த, "எனக்கு போதும்..!!" ப்ரியா வெடுக்கென்று சொன்னாள். "அப்டிலாம் சொல்லக்கூடாது.. கொஞ்சந்தான் இருக்கு.. என் கண்ணுல..?? சாப்பிட்ரும்மா..!!" ப்ரியா சிணுங்கினாள். சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்தாள். ஆனால் வரதராஜன் அவளை விட பிடிவாதமாய் இருந்தார். தட்டில் இருந்த உப்புமா மொத்தத்தையும் மகளின் வாயில் திணித்த பின்தான் ஓய்ந்தார். காலி பிளேட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நடந்தவாறே மகளிடம் சொன்னார். "சரிம்மா.. சீக்கிரம் கெளம்பு.. ஆபீசுக்கு டைமாச்சு பாரு..!!" "ம்ம்.. ம்ம்.." ப்ரியா உப்புமாவை அசை போட்டுக்கொண்டே, டிவி திரையை இமைக்காமல் பார்த்துக்கொண்டே சொன்னாள். வரதராஜனுக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி. சின்ன வயதிலேயே வீட்டாருடன் சண்டையிட்டுக்கொண்டு பெங்களூர் ஓடி வந்தவர். ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷனில் எடுபிடி வேலை செய்யபவராகத்தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு ஒரு பதினைந்து வருடங்கள்.. இந்த வேலைதான் என்று இல்லாமல், விதவிதமான இடங்களில் விதவிதமான பணிகள். உடல் உழைப்பை மிகவும் நாடுகிற மாதிரியான பணிகள். வயது முப்பதை நெருங்கையில், கையில் இருந்த சேமிப்பை கொண்டு ஒரு பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தார். இன்று வரை அதுதான் அவருடைய தொழில். காதலித்து மணம் புரிந்தவர். தான் வேலை பார்த்த தொழிற்சாலையில் தண்ணீர் பிடித்து வைக்கிற, கூட்டி பெருக்குகிற வேலைகள் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இனிமையான தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக சுகிக்காமல், இடையிலேயே இழந்தவர். ப்ரியா பெருமையாக சொன்னது போல, மனைவி இறந்த பிறகு 'பிள்ளைகளே இனி தனது உலகம்..' என வாழ்க்கையை மிக எளிதாக மாற்றிக் கொண்டவர். மூத்தவள் இந்த ப்ரியதர்ஷினி. இளையவன் கோகுல கிருஷ்ணன். இருவர் மீதுமே அவருக்கு அளவிட முடியாத அன்பு. ஆனால் ப்ரியா மீது கொஞ்சம் அதிகப்படியான ப்ரியம் எனலாம். மறைந்த மனைவியை நினைவு படுத்தும் விதமாய், மகளுடைய நிலவு முகம் அமைந்திருந்ததே அதற்கு காரணம். அவர் சென்ற பிறகும் ஒரு ஐந்து நிமிடங்கள் அறுவை சிகிச்சை பாடம் கேட்டுவிட்டுத்தான் ப்ரியா சோபாவில் இருந்து எழுந்தாள். ஆபீசுக்கு கிளம்ப நேரமாகிவிட்டது சற்று தாமதமாகத்தான் அவளுக்கு உறைத்தது. அவளுடைய அறைக்குள் புகுந்து கொண்டு, அவசர அவசரமாக வேறு உடை அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். ப்ரியாவுக்கு உடை அலங்காரத்திலோ, நகை அலங்காரத்திலோ, முக அலங்காரத்திலோ பெரிய அக்கறை கிடையாது. ஏதோ ஒரு சுடிதார் எடுத்து ஏனோ தானோவென்று அணிந்து கொள்வாள். முகத்திற்கு மெலிதாக பவுடர் தீட்டிக் கொள்வாள். நடு நெற்றியில் சின்னதாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக் கொள்வாள். அவ்வளவுதான்..!!ஆனால்.. அந்த அலட்சியமான அலங்காரத்திலேயே, அழகான ஓவியமாய் காட்சியளிப்பாள்..!! நடு வகிடு எடுத்து படிய வாறப்பட்ட கருகருவென மினுக்கும் கேசம்.. இன்றுதான் மடல் அவிழ்ந்த மலர் போன்றதொரு பூரிப்பான முகம்.. வெளுத்த பாலில் விழுந்து துடிக்கும் கரு வண்டுகளாய் ஜீவனுள்ள கண்கள்.. அந்த கண்களில் எப்போதும் ஒருவித குறும்பு மின்னல்.. உருண்டு நீண்ட கூர்மையான மூக்கு.. தேனில் நனைந்த ரோஜா இதழ்களாய் ஈரப்பதமான உதடுகள்.. அந்த உதடுகளில் எப்போதும் ஒரு அசட்டு புன்னகை.. கோதுமையையும் சந்தனத்தையும் குழைத்து கலந்த மாதிரியாய் ஒரு மேனி வண்ணம்.. அளவாய் விரிந்து, அளவாய் குறுகி, அளவாய் அகன்ற வாளிப்பான உடற்கட்டு.. ப்ரம்மா மிக ரசனையாய் செதுக்கிய சிற்பம்தான் ப்ரியா..!! உடை அணிந்து முடித்த ப்ரியா, ஷோல்டர் பேக் எடுத்து மாட்டிக் கொண்டாள். சார்ஜரின் பிடியில் கிடந்த செல்போனை பிடுங்கி, வந்திருந்த மெசேஜ்களை பார்வையிட்டவாறே ஹாலுக்கு வந்தாள். வரதராஜனும் இப்போது வேறு உடை அணிந்து ப்ரஸுக்கு கிளம்பி இருந்தார். கையில் ஸ்கூட்டர் சாவியுடன் தயாராக இருந்தார். கால்கள் முளைத்த காந்தள் மலராய், கொள்ளை அழகுடன் அசைந்து வரும் மகளையே ஓரிரு வினாடிகள் பெருமிதமாய் பார்த்தார். "எ..என்ன டாடி.. அப்படி பாக்குறீங்க..??" ப்ரியா குழப்பமாய் கேட்க, "அறிவுல மட்டும் இல்ல.. அழகுலயும் உனக்கு அந்த ஆண்டவன் எந்த குறையும் வைக்கலைம்மா.. மகாலட்சுமி மாதிரி இருக்குற..!!" வரதராஜன் பெருமிதமாக சொன்னார். "ஹையோ.. போங்க டாடி..!!" ப்ரியா நாணத்தில் முகம் சிவந்தாள். "ஹாஹா..!! வெக்கப்படுறப்போ இன்னும் அழகா தெரியுற..!! ம்ம்ம்.. எல்லாம் எடுத்துக்கிட்டியா.. கெளம்பலாமா..??" "ம்ம்.. கெளம்பலாம்..!!" அடுத்த இரண்டு நிமிடங்களில் இருவரும் வீட்டை விட்டு கிளம்பியிருந்தார்கள். ஹெல்மட் தலையுடன் வரதராஜன் நிதானமாக ஸ்கூட்டரை செலுத்திக் கொண்டிருந்தார். பின் சீட்டில் அமர்ந்திருந்த ப்ரியா அவருடைய காதுக்கருகே குனிந்து ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தாள். 'இந்த ட்ராஃபிக் சிக்னல்லாம் எப்படி வொர்க் ஆகுதுன்னு உங்களுக்கு தெரியுமா டாடி..??' 'நம்ம விட மோசமான எகனாமி இருக்குற ஸ்ரீலங்கால கூட பெட்ரோல் ரேட்லாம் ரொம்ப கம்மிதான் டாடி..!!' 