Pages

Wednesday, 9 May 2012

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்



கழுகு என்ற ஓர் புதிய படத்தில் முதல் பாடலான ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடல் வரிகளில் ஒரு சில வரிகள் பல இளைஞர்களை பார்த்து பல் இளிப்பது போன்று பாடலை எழுதியிருப்பார் பாடலாசிரியர்.

அந்த வரி யாதெனில்,
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குறான் அவன் செலவு பண்ண தான் ஒரு லூசு தேடுறான் ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறான் என்ற இந்த வரிகள் தான் அவை.சரி கல்லூரி வாழ்க்கையில் காதலை பற்றி பார்ப்போம்.கல்லூரியில் பலர் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக காதலித்தாலும்,சிலரோ தங்களது ஆண்மையையும்,அழகையும் காட்டும் வண்ணமே காதலிக்கின்றனர் என்பது மட்டும் நன்றாக தெரியும்.எல்லா வகுப்புகளிலும் குழுவாக மாணவர்கள் அமர்ந்து அவர்களது படிப்பை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ,அவர்கள் பழகிய அல்லது மடக்கிய பெண்களை பற்றி பேசாமல் இல்லை.மச்சான்,நான் நம்ம கிளாஸ் கவிதாவ மடக்கிட்டன்டா,பிகர் இப்ப என் கண்ரோல் என்பான் ஒருவன்.டேய் நீ என்னடா நம்ம சீனியர்ல பூஜா தெரியுமாடா?அதாண்டா பைக்குல வருவாலே அவளே தான்,இப்ப அவ எம் பிகர் மச்சி நான் என்ன சொன்னாலூம் செய்வா,இவள வச்சே இவ கிளாஸ் பிகர்கள கரெக்ட் பண்றேன் பாருடா என்பான் மற்றொருவன்.இப்படி பல பேர் தங்களின் பெண்களை மயக்கிய திறமையினை கூறிக்கொண்டும் அவர்கள் அதனை ஏதோ டாக்டர் பட்டம் வாங்கிய ரேஞ்சுக்கு பெருமை பீத்திக் கொள்வார்கள்.அதிலும் ஒருவன் இருப்பான் அமைதியாக யாரையும் ஏரெடுத்து பாராமல் படித்துக் கொண்டும் இருப்பான்.அந்த மாணவனுக்கு அந்த குழு மாணவர்கள் வைக்கும் பெயர்கள் அலாதியானவை. இவ்வாறான காதலை நாம் கல்லாரிகளில் மட்டுமே காண முடியும்.அதே போல் அந்த பெண்ணையும் படிக்க வைத்தும், அப் பெண்ணை நன்றாக வாழ வைக்க வேண்டுமே என்ற நோக்கில் அவனும் படித்து முன்னேறும் காதலனும்,காதலும் உண்டு.அப்ப எவனுமே உங்க அப்பன் ஆத்தாள காப்பாத்த காலேஜ் போகல என்ற இக்கதையை படிப்போரின் ஆதங்கம் எனக்கு புரியலாம்.ஆனால் என்னுடைய மற்றும் பிற கல்லூரியில் பயிலும் பல சகோதார்களுக்கு இது புரிவதில்லை.காதல் ஒரு அழகான வேதணை என்று ஷேக்ஸ்பியர் கூறினார்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் சில காதல்கள் உண்மையாக இருக்கலாம்.ஆனால் கல்லூரியில் பல காதல்கள் போலிகளாகவே வலம் வருகின்றன.நீங்களும் என்னை போல் கல்லூரியில் படிப்பவராக இருந்தால் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். இப்போது இன்னுமொரு பாடல் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாத