உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியர்களுக்கு ரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்துவருவது தெரியவந்திருக்கிறது.
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உலக மக்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்தபடி இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், உலக அளவில் பெண்களின் ரத்த அழுத்தம் சராசரியைவிட 2.7 மில்லி மீட்டர் பாதரச அளவு குறைந்து உள்ளது.
அதே சமயம் இந்தியப் பெண்களின் ரத்த அழுத்தம் சராசரியைவிட 2.4 மில்லி மீட்டர் பாதரச அளவு அதிகரித்து உள்ளது. அதேபோல், உலக அளவில், ஆண்களின் ரத்த அழுத்தம் சராசரியைவிட 2.3 மில்லி மீட்டர் பாதரச அளவு குறைந்தும், இந்திய ஆண்களின் ரத்த அழுத்தம் சராசரியைவிட 2.2 மில்லி மீட்டர் பாதரச அளவு அதிகரித்தும் உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு இறுதி வரை ஒரு கோடியே 39 லட்சம் இந்திய மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.