'குரங்குகளுக்குலாம் ஜலதோஷம் புடிக்காது தெரியுமா டாடி..??' செல்கிற வழியெல்லாம், அவள் பார்க்கிற காட்சியெல்லாம் ப்ரியாவின் மூளையை டீஸ் செய்து, அவளை அவ்வாறு பேச வைத்தன. அவளும் அசராமல் அப்பாவை ப்ளேடு போட்டுக்கொண்டே சென்றாள். வரதராஜன் மகள் சொல்வதற்கெல்லாம் அமைதியாகவும், அப்பாவியாகவும் தலையாட்டிக் கொண்டே வந்தார். பிரியாவுக்கும் வரதராஜனுக்குமான காலைப்பொழுது இப்படித்தான் இருக்கும். அவர்களுடைய வீடு இருப்பது எச்.எஸ்.ஆர் லேயவுட் டீச்சர்ஸ் காலனியில். ப்ரஸ் இருப்பது மடிவாலா மாருதி நகரில். ப்ரியாவின் ஆபீஸ் அமைந்திருப்பது எலக்ட்ரானிக் சிட்டி. ப்ரியாவும், வரதராஜனும் தினமும் ஒன்றாகத்தான் வீட்டில் இருந்து, முறையே ஆபீசுக்கும் ப்ரஸூக்கும் கிளம்புவார்கள். சில்க் போர்ட் வரை ஸ்கூட்டரில் அழைத்து வந்து மகளை ட்ராப் செய்துவிட்டு, பிறகு ரைட் டர்ன் எடுத்துவிடுவார் வரதராஜன். சில்க் போர்டில் இருந்து கம்பெனி பஸ் பிடித்து ப்ரியா எலக்ட்ரானிக் சிட்டி சென்று விடுவாள். அவர்கள் சில்க் போர்ட் செல்வதற்குள் ப்ரியாவை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்..!! ப்ரியா பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூர்தான். சற்று முன்பு வரை அவள் தன் அப்பாவிடம் பேசியதை வைத்து, அவள் மஹா அறிவாளியாக இருப்பாள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். அதுதான் கிடையாது..!! நான்கு விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆர்வம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவள் அவ்வாறு தெரிந்து கொள்ளும் நான்கு விஷயங்கள், நான்கு நாட்கள் கூட அவளுடைய மண்டையில் தங்காது என்பதுதான் பரிதாபகரமான உண்மை. ஆனால்.. தன்னை பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் உண்டு. தன்னிடம் இல்லாத அறிவுக்காக எல்லோரும் தன்னை பாராட்ட வேண்டும் என்று அசட்டுத்தனமாய் எதிர்பார்ப்பாள். சுருக்கமாக சொன்னால்.. எல்லாம் தெரிந்த மாதிரி ஸீன் போடுகிற அரைகுறை..!! கல்லூரி படிப்பிலும் ப்ரியா சராசரிதான். தட்டு தடுமாறித்தான் எஞ்சினியரிங் முடித்தாள். பார்டரில்தான் ஃபர்ஸ்ட் க்ளாசை க்ராஸ் செய்தாள். பிட் அடிப்பது, பேப்பர் மாற்றுவது மாதிரி திருட்டு வேலைகள் கூட செய்திருக்கிறாள். கேம்பஸ் இன்டர்வ்யூவில் அவளுக்கு வேலை கிடைத்தது வேறொரு விதமான கதை. அவள் போட்ட 'இங்கி.. பிங்கி.. பாங்கி..' எல்லாம் அவளுக்கு அதிர்ஷ்டவசமாகமும், கம்பெனிக்கு துரதிர்ஷ்டவசமாகவுமாய் அமைந்து போக.. நிறைய 'பாங்கி'கள் சரியான விடைகளாகவும் இருந்து போக.. ரிட்டன் டெஸ்ட் கிளியர் செய்துவிட்டாள்..!! 'கலக்குறடி ப்ரியா..!!' என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் தன்னை தானே பாராட்டிக் கொண்டாள். கம்பெனியின் துரதிர்ஷ்டம், 'விடாது கருப்பு..' கணக்காய் டெக்னிக்கல் ரவுண்ட்டிலும் பின் தொடர்ந்தது. அவளை இன்டர்வ்யூ செய்ய வந்தவன், ப்ரியா உள்ளே நுழைந்ததுமே அவளுடைய அழகை பார்த்து, அகலமாய் வாயை பிளந்தவன்தான். அப்புறம் இன்டர்வ்யூ முடியும் வரை, பீர் குடித்த குரங்கு போல ப்ரியாவை பார்த்து 'ஈஈஈஈ' என இளித்துக் கொண்டே இருந்தான். 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..?' என்பது மாதிரி ஆவாத போவாத கேள்விகளாக அடுக்கினான். ப்ரியாவும் அந்த கேள்விகளுக்கெல்லாம் மிக சீரியஸாக முகத்தை வைத்தவாறு 'எட்டு..!!' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த பதிலுக்கும் அந்த ஜொள்ளு வாயன் 'பர்ஃபக்ட்.. பர்ஃபக்ட்....!!' என்று பல்லிளித்துக் கொண்டிருந்தான்.ப்ரியாவிடம் சில சாதகமான குவாலிபிகேஷன்கள் இருப்பதையும் இந்த இடத்தில் சொல்லியாகவேண்டும். அவளுக்கு தயக்கம், தாழ்வு மனப்பான்மை என்பதெல்லாம் துளியளவும் கிடையாது. அதிகம் பேசுவதால் தனது அம்மாஞ்சித்தனம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் அணுவளவும் கிடையாது. பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என்று நான்கு மொழிகளும் அவளுக்கு நன்றாக பேச தெரியும். அதிலும் ஆங்கிலத்தில் மிக சரளமாக பேசுவாள். பிசாத்து விஷயத்தை கூட, பிரபலமில்லாத ஆங்கில வார்த்தைகளின் துணை கொண்டு, பிரம்மாதமான விஷயம் போல எடுத்துரைக்க அவளால் இயலும். அவளுடைய அந்த திறமைதான் க்ரூப் டிஸ்கஷன் ரவுண்டில் அவளை கரையேற்றியது. அவளோடு சேர்த்து மொத்தம் ஏழு மாணவ, மாணவிகளை ட்ரெய்னீ சாப்ட்வேர் எஞ்சினியராக தங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொள்வதாக, கேம்பஸ் இன்டர்வ்யூக்கு வந்த கம்பெனியின் எச்.ஆர் பெண், அன்று மாலை நேரத்தில் மைக்கில் அறிவித்தாள். ஆஃபர் லெட்டர் ஒரு மாதத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும், டிக்ரீ முடித்த அடுத்த மாதமே கம்பெனியில் ஜாயின் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தாள். லிஸ்டில் இருந்த ப்ரியதர்ஷினி என்ற பேரை அவள் உச்சரித்ததுமே, 'ஹேய்..!!!' என்று கையை உயர்த்தி உற்சாகமாக கத்தினாள் ப்ரியா. தலை, கால் புரியவில்லை அவளுக்கு. ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு. உடனே அப்பாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள். வரதராஜன் ஃபோனை எடுத்ததுமே, "டாடி...!!!" என்று பெரிதாக கத்தினாள்.

"என்னம்மா.. இன்டர்வ்யூலாம் முடிஞ்சதா.. எப்படி பண்ணிருக்குற..??" "ஹையோ.. கஸ்டின்லாம் பயங்கர குஷ்டமா இருந்துச்சு டாடி..!!" "என்னது..????" "ச்ச.. கொஸ்டின்லாம் பயங்கர கஷ்டமா இருந்துச்சு டாடி..!!" ப்ரியா நெற்றியில் தட்டிக் கொண்டாள். "ஐயையோ.. அப்புறம் என்னாச்சு..??" "ஆனா நான் யாரு..?? தி கிரேட் ப்ரியா..!! என்கிட்டயேவா..?? எல்லா கொஸ்டினுக்கும் டான் டான்னு ஆன்சர் பண்ணிட்டேன்..!!" "ஹாஹா.. அதான.. என் பொண்ணா.. கொக்கா..??" பெருமையாக சொன்ன வரதராஜன், அடுத்த கணமே "அ..அப்போ.. வேலை கெடைச்சுடுமாம்மா..??" என்று சந்தேகமாவே கேட்டார். "ஐயோ.. கெடைச்சுடுச்சு டாடி.. பெங்களூர்லயே போஸ்டிங்.. மாசம் இருபதாயிரம் சம்பளம்.. ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் போய் ஜாயின் பண்ணிக்க வேண்டியதுதான்..!!" "நெஜமாவா சொல்ற..??" வரதராஜனுக்கு மட்டும் அல்ல.. காலேஜில் யாருக்குமே ப்ரியாவுக்கு வேலை கிடைத்ததை நம்ப முடியவில்லை..!! நிறைய பழப்பெண்களுக்கு, நாலைந்து நாட்களுக்கு தின்ற சோறு செரிக்கவில்லை..!! காலேஜில் எல்லார் மத்தியிலும் அவளுக்கு புதிதாக ஒரு மதிப்பு பிறந்தது. அத்தனை நாளாய் அவள் மட்டுமே அவளுக்குள் அசட்டுத்தனமாய் சொல்லித் திரிந்ததை, அதன் பிறகு ஆளாளுக்கு அவளை பார்த்து சொல்ல ஆரம்பித்தார்கள். "கலக்குற ப்ரியா..!!!!!" அவர்கள் அவ்வாறு சொல்கையில் ப்ரியாவும் அப்படியே மனதுக்குள் பூரித்துப் போவாள். கால்கள் தரையில் இருந்து மேலெழுந்து, காற்றில் மிதப்பது போல உணர்வாள். வெயிட் வெயிட்.. சில்க் போர்ட் வந்து விட்டது.. மீதியை அப்புறம் பார்க்கலாம்..!! ஃப்ளை-ஓவருக்கு சற்று தூரமாகவே ஸ்கூட்டர் வேகத்தை குறைத்து, ப்ரேக் அடித்து நிறுத்தினார் வரதராஜன். ப்ரியா பின் சீட்டில் இருந்து குதித்து கீழே இறங்கிக் கொண்டாள். "பாத்து போம்மா.." "நான் போய்க்கிறேன் டாடி.. நீங்க பாத்து போங்க.. சிக்னல் விழுந்துடுச்சு பாருங்க..!!" "சரிம்மா.. டாடி கெளம்புறேன்.. நைட்டு பாக்கலாம்.." வரதராஜன் சொல்லிக்கொண்டே, ஆக்சிலரேட்டரை முறுக்கினார். "பை டாடி.." ப்ரியா அவருடைய முதுகை பார்த்து கத்தினாள். அப்பா கண்ணில் இருந்து மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்புறம் அவள் நின்றிருந்ததற்கு பக்கவாட்டில் சென்ற, சிறிது தூரத்திலேயே வளைவாக இடப்பக்கம் திரும்பிய, அந்த சர்வீஸ் ரோட்டில் இறங்கி, பொறுமையாக நடந்தாள். சாலையை க்ராஸ் செய்து பஸ் ஸ்டாப்பை அடைந்தாள். மணிக்கட்டை ஒருமுறை திருப்பி பார்த்தவள், கம்பெனி பஸ்ஸின் வருகைக்காக கைகளை கட்டிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள். சரி.. நாம் எங்கே விட்டோம்..?? ஆங்.. யெஸ்.. டிக்ரீ முடிக்கும் முன்பே ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் ப்ரியாவுக்கு வேலை கிடைத்துவிட்டது.. சரியா..?? ஆனந்தக் கண்ணீருடன் அவள் ஆஃபர் லெட்டரை கையில் வாங்கி ஐந்து வருடங்களுக்கும் மேலாயிற்று. இன்னும் அதே கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள். ட்ரெய்னீயாக சேர்ந்தவள் இப்போது சீனியர் சாஃப்ட்வேர் இஞ்சினியர்..!! சம்பளமும் இப்போது அப்போதை விட மூன்று மடங்கு ஆகிவிட்டது. அவளுடைய சாப்ட்வேர் டெவலப்மன்ட் வேலை, இன்று வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல்.. அவள் அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்வது போல.. 'கூல் ப்ரியா.. கூல்..' என்றுதான் சென்று கொண்டிருக்கிறது. அவளது திறமை குறைபாடு அவளுடைய வேலையை எந்த வகையிலும் பாதிக்கவில்லையா என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! தனது அரைகுறை மென்பொருள் அறிவை வைத்துக்கொண்டு.. ஐந்து வருடங்களாக அவள் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் தலையில் சட்னி அரைத்துக் கொண்டிருக்கிறாள் என்றால்.. அதற்கு மிக முக்கியமான காரணகர்த்தா ஒருவன் இருக்கின்றான்..!! அவன் பெயர் அசோக்..!! அத்தியாயம் 2 அசோக்கின் வீடு இருப்பது பி.டி.எம் லேயவுட்டில்.. சொந்த வீடல்ல.. வாடகை வீடுதான்..!! ஜாகர்ஸ் பார்க்குக்கு எதிரிலேயே அமைந்த தனி வீடு. ஒரே மாதிரியான உட்கட்டமைப்புடன் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்ட வீடு. ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு போர்ஷன் என வேறு வேறு குடும்பத்திற்கு வாடகை விடப்பட்டிருந்தது. அசோக் வசிப்பது கீழ் தளத்தில். கார் பார்க்கிங், இரட்டை படுக்கை அறை, வரவேற்பறை, பெரிய ஹால், கிச்சன், பூஜை அறை, படுக்கையறைகளுடன் ஒட்டிய பால்கனி என மிக விஸ்தாரமானதாகவே இருக்கும். வீட்டுக்கு எதிரிலேயே பச்சை பசேலென பூங்கா.. பல கோடிகளை விழுங்கி விட்டு, பளபளப்புடன் அணிவகுத்து நிற்கிற பணக்கார வீடுகள்.. எல்லா வீட்டு கேட்டுக்கருகிலும் ஏதோ ஒரு காஸ்ட்லி கார்.. கருகருவென்ற தார்ச்சாலைகளால் சீராக பிரிக்கப்பட்டிருக்கும் தெருக்கள்.. சாலையின் இருபுறமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த, எதிரெதிராய் குனிந்து தலை முட்டிக்கொள்கிற பச்சை மரங்கள்.. அந்த மரங்கள் சாலைகளில் வீசியிருக்கும் நிழல்களில்.. அதே மரங்களில் இருந்து கீழே உதிர்த்திருக்கும் பழுப்புநிற இலைகள்..!! அழகாகவும், அமைதியாகவும், ரம்யமாகவும் இருக்கும் அந்த வீட்டின் சுற்றுப்புறம்..!! ப்ரியா வீட்டு வரவேற்பறையில் ஆங்கிலத்தில்ஆரோக்ய ஜீவனா ஓடிக்கொண்டிருந்த அதே வேளையில், அந்த வீட்டு சமையலறையில் தெள்ளு தமிழிலில் ஒரு கானம் ஒலித்துக் கொண்டிருந்தது..!! "ஆலயமாகும் மங்கை மனது.. - அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது.. நல் காலைப் பொழுது..!!" பாடுவதில் ஒருபக்கம் கருத்தாக இருந்தாலும், கல்லில் கிடந்த சப்பாத்தி கருகி விடாமல் புரட்டிப் போடுவதிலும் இன்னொரு பக்கம் கவனமாக இருந்தாள் தாமரைச்செல்வி.. சுருக்கமாக செல்வி.. அசோக்கின் அண்ணி.. அண்ணன் ராஜேஷின் மனைவி..!! சுட்டு முடித்த சப்பாத்தியை எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு மூடியவள், வாசலில் நிழலாடுவதை உணர்ந்ததும் தலையை சுழற்றினாள். சமையலறை வாசலில் அசோக் நின்றிருந்தான். குளித்து முடித்து ஆபீசுக்கு கிளம்பி ரெடியாக வந்திருந்தான். வெளிர் நீல நிற சட்டையும், அடர் நீல பேண்ட்டும் அணிந்து, டக் இன் செய்து, இடுப்பில் பெல்ட் சுற்றிக் கொண்டு, படு ஃபார்மலாக காட்சியளித்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்தவன், கண்களை இடுக்கி அண்ணியை பார்த்து, ஒருமாதிரி முறைத்துக் கொண்டிருந்தான். "என்னடா..??" செல்வி அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் கேட்டாள். "தயவு செஞ்சு சுசீலா சாங்ஸ்லாம் பாடாதீங்க அண்ணி..!!" அசோக் சலிப்பாக சொன்னான். "ஏண்டா.. அவங்களை உனக்கு புடிக்காதா..??" "ஹையோ.. ரொம்ப ரொம்ப புடிக்கும்.. அதான் பாடாதீங்கன்னு சொன்னேன்..!! தயவு செஞ்சு அவங்க பாடுன பாட்டை.. இப்படி உங்க குரலால பாடி கேக்குற கொடுமையை மட்டும் எனக்கு கொடுக்காதீங்க..!!" அசோக் கிண்டலாக சொல்ல, செல்வி சில வினாடிகள் அவனையே உஷ்ணமாக முறைத்தாள். அப்புறம், "போடா பொறாமை புடிச்சவனே..!!" என்று சீறினாள். செல்வி அசோக்கிற்கு அண்ணியாவதன் முன்பே அறிமுகம் ஆனவள்தான். சிறு வயதில் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, ஓடி விளையாடி திரிந்தவர்கள்தான். தூரத்து சொந்தக்காரி வேறு. இப்போது அவளே தன் அண்ணனின் மனைவி என்று ஆன பிறகு, 'வா.. போ..'வுடன் 'ங்க..' சேர்த்துக் கொண்டானே ஒழிய, அவனுடைய வழக்கமான சீண்டலையும், கிண்டலையும் கைவிடுபவனாய் இல்லை. செல்வியோ ராஜேஷோ அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதும் இல்லை. "என்னது..?? பொறாமையா.. எனக்கா..??" அசோக் நகைத்தான். "ஆமாம்.. நான் நல்லா பாடுறேன்னு பொறமை..!!" "ஹாஹா.. இங்க பாருங்க.. பொறமை புடிச்சவன்னு வேணா சொல்லிக்கங்க.. ஆனா நல்லா பாடுறீங்கன்லாம் சொல்லாதீங்க.. எனக்கு அப்படியே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு..!!" "உண்மைய சொன்னா நெஞ்சு வலிக்குதா உனக்கு..?? மொதல்ல அடுத்தவங்ககிட்ட இருக்குற திறமையை மதிக்க கத்துக்கோ.. யாரை பாத்தாலும் ஒரு நக்கலு.. ஒரு நையாண்டி..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. உன்னை பத்தி தெரிஞ்சும் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாரு.. என்ன சொல்லணும்..!!" சலிப்பாக தலையை அசைத்த செல்வி, அந்தப்பக்கமாய் திரும்பி அடுத்த சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டாள். அசோக் இப்போது கிச்சனுக்குள் நுழைந்தான். குரலில் இன்னும் குறும்பு குறையாதவனாகவே, அண்ணியை மேலும் வம்பிழுக்கும் எண்ணத்துடன் கேட்டான். "ஓஹோ..?? அப்படி என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்களாம்..?? ம்ம்..??" "சொன்னா கோவிச்சுக்கமாட்டியே..??" "இல்ல.. சொல்லுங்க..!!" அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டே, கப்போர்டில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த டப்பாக்களில் ஒன்றை கையில் எடுத்தான். மூடி திறந்து உள்ளே கிடந்த ஒரு இஞ்சியை எடுத்து, நகத்தால் கீறிப் பார்த்தான். செல்வி கல்லில் போட்ட சப்பாத்திக்கு ஸ்பூனில் எண்ணெய் வார்த்தவாறே சொன்னாள். "சொல்றேன் கேட்டுக்கோ.. உலகத்துலேயே நீதான் பெரிய இவன்ன்ன்னு உனக்கு மனசுக்குள்ள ஒரு நெனைப்பு.. சரியான ஈகோ புடிச்ச பய..!!" "ஹாஹா..!! ம்ம்.. சரி அண்ணி.. நீங்க ஈகோன்னு சொல்றீங்க.. அதையே நான் ஏன் செல்ஃப் ரெஸ்பெக்ட்னு சொல்லிக்க கூடாது..??" "என்னது..?? செல்ப்புபுபு.." செல்வி முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறே வார்த்தையை இழுத்தாள். "செல்ஃப் ரெஸ்பெக்ட் அண்ணி.. சுய மரியாதை..!!" "ம்ம்ம்.. சொல்லிக்கோ சொல்லிக்கோ.. என்ன வேணா சொல்லிக்கோ..!! அடுத்தவங்க பேச்சை மதிக்கிறவனா இருந்தா சொல்லி புரிய வைக்கலாம்.. நீதான் யார் பேச்சையும் மதிக்கிறது இல்லையே..?? உன் வசதிக்கு ஏத்தமாதிரி என்ன வேணா சொல்லிக்கோ..!!" "ஹஹா.. என்னாச்சு இப்போ உங்களுக்கு..?? நான் என்ன யார் பேச்சையும் மதிக்கிறது இல்ல..??" "யாரை மதிக்கிற நீ..?? சரி அடுத்தவங்களை விடு.. என் பேச்சை கொஞ்சமாவது மதிக்கிறியா..??" "என்ன மதிக்கலை..??" "நான் ஒரு வாரமா உன்கிட்ட ஒன்னு சொல்லிட்டு இருக்கேனே.. அதுக்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுத்தியா..??" "என்ன..??" "ப்ச்.. புரியாத மாதிரி நடிக்காத..!! உங்க கம்பெனில வேலைக்கு ஆள் எடுக்குறாங்களான்னு கேட்டுட்டு வர சொன்னனே.. கேட்டுட்டு வந்தியா..??" "என்னமோ சித்தாளு வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி சொல்றீங்க.. இட்ஸ் சி எம் எம் லெவல் ஃபைவ் கம்பெனி அண்ணி..!!" "ஏதோ ஒன்னு.. கேட்டுட்டு வந்தியா இல்லையா..??" செல்வி சற்றே கடுமையாக கேட்க, அசோக் இப்போது அமைதியானான். அண்ணியின் முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தான். செல்விக்கு உடன்பிறந்த தங்கை ஒருத்தி இருக்கிறாள். பெயர் செண்பக லக்ஷ்மி.. சுருக்கமாக லக்ஷ்மி..!! எம்.ஸி.ஏ முடித்துவிட்டு சென்னையில் ஒரு சின்ன சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவளுக்கு பெங்களூரில் ஒரு வேலை வாங்கி கொடுத்து, தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என்று செல்விக்கு ஆசை. அவளுக்காகத்தான் இந்த வேலை விசாரிப்பு எல்லாம். அது மட்டும் அல்ல. லக்ஷ்மியை அசோக்கிற்கு மணம் முடித்து விட வேண்டும் என்றும் அவளுக்கு இன்னொரு நப்பாசை வேறு. உடன் பிறந்த தங்கையே ஓரகத்தி ஆகிவிட்டால் சச்சரவு இல்லாமல் இருக்கும் அல்லவா..?? ஆனால் அந்த ஆசையை கணவனிடம் அவளால் தைரியமாக சொல்ல முடியவில்லை. ராஜேஷுக்கு மனைவியின் வீட்டார்களை கண்டாலே ஒவ்வாது. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான் அவ்வாறு ஆகிப் போயிற்று. இருவரது குடும்பத்துக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன சின்ன உரசல்களும், மனக்கசப்புமே காரணம். அதே வீட்டில் இன்னொரு சம்பந்தம் என்றால் அவ்வளவுதான். தையா தக்கா என்று குதிப்பான் என்பது செல்விக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அசோக்காக 'லக்ஷ்மிதான் தன் மனைவி' என்று முடிவு எடுத்து விட்டால், அவர்கள் வீட்டில் யார் சொல்வதையும் கேட்க மாட்டான்.. எல்லோரையும் சமாளித்து தன் தங்கையையே மணம் புரிந்து கொள்வான்.. அதனால் அசோக்கின் சம்மதத்தை பெற்றுவிட்டால் தனது ஆசை நிறைவேறி விடும் என்று எண்ணினாள். ஒருநாள் அசோக்கிடமே தயங்கி தயங்கி 'லக்ஷ்மியை உனக்கு புடிச்சிருக்கா.. அவளை கட்டிக்கிறியா..??' என்பது மாதிரி கேட்டுவிட்டாள். ஆனால் அவ்வாறு அவனிடம் கேட்டதை எண்ணி இப்போது அடிக்கடி தனக்குத்தானே நொந்து கொள்வாள். 'ஸாரி அண்ணி.. எனக்கு அந்த மாதிரி எதுவும் அபிப்ராயம் இல்ல..!!' என்று அசோக் நாகரிகமாகத்தான் அவளது ஆசையை மறுதலித்தான். 'ஹையோ.. பரவால அசோக்.. நானும் உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம..' என்று செல்வியும் உளறலாக அசடு வழிந்தாள். அதற்காகவெல்லாம் அவள் நொந்து போகவில்லை. 'பிறகு என்ன..' என்று கேட்கிறீர்களா..?? இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள். அசோக்கின் அமைதி நீண்டு கொண்டே போக, இப்போது செல்வியே பொறுமை இல்லாமல் கேலியான குரலில் கேட்டாள். "என்னடா.. இஞ்சியை முழுங்கிட்டியா..??" "இல்லையே.. ஏன்..??" அசோக் அவசரமாக மறுத்தான். "அப்போ பேசு..!! கம்முனு இருக்குற..?? கேட்டியா இல்லையா..??" செல்வியின் கிண்டல் இப்போது அசோக்கையும் சூடேற்றி விட்டிருந்தது. அவனும் அவளை கலாய்க்கும் எண்ணத்துடன் ஆரம்பித்தான். "ஹ்ம்ம்.. கேட்டேன் கேட்டேன்.. வேலைலாம் இருக்காம்.. ஆனா தரமாட்டாங்களாம்..!!" "தரமாட்டாங்களா..?? ஏன்..??" செல்வி நெற்றியை சுருக்கினாள். "ஆங்.. வெண்கலக்குறிச்சில பொறந்தவங்களுக்குலாம் எங்க கம்பெனில வேலை தர மாட்டாங்க..!!" "ஏன்..?? வெளக்கெண்ணை சத்திரத்துல பொறந்தவங்களுக்குலாம் வேலை தந்திருக்காங்க..??" "வாட்..?? வெ..வெளக்கு.. எண்ணை.. வாட்ஸ் தேட்..??" "நீ பொறந்த ஊர் பேரு ராசா.. மறந்து போச்சா..??"

"நோ நோ.. ஐம் நாட் தேட் வில்லேஜர் எனி மோர்.. ஐம் பேங்ளூரியன் நவ்..!!" அசோக் பெருமையாக சொல்ல, "ஆமாம்.. இவரு பெங்ளூளூளூரியன்.. பெரிய்ய்ய பெங்ளூளூளூரியன்..!!!" செல்வி வாயைக் கோணலாக்கி வக்கணம் காட்டினாள். தொடர்ந்து, "அப்போ நாங்க மட்டும் பெங்களூர்ல இல்லாம.. வண்டலூர்லயா இருக்கோம்..??" என எள்ளலாக கேட்டாள். "ஹ்ஹ.. நீங்க வந்து ஆறு மாசம்தான ஆகுது.. நான் ஆறு வருஷமா இங்க இருக்குறேன்..!!" "ம்க்கும்..!! சரி பேச்சை மாத்தாத.. கேட்டதுக்கு பதில் சொல்லு.. அவளுக்கு ஏன் வேலை கெடைக்காதுன்னு சொல்ற..??" செல்வி விடாப்பிடியாக விஷயத்துக்கு வர, அசோக் இப்போது குரலில் கேலியை குறைத்துக்கொண்டு, சீரியசாக சொன்னான். "ப்ச்.. சொன்னா கேளுங்க அண்ணி.. அவ இங்கல்லாம் வர வேணாம்.. சென்னைலயே இருக்கட்டும்..!!" "ஏன்..??" "அவ பெங்களூர் வர்றது எனக்கு நல்லதா படலை..!!" "அதான் ஏன்னு கேக்குறேன்..??" "இங்க பாருங்க.. நீங்க என்ன ஐடியாவுல அவளை இங்க அழைச்சுட்டு வர நெனைக்கிறீங்கன்னு எனக்கு நல்லா புரியுது..!!" "என்ன ஐடியாவுல..??" "பஞ்சை கொண்டு வந்து நெருப்பு பக்கத்துல வைக்கலாம்.. பத்திக்குதான்னு பாக்கலாம்னு நெனைக்கிறீங்க.. அதான..??" "நெருப்பு பக்கத்துல வச்சாத்தான பத்திக்கும்.. களிமண்ணு பக்கத்துல வச்சா எப்படி பத்திக்கும்..??" "என்னது..?? களிமண்ணா..??" அசோக் முகத்தை சுளித்தவாறு கேட்க, செல்வி அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தாள். "இங்க பாரு அசோக்.. என் தங்கச்சிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்ற ஆசையை.. நான் என்னைக்கோ ஸ்டவ்ல போட்டு கருக்கிட்டேன்.. அதுக்காகலாம் அவளை இங்க அழைச்சுட்டு வர நான் நெனைக்கலை..!! உங்க அண்ணனை கட்டிக்கிட்ட நாள்ல இருந்து டெல்லி, பம்பாய்னு கண்காணாத தூரத்துலயே என் பொழைப்பு போய்டுச்சு.. குடும்பத்துக்குள்ள வேற பிரச்னை வந்து அப்பா, அம்மாவை பாக்குறதே அதிசயம்னு ஆயிடுச்சு.. அட்லீஸ்ட் என் தங்கச்சியவாவது கொஞ்சநாள் பக்கத்துல வச்சு பாத்துக்கலாம்னு நெனைக்கிறேன்.. அவ்வளவுதான்..!! ப்ளீஸ்டா.. உங்க கம்பெனில கேட்டுப்பாரு..!!"அண்ணியின் குரல் சற்றே சோகமாய் ஒலிக்கவும், அசோக் இப்போது கொஞ்சம் இளகினான். ஆனால் அவள் சொன்னதை அவனால் முழுமையாக நம்பவும் முடியவில்லை. அவளுடைய மனதில் உண்மையிலேயே என்ன திட்டம் வைத்திருக்கிறாள் என்று யாருக்கு தெரியும். ஒரு சில வினாடிகள் யோசித்தவன், பிறகு லேசாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே சொன்னான். "ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! ஓகே அண்ணி.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..!!" "டைமா..?? எதுக்கு..??" "இதுல இருக்குற அட்வான்டேஜ், டிஸ்-அட்வான்டேஜ்லாம்.. நான் அலசி ஆராயணும்.. அப்புறந்தான் என்னால ஒரு முடிவுக்கு வர முடியும்..!!" "ம்ம்ம்.. ரொம்பத்தாண்டா லொள்ளு உனக்கு..!! என்னமோ உன் கம்பெனியை விட்டா பெங்களூர்ல வேற கம்பெனியே இல்லாத மாதிரி பேசுற..??" "ஓ.. அப்போ அவளை வேற கம்பெனில ட்ரை பண்ண சொல்ல போறீங்களா..??" "நீ இப்படி செஞ்சா வேற என்ன பண்றது..??" "அப்போ போங்க.. உங்க இஷ்டம்.. என்னவேணா பண்ணிக்கோங்க..!!" "பண்ணத்தான் போறேன்.. பாத்துட்டே இரு..!! ஹ்ம்ம்.. அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு அவளை உடனே கிளம்பி பெங்களூர் வர சொல்லப் போறேன்.. இங்க இருந்தே இன்டர்வ்யூ ட்ரை பண்ணினா ஒரு மாசத்துல வேலை வாங்கிடமாட்டா..??" "ம்ம்.. வாங்கிடுவா வாங்கிடுவா..!! அதுசரி.. உங்க தங்கச்சியை பெங்களூர்ல எங்க தங்க வைக்கிறதா ப்ளான்..??" "ஏன்.. ந..நம்ம வீட்டுலதான்..??" செல்வி குழப்பமாக கேட்க, "ஹஹா.. என்னது.. நம்ம வீடா..?? இது என் வீடு..!!" அசோக் முறைப்பாக சொன்னான். "டேய்..!!!!" "அக்ரீமன்ட் என் பேர்ல இருக்கு.. அட்வான்ஸ் சொளையா எம்பதாயிரம் கொடுத்திருக்கேன்.. அண்ணனுக்கு பெங்களூர் ட்ரான்ஸ்ஃபர் கெடைச்சிடுச்சுன்னு.. என்னோட ஆருயிர் நண்பர்களை எல்லாம் அடிச்சு தொரத்திட்டு உங்களுக்கு வீட்டை விட்டிருக்கேன்.. ஞாபகம் இருக்கட்டும்..!!" "ஹ்ம்ம்.. நல்லா ஞாபகம் இருக்கு சாமி.. அதுக்கு என்ன இப்போ..??" "என் பர்மிஷன் இல்லாம இங்க யாரும் தங்க முடியாது.. உங்க தங்கச்சி இங்க தங்குறதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்.. வேணும்னா வெளில ஏதாவது பி.ஜி ல தங்க வச்சுக்கோங்க..!!" அசோக் கடுமையாக சொல்ல, "ஏண்டா இப்படி அநியாயம் பண்ற..??" செல்வி பரிதாபமாக கேட்டாள். "என்னோட நியாயம் உங்களுக்கு அநியாயமா பட்டுச்சுன்னா அதுக்கு நான் என்ன பண்றது..??" அசோக் விட்டேத்தியாக சொல்லிவிட்டு பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டான். செல்வி இடுப்பில் கையை ஊன்றியவாறு அவனையே எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சில வினாடிகள். அப்புறம் திடீரென என்ன நினைத்தாளோ.. சற்றே அலட்சியமான குரலில் சொன்னாள். "போடா.. நான் அவளை கூட்டிட்டு வந்து இந்த வீட்டுல வச்சுக்கத்தான் போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!" "வேணாம் அண்ணி.. அவ இங்க வர்றது எனக்கு புடிக்கலை..!!" அசோக் செல்வியை எச்சரிப்பது போல தனது ஆட்காட்டி விரலை தனித்து காட்டியவாறு சொன்னான். "உனக்கு புடிக்கலைன்னா வீட்டை காலி பண்ணிட்டு ஓடிப்போ..!!" "ஹஹா.. நல்லா இருக்கே.. நான் எதுக்கு வீட்டை காலி பண்ணனும்.. இது என் வீடு..!! வேணுன்னா நீங்க வீட்டை காலி பண்ணிட்டு எங்கயாவது போங்க..!!" "நாங்கல்லாம் எங்கயும் போக முடியாது.. எங்களுக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு.. இதை விட்டு எங்கயும் போக மாட்டோம்..!! உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..!!" "ஓஹோ..?? சவாலா..??" "சவால்னே வச்சுக்கோ.. என்ன இப்போ..??" அலட்சியமாக சொன்ன செல்வி, அந்தப்பக்கமாய் திரும்பி சப்பாத்தியை புரட்டி புரட்டி போட ஆரம்பித்தாள். இப்போது அசோக் அவளையே இறுக்கமான முகத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் அவ்வாறு அமைதியாக முறைத்தவன், அப்புறம் குரலில் ஒருவித கேலியை கலந்து கொண்டு சொன்னான். "ஓகே.. சவால்னு ஆயிடுச்சு.. இனிமே எதுக்கு பாவ புண்ணியம்லாம் பாத்துக்கிட்டு..!!" "என்ன சொல்ற நீ..??" செல்வி குழப்பமாய் திரும்பினாள். "அண்ணன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்..!!" "எ..என்ன சொல்லப் போற..??" கேட்கும்போதே செல்விக்கு லேசாக உதறல்."அதான்.. லக்ஷ்மியை கட்டிக்கிறியான்னு எங்கிட்ட கேட்டீங்கள்ல.. அதை..!!" "டேய்..!! அ..அது நான் எப்போவோ சொன்னது..!!" செல்வி அவசரமாகவும், பதற்றமாகவும் சொன்னாள். "எப்போவா இருந்தா என்ன.. சொன்னீங்கள்ல..??" அசோக் கூலாக கேட்டான். "ஏ.. வேணாண்டா.. ப்ளீஸ்டா.. அது தெரிஞ்சா அந்த மனுஷன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு..!!" செல்வி இப்போது கெஞ்சினாள். "இல்ல அண்ணி.. சொல்லத்தான் போறேன்..!! அவளை கட்டிக்கிறியான்னு நீங்க கொழைஞ்சுக்கிட்டே கேட்டது.. நான் முடியாதுன்னு சொன்னதும்.. இப்போ அவளை இங்க அழைச்சுட்டு வந்து எப்படியாவது என் தலைல கட்டிடனும்னு ப்ளான் போடுறது.. எல்லாம் சொல்லத்தான் போறேன்..!!" "டேய்.. அதான் இப்போ எனக்கு அப்படிலாம் எதுவும் ஆசை இல்லைன்னு சொல்றேன்ல..??" "ஆனா நான் அவன்ட்ட சொல்றப்போ அப்படித்தான் சொல்வேன்..!! அதுக்கப்புறம் அவன் பர்மிஷன் கொடுத்தான்னா.. தாராளமா உங்க தொங்கச்சியை கூட்டிட்டு வந்து வீட்டுல வச்சுக்கோங்க.. எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை..!!" அசோக் எகத்தாளமாக சொல்ல, செல்வி நொந்து போனவளாய் தலையில் கையை வைத்துக் கொண்டாள். இதற்காகத்தான் அவள் அடிக்கடி தனக்குள் நொந்து கொள்வது. 'ஏண்டி.. இந்தப்பயகிட்ட போய் அப்படி கேட்டுத் தொலைச்ச..?? இப்பப்பாரு.. சும்மா சும்மா அதையே சொல்லி மெரட்டுறான்..!!' தனது குடும்ப உறுப்பினர்களிலேயே ராஜேஷ் வெறுப்பை காட்டாமல் இருப்பது தன்னிடமும், தன் தங்கையிடமும்தான். இப்போது இவன் சென்று இப்படி சொன்னால்.. அவ்வளவுதான்.. தாங்களும் அந்த வெறுப்பினர் லிஸ்டில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்..!! செல்வி கடுப்புடன் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனுடைய சட்டையை கொத்தாகப் பற்றி கன்னத்தில் நாலு அறை விடலாமா என்பது மாதிரி வந்த எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டாள். நீளமாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவள், சோர்வான குரலில் சொன்னாள். "சரிப்பா.. அவளை இங்க கூட்டிட்டு வரலை.. போதுமா..??" "அது.. அந்த பயம் இருக்கணும்..!!" அசோக் வெற்றிப் புன்னகையுடன் சொன்னான். "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்குறடா நீ.. இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கத்தான் போற..!!" "ஹ்ஹ.. என்ன சாபம் விடுறீங்களா..??" "ஆமாம்.. என் தங்கச்சி மாதிரி ஒரு தங்கமான பொண்ணை வேணாம்னு ஒதுக்கிட்ட.. உனக்கு எந்தக்காட்டு மகாராணி வர்றான்னு நானும் பாக்குறேன்..!!" "அதெல்லாம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணி.. உங்க தங்கச்சியை விட சூப்பரான பொண்ணா நான் புடிச்சு காட்டுறேன்..!!" "ம்ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்..!! அகம்பாவத்துல இப்படிலாம் ஆட்டம் போடுறல.. உன் ஆட்டத்துக்கு ஏத்த மாதிரி எதாவது அடங்கப்பிடாரிதான் உனக்கு வந்து வாய்க்கப்போறா..!! நீங்க ரெண்டு பேரும் கட்டி உருண்டு சண்டை போடணும்டா.. அதை நான் கண்ணு குளிர பாக்கணும்..!!" "ஹாஹா..!! ஐயோ பாவம்.. உங்க ஆசை என்னைக்கும் நிறைவேற போறது இல்லைன்னு நெனச்சா.. எனக்கு ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருது அண்ணி..!!" "ஏன் நிறைவேறாது..??" "பிகாஸ் ஐ'ஆம் அசோக்..!! எப்பேர்ப்பட்ட அடங்காத குதிரையா இருந்தாலும்.. அதை எப்படி அடக்கனும்ன்ற வித்தை எனக்கு தெரியும்..!! எப்படி அந்த குதிரைக்கு தண்ணி காட்டி, தவுடு திங்க வைக்கனும்ன்ற தந்திரம் எனக்கு தெரியும்..!! எவளும் இங்க துள்ள முடியாது அண்ணி.. அடங்கிபோய்த்தான் இருக்கணும்..!!" "ம்ம்ம்.. கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வாய் சவடால் விட்டவங்க எத்தனையோ பேரு.. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நெலமைக்கு ஆனாங்கன்னு நானும் பாத்திருக்கேன்பா..!!" "எனக்கு அந்த நெலமை வராது அண்ணி..!!" "வரப்போறவளைப் பத்தி எதுவுமே தெரியாம.. நீயா அப்படி சொல்லிக்கிறதா..??" "அதெல்லாம் அவளைப்பத்தி எனக்கு நல்லா.." அதுவரை அண்ணியின் பேச்சுக்கு படபடவென பதில் சொல்லிக்கொண்டிருந்த அசோக், இப்போது பட்டென பாதியிலேயே நிறுத்தினான். அமைதியானான். அவன் அவ்வாறு திடீரென அமைதியானதன் அர்த்தம் செல்விக்கு புரியவில்லை. நெற்றியை சுருக்கியவள், குழப்பமான குரலிலேயே கேட்டாள். "என்னடா.. என்னாச்சு..??" "எ..என்னாச்சு..?? ஒ..ஒண்ணுல்ல..!!""இல்ல.. ஏதோ சொல்ல வந்த.. பாதிலேயே நிறுத்திட்ட..??" "ஒ..ஒண்ணுல்ல.. அ..அதெல்லாம் நான் பாத்துக்குறேன்னு சொல்ல வந்தேன்..!!" அசோக் ஒரு மாதிரி தடுமாற்றமாய் சொல்ல, செல்வி அவனுக்கு பதில் சொல்லாமல் அவனுடைய கண்களையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். அவனுடைய கண்களில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, அப்புறம் மெலிதாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவிட்டு, அந்தப்பக்கமாக திரும்பிக்கொண்டாள். கல்லில் கிடந்த கடைசி சப்பாத்தியையும் எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு மூடினாள். ரெகுலேட்டர் திருகி ஸ்டவ்வை அணைத்தவாறே, பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள். "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னைக்கு என்ன உனக்கு லீவு இல்லையா..??" "இல்லையே.. ஏன் கேக்குறீங்க..??" "அவருக்கும் தம்புக்கும் இன்னைக்கு லீவு.. அதான் கேட்டேன்..!!" தம்பு என்றால்.. தம்புச்சாமி..!! ராஜேஷுக்கும் செல்விக்கும் பிறந்தவன். ஐந்தரை வயது ஆகிறது. வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு ஸ்கூலில் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். சின்னப் பையனுக்கு இப்படி ஒரு பேரா என்று கேட்காதீகள். எல்லாம் இதோ இந்த செல்விதான்.. தன் தாத்தாவின் பெயரைத்தான் வைப்பேன் என்று அடம்பிடித்து வைத்திருக்கிறாள்..!! "எதுக்கு லீவாம்..??" "ஏதோ ஜெயந்தின்னு சொன்னாங்கப்பா.. உங்களுக்கு லீவ் இல்லையா..??" "ஏதோ ஜெயந்தி ஜெயமாலினிக்காகலாம் எங்க கம்பெனில லீவ் விட மாட்டாங்க..!!" அசோக் குறும்பாக சொல்ல, செல்வி அவனை முறைத்தாள். "ம்ம்ம்ம்.. இந்த நக்கலுக்குலாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!" "ஹாஹா.. ம்ம்ம்ம்..!! சரி அண்ணி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!" அசோக் கிச்சன் வாசலை நோக்கி நடந்தான். செல்வி அவனை அவசரமாய் அழைத்து நிறுத்தினாள். "ஏய்.. நில்லுடா..!!" "என்ன..??" அதற்குள்ளாகவே வாசலை அடைந்திருந்த அசோக், திரும்பிப்பார்த்து கேட்டான். "சப்பாத்தி சுட்டு முடிச்சுட்டேன்.. சாப்பிட்டு போ..!!" "ப்ச்.. எனக்கு வேணாம் அண்ணி.. நான் ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!" அசோக் ஒருமாதிரி சலிப்பாக சொல்ல,

"ஏண்டா..??" செல்வி வியப்பாக கேட்டாள். "பின்ன என்ன..?? எப்பப்பாரு.. சும்மா சும்மா இட்லி, தோசை, சப்பாத்தின்னு.. சுட்டதையே திரும்ப திரும்ப சுட்டு இருக்கீங்க..!! பிஸ்ஸா, பர்கர், சான்ட்விச்னு புதுசா ஏதாவது சுடலாம்ல..??" "ம்க்கும்.. பெரிய வெள்ளைக்கார தொரைன்னு நெனைப்பு.. பிஸ்ஸா, பர்கர் கேக்குறாரு..!!" "வெள்ளைக்காரங்களோட பழகிப்பழகி.. அவங்க மாதிரிதான் இருக்க தோணுது அண்ணி.. என்ன பண்ண சொல்றீங்க..??" "சரி.. நீயும் சாப்பிடுவேன்னு நெனச்சு இப்போ இத்தனை சப்பாத்தி சுட்டு வச்சுட்டனே.. என்ன பண்றது..??" "அவன்ட்ட குடுங்க.. அவன்தான் என்னத்த குடுத்தாலும் தின்னுவான்.. எத்தனை குடுத்தாலும் தின்னுவான்..!!" அண்ணனைப் பற்றி கேலியாக கூறிவிட்டு திரும்பிய அசோக், அண்ணனுடைய நெற்றியிலே முட்டிக்கொண்டான். ஸ்லோமோஷனில் நிமிர்ந்து பார்க்க ராஜேஷின் கடுப்பேறிய முகம் காணக்கிடைத்தது. கண்களை இடுக்கி இவனையே முறைத்தவாறு அவன் நின்றிருக்க, அவனுடைய காலை பிடித்தவாறு தம்பு நின்றுகொண்டிருந்தான். அசோக்கும், செல்வியும் கடைசியாக பேசிக்கொண்ட ஒன்றிரண்டு உரையாடல்களை, அசோக்குக்கு பின்னால் நின்றவாறு ராஜேஷ் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அசோக் கடைசியாக கொடுத்த கமென்ட்தான், அவனுடைய முகம் குரங்கு போல மாறிப்போக காரணம். அண்ணனை பார்த்ததும் அசோக் லேசாக அதிர்ந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான். அப்பாவியாய் முகத்தை மாற்றிக்கொண்டு, 'என்ன..??' என்பது போல தலையை மெலிதாக அசைத்து கேட்டான். "யாரைடா என்னத்த குடுத்தாலும் தின்னுவான்னு சொன்ன..??" ராஜேஷ் இறுக்கமான குரலில் கேட்க, "அ..அது.. நா..நான்.. த..தம்புவை சொன்னேன்..!!" என்று சமாளித்த அசோக், உடனே "தம்ப்பூ..!!!" குழைந்தவாறு அழைத்துக்கொண்டே மண்டியிட்டான். நின்றிருந்த தம்புவை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான். அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டவன், பிறகு லேசாக முகத்தை சுளித்தவாறே கேட்டான். "என்னடா தம்பு.. இன்னும் குளிக்கலையா நீ..??" "இல்ல சித்தப்பா..!!""ச்ச.. ஸ்மெல் பாய்.. காலைல எழுந்ததும் குளிக்கனும்னு தெரியாது..?? சித்தப்பாவை பாத்தியா.. அதுக்குள்ள குளிச்சுட்டு எப்படி ஃப்ரெஷா இருக்கேன் பாரு..!! இனிமே குளிக்காம வந்தேன்னா உனக்கு சாப்பாடு கெடயாது.. புரியுதா..??" அசோக் தம்புவை சொல்வது மாதிரி சொன்னாலும், மறைமுகமாக தன் அண்ணனைத்தான் குறிப்பிட்டான். ராஜேஷுக்கும் அது புரியாமல் இல்லை. தலையை ஒருபக்கமாக சாய்த்து தம்பியையே ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பாவை கிண்டலடிக்க அசோக் தன்னை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்று புரியாமல், "ம்ம்.. சரி சித்தப்பா.. இனி டெயிலி மார்னிங் குளிச்சுர்றேன்.!!" என்றான் தம்பு அப்பாவியாக சொன்னான். "ம்ம்.. குட்..!! இன்னைக்கு உனக்கு லீவா..??" "யெஸ் சித்தப்பா..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! நீ கிழிக்கிற கிழிக்கு உனக்கு சும்மா சும்மா லீவ் விட்ராணுகடா..!!" அசோக் சலிப்பாக சொல்ல, ராஜேஷால் அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "டேய்.. யாரைடா சொல்ற..??" என்று தம்பியை பார்த்து சீறினான். "ஏன்.. தம்புவைத்தான் சொன்னேன்..!!" அசோக் இன்னும் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டே சொன்னான். "இல்ல.. நீ என்னைத்தான் சொன்ன..!!" "குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுன்னு சொன்னா.. அதுக்கு நான் என்ன பண்றது..??" "ஏண்டா.. நீ கிழிக்கிற கிழிக்கே உனக்கு வாரத்துக்கு ரெண்டு நாளு லீவு விடுறானுக.. எனக்கு விட கூடாதா..??" "ஹ்ஹ.. நான் என்ன கிழிக்கிறேன்னு உனக்கு தெரியுமாக்கும்..??" "ஏன் தெரியாது..?? சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறவணுக எல்லாம் என்ன பண்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்டா..!!" "ஓ.. எங்க கொஞ்சம் சொல்லு.. பார்ப்போம்..!!" "சொல்றேன்..!! கிழிஞ்ச ஜீன்சும், சாயம்போன டி-ஷர்ட்டும் போட்டுக்கிட்டு.. காலேஜ் டூர் போறவனுகளாட்டம் கம்பெனிக்கு போக வேண்டியது..!! காலைல போனதுமே மொத வேலையா.. ஜிமெயில், யாஹூலாம் செக் பண்ண வேண்டியது.. ஃப்ரண்ட்சுக்கு மெயில் அனுப்புறது.. சேட் பண்ணுறது.. அப்புறம் ஃபேஸ்புக், ஆர்க்குட்னு எதையாவது தொறந்து வச்சுட்டு உக்காந்துக்க வேண்டியது.. ஹெட்ஃபோன் போட்டு பாட்டு கேட்டுக்கிட்டே, கிரிக்கெட் ஸ்கோர் ரெஃப்ரஷ் பண்ண வேண்டியது.. யூட்யூப் பாக்கவேண்டியது.. சாயந்திரம் ஆனதும் டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன்னு எதையாவது வெளையாட கெளம்பிட வேண்டியது..!! இதுக்கு நடுவுல ஒரு மணிநேரத்துக்கு ஒருதடவை ப்ரேக் வேற.. அப்படியே வேலை செஞ்சு களைச்சு போயிட்டாங்களாமாம்.!! மதியம் லஞ்ச்சுக்கு.. கோக் இல்ல பெப்சியை சப்பிக்கிட்டே.. பிஸ்ஸா இல்ல பர்கரை கடிக்க வேண்டியது.. 'ஹேய்.. ஐ ஹேட் ரைஸ்'யா..!!' அப்டின்னு இங்க்லீஷ்ல ஒருமணி நேரம் வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது..!! எப்போவாவது ரொம்ப போரடிச்சா.. ஒரு சேஞ்சுக்கு வேலை செய்ய வேண்டியது.. அதுவும் சுயமா கோட் அடிக்கிறது இல்ல.. கூகுள் சர்ச் பண்ணி.. என்ன வருதோ அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ண வேண்டியது..!! கூகுளும், காப்பி பேஸ்ட்டும் மட்டும் இல்லைன்னா.. உங்க நெலமைலாம் டப்பா டான்ஸாடும்டா..!! ஹ்ஹ.. எனக்கா தெரியாது.. நீங்க என்ன கிழிக்கிறீங்கன்னு..??" ராஜேஷ் எகத்தாளமாக சொன்னது அசோக்கிற்கு கொஞ்சம் எரிச்சலை மூட்டி விட்டது. ஆனால் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், கூலான குரலிலேயே அண்ணனிடம் கேட்டான். "எங்களை இவ்வளவு கொறை சொல்றியே.. நீ மட்டும் என்ன கிழிக்கிறியாம்..??" "ஹ்ஹ.. உங்களை மாதிரி அமெரிக்காகாரனுகளுக்கு நாங்க அடிமையா கெடக்கலடா.. ஐம் வொர்கிங் ஃபார் இன்டியன் கவர்ன்மன்ட்.. ஐம் வொர்கிங் ஃபார் ISRO ..!!" ராஜேஷ் பெருமையாக சொல்ல, அசோக் கேலியாக ஆரம்பித்தான். "ம்க்கும்.. எதுக்கெடுத்தாலும் இது ஒன்னை சொல்லிடு.. 'நான் ISROல வொர்க் பண்றேன்.. நான் ISROல வொர்க் பண்றேன்..'ன்னு.. என்னவோ டெயிலி ரெண்டு ராக்கெட்டும், நாலு சேட்டலைட்டும் செஞ்சு வானத்துல ஏவுறவன் மாதிரித்தான்..!! அங்க போய் ரெண்டும், நாலும் ஏழுன்னு தப்பு தப்பா அக்கவுண்ட்ஸ் எழுதப்போற.. அதுக்கு இப்படி ஒரு பில்டப்பு வேற..!! கணக்குப்புள்ளையா வேலை பாக்குறேன்னு டீசண்டா உண்மையை சொல்லி பழகு..!!" "என்னது..?? கணக்குப்புள்ளையா..??" ராஜேஷின் முகம் அஷ்ட கோணலானது."ஆமாம்.. கணக்கு எழுதுறவன் பேரு கணக்குப்புள்ளை இல்லாம.. கீரிப்புள்ளையா..??" என்று சீரியசான குரலில் சொன்ன அசோக் தம்புவிடம் குனிந்து, "தம்பு.. இனி உங்க மிஸ் 'வாட்ஸ் யுவர் ஃபாதர்..'னு கேட்டா.. 'மை பாதர் இஸ் எ கணக்குப்புள்ளை'ன்னு சொல்லணும்.. சரியா..??" என்றான். "ம்ம்.. சரி சித்தப்பா..!!" என்று தம்புவும் அப்பாவியாக தலையாட்டினான். "ஏய்.. உங்க சண்டைல ஏண்டா சின்னப்பையனை போட்டு இழுக்குற..??" அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த செல்வி இப்போது வாயை திறந்தாள். "ஏன்.. அப்பா என்ன பண்றார்னு அவனும் தெரிஞ்சுக்கட்டும்..!!" அசோக்கின் பதிலில் களைத்துப்போன செல்வி இப்போது கணவனிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள். "ஏங்க காலங்காத்தால இவன்கிட்ட போய் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க..??" "நான் என்ன வாயை கொடுத்தேன்.. அவன்தான் தேவையில்லாம வந்து வம்பு இழுக்குறான்..!!" ராஜேஷ் சின்னப்பிள்ளை மாதிரி சொன்னான். "நான் என்ன வம்பு இழுத்தேன்..??" அசோக் சீற்றமாக கேட்க, செல்வி இடையில் புகுந்து தடுத்தாள். "ஐயா.. சாமீ.. உங்களை யாரும் ஒன்னும் கொறை சொல்லல..!! ஆபீசுக்கு நேரம் ஆச்சுன்னு சொன்னீங்கள்ல.. கெளம்புங்க மொதல்ல..!!"

என்று அசோக்கை கையெடுத்து கும்பிட்டாள். அசோக் இப்போது நிதானித்தான். அண்ணனையும் அண்ணியும் ஒருமுறை மாறி மாறிப் பார்த்தான். இருவருமே நொந்து போனவர்கள் மாதிரி நின்று கொண்டிருந்தார்கள். அதைப்பார்க்க அவன் மனதுக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது. "ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!" என்று கெத்தாக சொன்னவன், தம்புவின் கன்னத்தை பிடித்து கிள்ளியவாறே, "ஸீ யு டா தம்பு.. சித்தப்பா ஆபீஸ் கெளம்புறேன்..!!" என்றுவிட்டு, உதடு குவித்து விசிலடித்தவாறே வீட்டை விட்டு வெளியேறினான்.